Published:Updated:

நாகை கொள்ளிடம் ஆற்றின் அருகே கொட்டப்படும் குப்பை குவியல்! - மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் கோரிக்கை

நாகை கொள்ளிடம் ஆற்றின் அருகே கொட்டப்படும் குப்பை குவியல்! - மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் கோரிக்கை
நாகை கொள்ளிடம் ஆற்றின் அருகே கொட்டப்படும் குப்பை குவியல்! - மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் கோரிக்கை

கொள்ளிடத்தில் சாலையோரம் எரிக்கப்படும் குப்பையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்  எழுந்துள்ளது.

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி ரயில்பாலம் அருகில் தினந்தோறும்  சுமார் 20 கிராமங்களிலிருந்து கொண்டு வரப்படும்  குப்பைகளை  கொட்டி  வருகிறார்கள். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளோடு, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள்  இறந்த விலங்குகளின் அழுகிய உடல்கள்,  இவற்றையும் சேர்ந்து ஒரே இடத்தில் கொட்டப்பட்டு தினந்தோறும் எரிக்கப்படுகிறது. இதனால் எந்த நேரமும் துர்நாற்றத்துடன்  கரும்புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்த புகையை  ஆற்றங்கரை சாலை வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் சுவாசிக்க  வேண்டியுள்ளது.

"இந்தப்  புகையை சுவாசிப்பதால்  நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகள் பாதிப்பு ஏற்படுவதோடு, கேன்சர் போன்ற  கொடியநோய்கள்  வருவதற்கும் வாய்புள்ளது என்றும் நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும்" என்றும் வட்டார மருத்துவ அலுவலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்தும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கரையோரம்  குப்பைகள் கொட்டப்பட்டு தினந்தோறும் எரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.மேலும் பொதுப்பணித்துறை சார்பிலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.எனவே,20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே குப்பைகளை குவியலாக கொட்டி எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம்  பகுதி மக்கள்  மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.