Published:Updated:

'மகாசேன்’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை; 48 மணி நேரத்தில் மழை!

'மகாசேன்’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை;  48 மணி நேரத்தில் மழை!
'மகாசேன்’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை; 48 மணி நேரத்தில் மழை!
'மகாசேன்’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை;  48 மணி நேரத்தில் மழை!

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மகாசேன்’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 1700 கீலோ மீட்டர் தொலைவில் இந்த மகாசேசன் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இந்த புயல் வங்கதேசம் -மியான்மர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்காக புயல் நகரும் என்பதால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

##~~##
புயல் சின்னத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அந்தமானில் மழை பெய்யும் என்றும்,  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.