Published:Updated:

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

நீர் மேலாண்மை

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

மிழகமெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் விவசாயிகளை வாட்டி வதைக்கிறது. சில இடங்களில் கால்நடைகளுக்கே தண்ணீர் கிடைப்பது பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. ஆங்காங்கே ஒன்றிரண்டு மழை பெய்தாலும் இன்னும் தண்ணீர்ப் பஞ்சம் முழுமையாகத் தீர்ந்துவிடவில்லை. 

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் வறட்சியை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதன்மூலம் நீரைச் சேமிப்பதற்கான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. 2015-ம் ஆண்டுச் சென்னை பெருவெள்ளத்துக்குப் பிறகு வாசகர்களுடன் இணைந்து விகடன் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்கிற அறத்திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி ஆகிய மூன்று ஏரிகளைத் தூர்வாரி, சீரமைத்து அப்பகுதி மக்களிடம் ஒப்படைத்தது. இதுகுறித்துப் பசுமை விகடன் இதழில் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம்.

இதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தும் பொருட்டு, கரைகளில் கல் பதிக்கும் பணிகள் (Revetment Work) ஆனந்த விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 71 ஏக்கர் பரப்பளவில் 1.3 கிலோமீட்டர் தூரம் கரைகளைக் கொண்ட நரியம்பாக்கம் ஏரியில் கல்பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

கடந்த ஆண்டே இதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் தொடங்கும் நேரத்தில் மழை பெய்ததால், பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரின் அனுமதியோடு தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில நாள்களில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். இதன்மூலம் நரியம்பாக்கம் பகுதியில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடையும். இந்தச் சீரமைப்பின் மூலம் 60 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கால்நடைகள், பறவைகள், சிறுவிலங்குகள் ஆகியவற்றின் நீர்த்தேவையும் உறுதியாகும். 

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

இதுகுறித்து நரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் பேசும்போது, “2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது நரியம்பாக்கம் ஏரியோட கரை உடைஞ்சதால, ஏரிக்குக் கீழே இருந்த நிலங்கள்ல பயிர் செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் எல்லாம் சேதமடைஞ்சு போச்சு. கடந்த 50 வருஷமா ஏரியை யாரும் சரியா பராமரிக்கல. அதனாலதான் கரையெல்லாம் உடைஞ்சு போச்சு. 2016-ம் வருஷம் விகடன் குழுமத்தோட வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமா இந்த ஏரியைத் தேர்வு செஞ்சு, ஏரியில இருந்த முட்புதர்களையெல்லாம் நீக்கி, ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்தினாங்க. அதுமூலமா கடந்தாண்டு கோடைக் காலத்துல தண்ணி கிடைச்சது. இந்தமுற மழைக் குறைவுங்கறதால, தண்ணி இல்ல. ஆனா, இந்தக் கரையைப் பலப்படுத்தினா அடுத்து கிடைக்கிற மழையில இன்னும் கூடுதலா தண்ணியைச் சேமிக்க முடியும். இந்தத் தண்ணி விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படும். அதோட இந்தப் பகுதியில கால்நடைகள் அதிகம். அதுகளுக்கு வருஷம் பூரா தண்ணி கிடைக்கும். 

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

ஏரியோட கரையில கல் பதிக்கிறதால, இது ஒரு சாலையாகவும் பயன்படும். மழை பெய்ஞ்சா கரையில மணல் மூட்டைகளை வெச்சு அடைக்க வேண்டியிருக்கும். இனி, அந்தப் பிரச்னை எங்களுக்கு இருக்காது” என்றார் உற்சாகமாக.  

நிலம்... நீர்... நீதி! - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..!

வாசன் அறக்கட்டளை சார்பாக நீர்நிலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருபவர், நரியம்பாக்கம் ஏரியின் பணிகள் குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. அதேசமயம் கரை பலமில்லாமல் இருப்பதால் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை. கரையைப் பலப்படுத்தினால்தான் நீரின் கொள்ளளவை அதிகரிக்க முடியும். தற்போது 8 அடி உயரமுள்ள கரையை 12 அடியாக உயர்த்திப் பலப்படுத்தி வருகிறோம். இப்படிக் கரையைப் பலப்படுத்துவதால் நீரின் கொள்ளளவை அதிகரிப்பதோடு, நீர்க்கசிவையும் தடுக்க முடியும். அதோடு ஏரிக்கரையின் மொத்த நீளமான 1,382 மீட்டர் தூரத்திற்கு 8 அங்குலத்திற்கு கான்கிரீட் பிளாக் அமைக்கிறோம். ஏழு இடங்களில் ஏரிக்கான நீர்வரத்து உள்ளது. அந்த இடங்களும் வலுவிழந்து உள்ளது. முதல்கட்டமாக ஏரிக்கரையில் உள்ள பணிகளை முடித்துவிட்டு, அடுத்து நீர் உட்புகக்கூடிய பகுதிகளையும் கான்கிரீட் பிளாக் கொண்டு பலப்படுத்த உள்ளோம். இதன்மூலம் ஏரிக்கான நீர்வரத்தும் சீராக இருக்கும்” என்றார் உற்சாகத்துடன்.

நீர்நிலைச் சீரமைப்பில் விகடன் முன்னெடுக்கும் பணிகளுக்குத் தாராளமாக நிதியை அள்ளி வழங்கி, இப்பணியைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு நன்றி!

விகடன் குழு, படங்கள்: தே.அசோக்குமார், பெ.ராக்கேஷ்