Published:Updated:

``16 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த க்ரெட்டா துன்பர்க்!” - நோபல் பரிசுக்கு பரிந்துரை

``16 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த க்ரெட்டா துன்பர்க்!” - நோபல் பரிசுக்கு பரிந்துரை
``16 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த க்ரெட்டா துன்பர்க்!” - நோபல் பரிசுக்கு பரிந்துரை

2019-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி க்ரெட்டா துன்பர்க் (Greta Thunberg) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

க்ரெட்டா துன்பெர்க் காலநிலை மாற்றத்துக்கெதிராக பள்ளி மாணவ மாணவிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்ட இயக்கத்தை நிறுவியவர். க்ரெட்டா துன்பெர்க் தனி ஆளாகவே போராட்டத்தைத் தொடங்கினார். வாரத்தின் எல்லா நாள்களும் பள்ளி செல்லும் அவர் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்குச் செல்லாமல் சுவீடன் பாராளுமன்றத்துக்கு எதிராக நின்று காலநிலை மாற்றம் குறித்தும் அதை முறையாக நடவடிக்கை எடுக்காத அரசு குறித்தும் பேசுவார். தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டார் க்ரெட்டா துன்பெர்க். உலகின் பல்வேறு இடங்களில் உள்ள மாணவர்கள் இதனால் ஈர்க்கப்பட்டனர். அவர்களும் பள்ளிகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்தனர். காலநிலை மாற்றத்துக்கெதிராக மாபெரும் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. 

``நாம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளைச் செய்யவில்லையெனில் அவை போர், நாடுகளிடையிலான பிரச்னை, அகதிகள் என மிகப்பெரிய அழிவுக்கு வித்திடும். அதனால்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு க்ரெட்டாவை நாங்கள் பரிந்துரைத்தோம்" என்கிறார் நார்வே சோசலிஸ்ட் எம்.பி. ஃப்ரெடி ஆண்ட்ரே ஓஸ்ஸ்டெகார்ட் (Freddy André Øvstegård).

மேலும் அவர் கூறுகையில், ``க்ரெட்டா உருவாக்கியுள்ள மிகப்பெரிய இயக்கம் உலக அமைதிக்கான முக்கிய பங்காற்றக் கூடியது" என்கிறார். க்ரெட்டாவுக்கு விருது பரிந்துரை செய்யப்பட்டதை இன்று அவர் விடுத்திருக்கும் அழைப்பு இன்னும் முக்கியமானது. உலகம் முழுவதும் 105 நாடுகளில் உள்ள 1659 நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதியில் இறங்கியுள்ளனர். இதுவரை அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களிலேயே இது மிகப்பெரியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு எதிராகச் சாவல் விட்டு க்ரெட்டா பேசியது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றத்துக்கெதிராக ஒவ்வொரு நாட்டின் அரசும் வேகமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய பேசுபொருள். அமைதிக்கான நோபல் பரிசு க்ரெட்டாவுக்கு வழங்கப்பட்டால் அவர்தான் உலகிலேயே இளவயதில் நோபல் பரிசு பெற்றவராக இருப்பார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு 17 வயதில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 301 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.