Published:Updated:

மாடு இனப்பெருக்கத்துக்காக 'டூடர்' அப்ளிகேஷன் - இங்கிலாந்தில் அசத்தல் முயற்சி!

துரை.நாகராஜன்
மாடு இனப்பெருக்கத்துக்காக 'டூடர்' அப்ளிகேஷன் - இங்கிலாந்தில் அசத்தல் முயற்சி!
மாடு இனப்பெருக்கத்துக்காக 'டூடர்' அப்ளிகேஷன் - இங்கிலாந்தில் அசத்தல் முயற்சி!

இப்போது எதற்கெடுத்தாலும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி தனது தேவையில் முக்கால்வாசியை நிறைவு செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். இதனால் நன்மைகள் உருவாவதைத் தொடர்ந்து தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், தீமைகளைத் தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் நன்மைகளே அதிகம். விவசாயம், ராணுவம், செய்தி தொடர்பு, உணவு, விளையாட்டு உள்ளிட்ட தேவைகளுக்காக பல அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. ஆனால், மாடுகளின் இனப்பெருக்கத்தை எளிதாக்குவதற்காக ஒரு அப்ளிகேஷன் வெளிவந்துள்ளது. 

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெக்டேர் அக்ரிடெக்  லிமிடெட் (Hectare Agritech Limited) எனும் வேளாண் நிறுவனம், டூடர் (Tudder) என்ற செயலியை கால்நடைகளின் இனப்பெருக்கத்துக்காக அறிமுகம் செய்துள்ளது. இது முழுவதுமாக மாடுகளின் இனப்பெருக்கம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் செயலியாகும். 

இந்த அப்ளிகேஷன் மூலமாகப் பசு மற்றும் காளை மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் எளிமையாக தங்கள் கால்நடைகளின் இனப்பெருக்கத்துக்கான ஜோடியைக் கண்டறியும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் 42,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தவிர, தங்களிடம் உள்ள கால்நடைகளின் விவரங்களைப் பதிவேற்றி இருக்கின்றனர்.

அதனால், டூடர் செயலி மூலமாக இனப்பெருக்கத்துக்கான மாடுகளைத் தேடும்போது இணை சேரும் மாட்டின் புகைப்படம், வயது, இருப்பிடம் போன்ற விவரங்கள் முழுமையாகக் கிடைக்கும். இதுபோல தங்கள் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள இணைகளைத் தேர்ந்தெடுக்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அப்ளிகேஷனில் மாடுகளைத் தேர்வு செய்யும்போது மாடுகளின் இனப்பெருக்கம் செய்யும் ஒலி கேட்கும். 

தமிழ்நாட்டில் டூடர் போன்ற அப்ளிகேஷன்கள் இருந்தால் நாட்டு மாடு இனங்களை எளிதாக இனப்பெருக்கம் செய்து, நாட்டினங்களைப் பரப்பலாம்.