Published:Updated:

`என் மனத் திருப்திக்காகத்தான் விற்பனைக்கு அல்ல!'- பனைத் தொழிலைக் காக்க விவசாயியின் புதிய முயற்சி

`என் மனத் திருப்திக்காகத்தான் விற்பனைக்கு அல்ல!'- பனைத் தொழிலைக் காக்க விவசாயியின் புதிய முயற்சி
`என் மனத் திருப்திக்காகத்தான் விற்பனைக்கு அல்ல!'- பனைத் தொழிலைக் காக்க விவசாயியின் புதிய முயற்சி

ழிந்துவரும் பனைத் தொழிலைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பனைப் பொருள்களால் செய்யப்பட்ட கலைப் பொருள்களைக் காட்சிப்படுத்தி, பனையின் முக்கியத்துவம்குறித்த விழிப்பஉணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார் அவர். 

`என் மனத் திருப்திக்காகத்தான் விற்பனைக்கு அல்ல!'- பனைத் தொழிலைக் காக்க விவசாயியின் புதிய முயற்சி

தூத்துக்குடி  மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்தவர், பால்பாண்டி. இவர், பனை ஏறுதல் மற்றும் விவசாயம்  உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். பனைப் பொருள்களை வைத்து கலைப் பொருள்கள் செய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். பனை ஓலை மற்றும் நார்களின் உதவியோடு கட்டில் முடைவது, பாய் முடைவது, பெட்டி செய்வது உட்பட, பலவற்றைச் செய்துவந்துள்ளார். பனை ஓலை உதவியோடு கலைப்பொருள்களைச் செய்து காட்சிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படவே, அதற்கான வேலையில் முழு வீச்சில் இறங்கினார்.  முதற்கட்டமாக, தாஜ்மகாலைப் பல தூண்களின் உதவியோடு வடிவமைத்து, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் 3 அடி உயரத்துக்கு உருவாக்கியுள்ளார். தாஜ்மகால், பளிங்குக் கற்களால் ஆனது என்பதால், வெள்ளை நிற பெயின்டைப் பயன்படுத்தியுள்ளார். முன்பு, வர்ணம் பூச அவுரி இலையைப் பயன்படுத்தி சாயம் உருவாக்குவார்கள். தற்போது அந்த வசதி வெகுவாகக் குறைந்துள்ளதால், பெயின்ட் உதவியோடு கலைப்பொருள்களை வண்ணமயமாக்கியுள்ளார். 

கலைப்பொருள்களின் பட்டியல்; கோயில் கோபுரம், கிறிஸ்தவ ஆலயம், மாட்டுவண்டி, யானை, பாம்பு, கிலுக்கு, குடுவை, கல்லாப்பெட்டி, மிளகுப் பெட்டி, செருப்பு, வில்வண்டி என நீண்டுகொண்டே செல்கிறது. 

“காலையில், விவசாயம் பார்க்க தோட்டத்துக்குச் சென்றுவிடுவேன். மாலையில், பனை ஓலையை வைத்து பல பொருள்களைச் செய்வேன். இது, முழுக்கமுழுக்க என் மனத் திருப்திக்காகத்தான், விற்பனைக்கு அல்ல. தாஜ்மகால் செய்வதற்கு 10 நாள்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கவனம் சிதறாது செய்து முடிக்கவேண்டும். தற்போது, பலரும் வந்து பொருள்களைப் பார்த்துப் பாராட்டிச் செல்கின்றனர்.

`என் மனத் திருப்திக்காகத்தான் விற்பனைக்கு அல்ல!'- பனைத் தொழிலைக் காக்க விவசாயியின் புதிய முயற்சி

தற்போது, பனையேறும் தொழில் நலிவடைந்துவருகிறது. பனை சார்ந்த பொருள்களின் பயன்பாடு தற்போது அதிகரிக்கத் தொடங்கினாலும் போலிகளின் எண்ணிக்கை பெருக்கமடைந்துவருகிறது. பனையேறும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. பனையின் பயன்பாடுகுறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 

பனை ஓலை மற்றும் நார் மூலமாகப் பல பொருள்களைச் செய்து காட்சிக்கு வைத்துள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உட்பட, பல இடங்களுக்கு இந்தப் பொருள்களைக் கொண்டுசென்று காட்சிக்கு வைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். அதோடு, நலிந்துவரும் பனைத் தொழிலை வலுப்படுத்த அரசு பல உதவிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்” என்கிறார், பால்பாண்டி.