Published:Updated:

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு: ரமணன் சொல்கிறார்

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு: ரமணன் சொல்கிறார்
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு: ரமணன் சொல்கிறார்
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு: ரமணன் சொல்கிறார்

சென்னை: மகாசேன் புயல் கரையை கடந்த பிறகு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாசென் புயல் மத்திய மேற்கு வங்க கடலில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது என்றார்.

இது வடக்கு நோக்கி நகர்ந்து வங்க தேசம், மியான்மர் அருகே 17ஆம் தேதி கரையை கடக்கும் என ரமணன் தெரிவித்தார்.

புயல் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து உள்ளது என்றும் அதிகபட்சமாக போச்சம்பள்ளி, கரூர், ராசிபுரம், பாப்பிரெட்டி பட்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் ரமணன் கூறினார்.

##~~##
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் நகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மகாசேன் புயல் கரையை கடந்த பிறகு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ரமணன் கூறினார்.