Published:Updated:

மனிதர்களின் இடைஞ்சல்? - மகாராஷ்டிராவில் மற்றுமொரு புலி இறப்பு

மனிதர்களின் இடைஞ்சல்? - மகாராஷ்டிராவில் மற்றுமொரு புலி இறப்பு
மனிதர்களின் இடைஞ்சல்? - மகாராஷ்டிராவில் மற்றுமொரு புலி இறப்பு

மகாராஷ்டிராவின் பந்தரா மாவட்டத்தில் உள்ள உம்ரே பானி கார்ந்தாலா வனவிலங்கு சரணாலயத்தில் (Umred-Pauni-Karhandla Wildlife Sanctuary) நேற்று காலை புலி ஒன்று இறந்துள்ளது.

file Photo

நேற்று காலை சுற்றுலாப் பயணிகள் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றிப் பார்க்கும்போது புலி அசைவற்றுக் கிடப்பதைப் பார்த்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து புலியின் இறப்பை உறுதி செய்துள்ளனர். இறப்புக்கான காரணம் பின்னர்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உம்ரே பானி கார்ந்தாலா வனவிலங்கு சரணாலயமானது நாக்பூர் மற்றும் பாந்தரா மாவட்டங்கள் முழுக்க பரவியுள்ளது. நேற்று இறந்த இந்தப் புலியைச் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் மகாராஷ்டிராவில் 20 புலிகள் உயிரிழந்துள்ளன. அதிக புலிகள் உயிரிழந்த மாநிலங்களின் எண்ணிக்கையில் மகாராஸ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 23 புலிகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் பல புலிகள் சாலை விபத்தில் இறந்துள்ளன. நேற்று இறந்த புலியின் இறப்புகூட மனிதர்களின் இடைஞ்சலால் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் நிறைய புலிகள் காப்பகங்களும் தேசிய பூங்காக்களும் நிறைந்திருக்கின்றன. 165-க்கும் மேற்பட்ட புலிகள் இந்தக் காப்பகங்களில் உள்ளன.