Published:Updated:

தசரா கொண்டாட்டம்... டெல்லியில் உச்சத்தை தொட்ட காற்று மாசுபாடு!

தசரா கொண்டாட்டம்... டெல்லியில் உச்சத்தை தொட்ட காற்று மாசுபாடு!
தசரா கொண்டாட்டம்... டெல்லியில் உச்சத்தை தொட்ட காற்று மாசுபாடு!

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா விழா நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மோசமான அளவிற்குச் சென்றிருக்கிறது. 

நேற்று முன்தினம் வட மாநிலங்களில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போது எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் மாசு தொடர்ச்சியாக கலந்துகொண்டே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் நேற்று டெல்லியில் காற்றில் மாசுபாடு அபாயக் கட்டத்தை நெருங்கக் காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். பொதுவாக Air Quality Index எனப்படும் காற்று தர அளவீட்டின் மதிப்பு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல நிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும். 200 தாண்டும்போது காற்றில் மாசு அதிகரிப்பதற்கான அளவீடாகக் கருதப்படும்.

நேற்று டெல்லியில் இருக்கும் குறிப்பிட்ட 31 பகுதிகளில் காற்று தர அளவீட்டின் மதிப்பு 200 தாண்டி இருந்தது. இரண்டு பகுதிகளில் மிக அபாய கட்டமாக 400 -ஐத் தாண்டி இருந்தது. ஒட்டு மொத்த டெல்லியின் சராசரி 337 -ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாகக் காற்று மாசுபாடு என்பது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அடுத்ததாக வரும் தீபாவளி பண்டிகையின் போதும் இது போன்ற நிலைமையை  டெல்லி நகரம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது.