Published:Updated:

ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி -2 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி -2 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு
ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி -2 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

கடுமையான வறட்சியின் காரணமாக, ஆப்கானிஸ்தானில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. தலைநகரான காபூல் உட்பட, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் நீருக்காக கேன்களுடன், கழுதைகளுடன் பல மைல் தூரம் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் சராசரி மழைப்பொழிவு அளவுக்கும் குறைவாகப் பெய்துள்ளது. இந்த வருடம் அந்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. 34 மாகாணங்களில் பெரும்பான்மையான மாகாணங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட 20 மாகாணங்களில், சுமார் 15 மில்லியன் மக்கள் விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழில் வாய்ப்புகளை நம்பியிருக்கின்றனர். இதில், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சி காரணமாகக் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில், பயிர் உற்பத்தியும் வறட்சியில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவல்களின்படி, இரண்டு மில்லியன் ஆப்கானியர்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ச்சியான அரசியல் மோதல்களால் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,75,000 மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.