Published:Updated:

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!
மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் வீணாகக் கொட்டப்படுகின்ற மலர்கள் உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப் பயன்படுத்தும் செயல்திட்டம் துவங்கப்படவிருக்கிறது. ஏற்கெனவே, இரண்டு மாதங்களாகச் சோதனையின் அடிப்படையில் நடைபெற்றுவந்த இந்த மறுசுழற்சிமுறை முழுப்பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!

மதுரையில் அமைந்துள்ள பூமாலை வணிகவளாகப் பகுதியில் தினமும் சிலநூறு கிலோ மலர்க்கழிவுகள் கொட்டப்படுகின்றன. என்றைக்கேனும் அவற்றை மாநகராட்சி வாகனங்களில் ஊழியர்கள் வந்து அள்ளிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் தமிழக வேளாண்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இரண்டு தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து, கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான கட்டுமானப் பணிகளை வளாகத்தின் பின்பகுதியில் மூன்று மாதத்துக்கு முன்பாகத் தொடங்கியது. பணிகள் முடிவடைந்ததையொட்டி சோதனை முயற்சியாக 2 மாதங்களாய் ஏறக்குறைய 2,000 கிலோவரை மலர்க்கழிவுகள் உரமாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் எஸ்.பி.கோஷ் மதுரைக்கு வந்து இந்தத் திட்டத்தின் செயற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்தார். ஆல்டர் எனெர்ஜி அமைப்பின் தலைவர் சிவக்குமார், வேளாண்துறை நிர்வாகி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் உடன் இருந்தனர். 

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!

ஆய்வுக்குப் பின்னர் பேசிய எஸ்.பி.கோஷ், ``கழிவுகளை மறுசுழற்சி செய்கிற இதுபோன்ற அற்புதமான திட்டங்கள், நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது. தொடர்ந்து தமிழகத்திலும் இந்தத் திட்டம் வந்திருப்பது, மகிழ்ச்சியைத் தருகின்றது. இதன்மூலம் நாள்தோறும் இங்கு டன் கணக்கிலான கழிவுகளைக் கூட உரமாக்கி வீடுகளிலும், தொழிலகங்களிலும் பயன்படுத்தலாம்" என்றார்.

இந்த `வேஸ்ட் கார்ட்' திட்டத்தின் நிர்வாகி அசோக்குமார் திட்டச் செயல்முறைகள் குறித்து விளக்கினார். மேலும், ``இந்தத் திட்டத்துக்காக மக்கும் கழிவுகளை மட்டும் தரம் பிரித்து வந்து அளிக்குமாறு இங்குள்ள வியாபாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரை நகர் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளதாலும், ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட உள்ளதாலும், இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் கணிசமாகக் குறைந்து வருகின்றது" என்றார்.

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!

வியாபாரிகளிடம் இதுகுறித்து நாம் விசாரித்ததில், ``நாங்க வழக்கமா கொட்டுற எடத்துல குப்பைங்கள போய்ப் போடுவோம். ஆனா, அங்க என்ன நடக்குதுன்னு இப்போவரைக்கும் தெரியாதுங்க. யாரும் எங்கக்கிட்ட எதுவுமே வந்து சொல்லலை. சொன்னா தானங்க நாங்க அதுக்கேத்த மாதிரி எங்களோட ஒத்துழைப்பைத் தர முடியும்?" என்றனர். அதோடன்றி, தடை உத்தரவால் இப்பகுதியின் பிளாஸ்டிக் உபயோகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என, இங்கு வரும் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

மதுரை பூமாலை வணிக வளாகத்தில் மலர் கழிவுகளை உரமாக்கும் `வேஸ்ட் கார்ட்' திட்டம்!

இந்த மறுசுழற்சித் திட்டம் குறித்து அறிந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, `` 'வேஸ்ட் கார்ட்', ஆரோக்கியமான திட்டம்தான் என்றாலும், எல்லா நிலைகளிலும் இத்திட்டத்தைக் கொண்டு சேர்த்து முழுமைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்து, திட்டத்தின் நோக்கம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டியது இத்திட்டத்தைச் சார்ந்துள்ள அனைவரின் கடமையுமாகும்!" என்றார்.