Published:Updated:

`ஆபத்தான ஆர்சனிக் நச்சுப்பொருள் ’- பாதுகாப்பற்ற நிலத்தடி நீரைக்கொண்ட பஞ்சாப்!

`ஆபத்தான ஆர்சனிக் நச்சுப்பொருள் ’- பாதுகாப்பற்ற நிலத்தடி நீரைக்கொண்ட பஞ்சாப்!
`ஆபத்தான ஆர்சனிக் நச்சுப்பொருள் ’- பாதுகாப்பற்ற நிலத்தடி நீரைக்கொண்ட பஞ்சாப்!

ஞ்சாப்  மாநிலத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், இந்த நீரில் அளவுக்கு மிஞ்சிய ஆர்சனிக் என்கிற நச்சுப்பொருள் கலந்துள்ளதாகவும் புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பாயும் ரவி நதியின் பகுதியில் இருக்கும் நிலத்தடி நீரில் WHO (உலக சுகாதார நிறுவனம்) கூறுவதைவிட 23 சதவிகிதம் அதிகமாக ஆர்சனிக் கலந்துள்ளதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தியாவில் 199 கிராமங்களில் 13,000 கிணறுகளிலும், பாகிஸ்தானில் 184 கிராமங்களில் 17,567 கிணறுகளிலும் இந்த ஆய்வு நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக ஆர்சனிக் கலந்துள்ள நீரைப் பயன்படுத்துவதால் உடலில் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும் என்றும், உடல் உறுப்புகள் செயலிழக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆய்வு நடத்தப்பட்ட கிணறுகளில் சிலவற்றில் ஆர்சனிக் வழக்கமான அளவைவிட 50% அதிகமாகக் காணப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

 கங்கை-பிரம்மபுத்திரா பகுதியில் ஆர்சனிக் மிகப்பெரிய பாதிப்பாகக் கருதப்படும் நிலையில் ஜார்கண்ட், அசாம், மணிப்பூர், உத்தரப்பிரதேசம், மேற்குவங்காளம், பீகார், சத்திஸ்கர் மாநிலங்களிலும் இந்த ஆர்சனிக் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இப்பொழுது பஞ்சாப் மாநிலத்திலும் ஆர்சனிக் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆர்சனிக் பாதிப்புக்கான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆய்வுகள் மேலும் தொடரும் என்றும் இந்த ஆய்வை நடத்திய TERI School of Advanced Studies, புதுதில்லி, The Quaid-i- Azam University, இஸ்லாமாபாத் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நிலத்தடி நீரில் யுரேனியம் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கத்து.