Published:Updated:

`போகியன்று டயர், ட்யூப், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கைது நடவடிக்கை!’ - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

போகிப் பண்டிகை அன்று பழைய டயர், ட்யூப் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இயக்குநர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ``இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் காவல்துறையினருடன் இணைத்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணியை மேற்கொள்வார்கள். போகிப் பண்டிகை அன்று டயர், டுயூப் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரிப்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மேலும், ``சென்னை மாநகரத்தின் காற்றின் தரத்தினை கண்காணிக்கும் பொருட்டு, போகிப் பண்டிகைக்கு முதல் நாளும் மற்றும் போகிப் பண்டிகை நாளன்றும், 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தினை கண்காணிக்கவும், காற்றின் மாதிரிகள் சேகரிப்பு செய்து ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த ஆய்வின் முடிவில் காற்றின் தர அளவு வாரியத்தின் இணையதளத்தின் பதிவேற்றம் செய்யப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.