Published:Updated:

சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு!

சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு!
சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு!

திருவில்லிபுத்தூர் அருகே, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் வசித்துவரும் வன உயிரினங்களைக் கணக்கெடுப்பு நடத்தி, தாங்கள் கண்டறிந்த பறவைகள், விலங்குகள்குறித்த விவரங்களைக் கல்லூரி மாணவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. யானை, காட்டெருமை, புலி, மான் வரையாடு உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. வன உயிரினங்கள்குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் என்னென்ன உயிரினங்கள் உள்ளன, அவற்றின் நடமாட்டத்தைக் கண்டறிவதுகுறித்து அறிந்துகொள்வதற்காக, இந்தச் சரணாலயப் பகுதியில் வனவிலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 40 பேர், வன உயிரினங்களை ஆய்வுசெய்யும் பணியில் ஈடுபட்டனர். உயிரினங்களின் கால்தடம், ஒலி, எச்சம், நடமாட்டம் ஆகியவற்றை சேகரித்துக்கொண்டு, வன உயிரினங்களை மாணவர்கள் கண்டறிந்தனர்.

மாணவர்கள் ஆய்வுக்குச் சென்றபோது, அங்கே இருந்த பறவைகள், விலங்குகள், பூச்சிகள் அனைத்தும் பயந்து ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு ஓடின. மாணவர்கள் அனைவரும் தாங்கள் கண்டறிந்த உயிரினங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

'வனப்பகுதிக்குள் வசிக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட கூடியிருக்கிறதா அல்லது குறைந்துள்ளதா என்பது குறித்த விவரம் இனிமேல்தான் தெரியும்' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.