Published:Updated:

கஜா புயலுக்குப் பலியான மான்கள்!

கஜா புயலுக்குப் பலியான மான்கள்!

கஜா புயலுக்குப் பலியான மான்கள்!

கஜா புயலுக்குப் பலியான மான்கள்!

கஜா புயலுக்குப் பலியான மான்கள்!

Published:Updated:
கஜா புயலுக்குப் பலியான மான்கள்!

கடந்த வாரம் நவம்பர் 11-ம் தேதி, வங்கக்கடலில் உருவான கஜா புயல், நேற்று (நவம்பர் 16) நள்ளிரவு 12.30 மணி அளவில் நாகப்பட்டினம் -வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினம் பகுதியில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. மேலும், பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நாகப்பட்டினம், கடலூர், எனப் பல ஊர்கள் இயல்புநிலையை இழந்து முடங்கியுள்ளன. இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயலுக்கு வன விலங்குகளும்கூட தப்பவில்லை. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் செத்து, கரை ஒதுங்கிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த இந்த மான்கள் அடித்துவரப்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயமும் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. காட்டுப் பன்றிகள், காட்டுக் குதிரைகள், புள்ளிமான்கள், கலைமான்கள், நரிகள் எனப் பல விலங்குகள் இறந்துள்ளன.

மான்கள், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்துள்ளன. 100 கி.மீ வேகத்திற்கும் மேலாக காற்று வீசியதால், அச்சத்தால் மான்கள் தொடர்ந்து ஓடியபடியே இருந்திருக்கும். அச்சம் மற்றும் தொடர் ஓட்டம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டதால்தான் மான்கள் இறந்திருக்கும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், இறந்த உடல்களை ஆய்வு செய்தால்தான் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும். மனிதர்களைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டநிலையில், விலங்குகளைக் காப்பாற்றவும் ஏதேனும் செய்திருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism