Election bannerElection banner
Published:Updated:

``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்

``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்
``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்

இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இந்தியா தன் சுற்றுச்சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டதாகப் பாகிஸ்தான் ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளது. பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்குவதாகக் கூறி இந்திய விமானப்படை வீசிய ஆயிரம் கிலோ குண்டு பாகிஸ்தானின் பைன் மரங்களை அழித்துவிட்டதாகவும் இது சூழலியல் தீவிரவாதம் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளது. 

Photo Courtesy: Asif Shahzad/Reuters

இந்திய விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்குப் பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற குறுநகரத்தின்மீது குண்டு வீசியது. இந்திய-பாகிஸ்தான் எல்லையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாலகோட்.  அங்கிருந்த தீவிரவாத முகாமைத் தாக்கி நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றதாக இந்திய அரசு பிரகடனப்படுத்தியது. ஆனால், அப்படிப்பட்ட எந்த முகாம்களும் அங்கு இல்லையென்றும் இந்தக் குண்டுவெடிப்பால் ஒரேயொரு பெரியவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் தெரிவித்தது பாகிஸ்தான் தரப்பு. அந்நாட்டு காலநிலை மாற்றம் அமைச்சர் மாலிக் அஸ்லாம், ``இந்திய விமானப்படை எங்கள் வனப்பகுதிகள் மீது குண்டுவீசி அங்கு சூழலியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அங்கு நடந்தது சூழலியல் தீவிரவாதம். இது தொடர்பாக ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளோம்" என்று ராயிட்டர்ஸ் என்ற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்று அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.

``ராணுவ நடவடிக்கைகளாகவே இருந்தாலும் சுற்றுச்சூழலைப் பாதிப்பதுபோல் நடந்துகொள்வது சர்வதேச சட்டங்களின்படி குற்றம்" என்கிறது ஐ.நா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு