Published:Updated:

பறக்கும் விவசாயிகளே சிட்டுக் குருவிகள்... - ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் புது முயற்சி!

பறக்கும் விவசாயிகளே சிட்டுக் குருவிகள்... - ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் புது முயற்சி!
பறக்கும் விவசாயிகளே சிட்டுக் குருவிகள்... - ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் புது முயற்சி!

மனிதர்களுடன் இயைந்து வாழும் பறவை இனங்களுள் ஒன்று சிட்டுக் குருவி. வீட்டின் கூரைகளில் கூடுகள் கட்டி சுற்றுப் பகுதிகளில் உணவு தேடி வாழும் தன்மைகாெண்டது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள் தாெகை பெருக்கம், அதிகரித்துவரும் கட்டடங்கள், தாெழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிற உயிரினங்களைப்  போல, சிட்டுக் குருவிகளும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன என சூழலியலாளர்கள் எச்சரித்துவருகின்றனர். மக்களிடையே சிட்டுக் குருவிகள் பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதாேறும் மார்ச் 20-ம் தேதி, சர்வதேச சிட்டுக் குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை தமிழ்த் துறையினர் நடத்தினர். இந்தப் புகைப்படக் கண்காட்சியில், சிட்டுக் குருவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மாற்றமடைந்துள்ள உணவு முறை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில், நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

இதுகுறித்து தமிழ்த் துறை பேராசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ‛‛பறக்கும் விவசாயிகள் என்றழைக்கப்படும் சிட்டுக் குருவிகள் திணைகளையும், சிறுதானியங்களையும் உண்டு, எச்சங்களாக விதைகளை விதைக்கும் திறன்காெண்டவை. தட்பவெப்ப, வாழ்விடங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உடனடியாகக் காட்டக்கூடிய சிட்டுக் குருவிகள், சுற்றுச்சூழலின் கடிகாரங்களாகவே பார்க்கப்படுகின்றன. எனவே, அழிந்துவரும் சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதுகுறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்குக் காெண்டுசேர்க்கவும், அவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டவும் கடந்த சில தினங்களாக சிட்டுக் குருவிகள்குறித்த புகைப்படங்களைப் பதிவுசெய்ய கேட்டுக் காெண்டதன்பேரில், புகைப்படக் கண்காட்சி நடந்தது. கல்லூரி வளாகத்தில், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் சுற்றித்திறியும் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. அவற்றைப் பாதுகாக்க, வீடுகளில் வீணாகும் பாெருள்களைக்காெண்டு 100-க்கும் அதிகமாகக் கூண்டுகளைத் தயாரித்து, கல்லூரி வளாகத்தின் கூரை உள்ளிட்ட பகுதிகளில் வைத்துள்ளாேம். அடுத்தகட்டமாக சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு இயக்கம் ஏற்படுத்த முயற்சிசெய்துவருகிறோம்’’என்றார்.