Election bannerElection banner
Published:Updated:

ஆண்டுக்கு 8.4 ஜிகா டன்கள் மீத்தேனை வெளியிடும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! - ஆய்வில் அதிர்ச்சி

ஆண்டுக்கு 8.4 ஜிகா டன்கள் மீத்தேனை வெளியிடும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! - ஆய்வில் அதிர்ச்சி
ஆண்டுக்கு 8.4 ஜிகா டன்கள் மீத்தேனை வெளியிடும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! - ஆய்வில் அதிர்ச்சி

கார்பன் டை ஆக்சைடை விட மீத்தேன் வெளியேற்றம் என்பது இன்னும் ஆபத்தானது. ஏனென்றால், வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மீத்தேனின்  ஒவ்வொரு மூலக்கூறும்,  குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வளிமண்டலத்திலேயே இருக்கக்கூடியவை.

`கார்பனை உறிஞ்சக்கூடிய வேலையைச் செய்யவேண்டிய பள்ளிக்கரணை சதுப்புநிலம், அதிகமாக மீத்தேனை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது' என அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

உலக சதுப்புநில தினமான பிப்ரவரி 2 அன்று, இதுகுறித்து சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் எனப் பலரும் சதுப்பு நிலத்தை மீட்டெடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைப் பேசிவருகின்றனர். தற்போது, பள்ளிக்கரணை சதுப்புநிலம் கார்பன் உறிஞ்சுவதைவிட கார்பனை வெளியேற்றுதலிச் செயல்படுகிறது. ஆய்வுகளின் அடிப்படையில், வருடத்துக்கு 18.4 ஜிகா டன்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது பள்ளிக்கரணை சதுப்புநிலம்.  அதே நேரத்தில், கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் விகிதமானது வருடத்துக்கு 0.0020 ஜிகா டன்கள் மட்டுமே என்கிறார், ஆய்வை மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றத்திற்கான மையத்தின் முன்னாள் இயக்குநர் ராமச்சந்திரன்.

மேலும், கார்பன் டை ஆக்சைடை விட மீத்தேன் வெளியேற்றம் என்பது இன்னும் ஆபத்தானது. ஏனென்றால், வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மீத்தேனின்  ஒவ்வொரு மூலக்கூறும்  குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வளிமண்டலத்திலேயே இருக்கக்கூடியவை. பசுமை இல்ல வாயுக்களில் சக்தி வாய்ந்த வாயு மீத்தேன். உலக அளவில் மீத்தேன் வெளியேற்றம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் இயல்புத்தன்மை மாறி, இவ்வளவு மோசமான விளைவுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாகக் கருதப்படுவது,  50 வருடங்களாகக் கொட்டப்படும் பள்ளிக்கரணை குப்பைக் கிடங்குதான். மீத்தேன் வெளியேறுவதால்தான் அங்கு அடிக்கடி நெருப்பு பற்றிக்கொள்வது தெளிவாகியுள்ளது. மேலும் ஐ.டி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் எனப் பல ஆக்கிரமிப்புகளாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பு குறைந்துவிட்டது. 1990-களில் 6000 ஹெக்டேர் பரப்பளவு இருந்த பள்ளிக்கரணை சதுப்பநிலம், தற்போது 690 ஹெக்டேர்தான் உள்ளது. உயிரி பல்வகைத்தன்மைக் கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பல்வேறு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இதில் வேலை செய்துவருகின்றனர். 


 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு