Published:Updated:

"மூன்று மாதங்களாக மூன்று சிட்டுக்குருவி குஞ்சுகளுடன் பேசுகிறேன்!" - ஆசிரியரை அசர வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

"மூன்று மாதங்களாக மூன்று சிட்டுக்குருவி குஞ்சுகளுடன் பேசுகிறேன்!" - ஆசிரியரை அசர வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்
"மூன்று மாதங்களாக மூன்று சிட்டுக்குருவி குஞ்சுகளுடன் பேசுகிறேன்!" - ஆசிரியரை அசர வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

"மூன்று மாதங்களாக மூன்று சிட்டுக்குருவி குஞ்சுகளுடன் பேசுகிறேன்!" - ஆசிரியரை அசர வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

தனது வழிகாட்டி ஆசிரியரிடம், 'நான் எங்க வீட்டுல சிட்டுக்குருவி குஞ்சுகள் மூன்றுடன் தினமும் பேசுகிறேன்' என்று சொல்லியது அந்த ஆசிரியரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சிறு வயதில் பறவைகள் குறித்தான அந்த மாணவனின் நேசத்திற்கு பலத்த பாராட்டுகளும் குவிகின்றன.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்த கிராமத்தில் செயல்பட்டு வருகிறது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி தனபால், மாணவர்களை பலவேறு ஆய்வுகள், கண்டுபிடிப்புகளை கண்டறிய வைத்திருக்கிறார். இதுவரை, 280 க்கும் மாணவர்களை பல்வேறு வகையில் மாணவ விஞ்ஞானிகளாக பதிய வைத்திருக்கிறார்.


 

இந்நிலையில், மாணவர்களை வைத்து, வெள்ளியணை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பறவைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள வைத்தார். அதனையொட்டி, வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக வன தினம், உலக தண்ணீர் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்காக, அப்துல் கலாம் துளிர் இல்லம் மாணவர்கள் கடந்த ஆறு மாதம் காலமாக வெள்ளியணை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு, காடுகளில் உள்ள மரங்கள் எண்ணிக்கை, வெள்ளியணை குளம், ஆறு பகுதிகள், நீர் நிலைகளை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை விழாவில் சமர்ப்பித்தனர். 


 

அந்த ஆய்வை சமர்பித்த மானவர்கள், "வெள்ளியணை சுற்றியுள்ள பகுதிகளில் காகம், மைனா அதிக அளவில் மனிதர்கள் வாழும் பகுதியில் சார்ந்து காணப்பட்டது. சிட்டுக்குருவி, கிளி , இரட்டை வால் கரிச்சான் பயிர்கள் விளையும் காடு, தோட்டம் பகுதியில் காணப்பட்டன. மீன் கொத்தி, கொக்கு குளம், ஆறு, கிணறு போன்ற நீர் நிலைப்பகுதியில் காணப்பட்டது. சிட்டுக்குருவி, கிளி, ஆகியவை கூட்டமாக காணப்பட்டன. செம்பூத்து, காடை, கவுதாரி ஆகிய அரியவகை பறவைகள் முட்புதர்கள் பகுதியில் காணப்பட்டன. பனைமரங்களில் தூக்கனாங்குருவிகளையும், தூக்கனாங்குருவி கூடுகளையும் பார்த்தோம். மொத்தத்தில், எங்க ஆய்வின்போது 1000 க்கும் மேற்பட்ட பறவைகளை நேரில் கண்டு, அதன் அமைப்பு, வாழ்விடம், உணவு முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், மக்களிடம் கேட்டறிந்தும் தகவல் சேகரித்தோம்" என்று தெரிவித்தனர். அதிலும் ஏழாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவன் ஒருபடி மேலே போய், "கடந்த 3 மாதமாக தன் வீட்டில் சீட்டுக்குருவி கூடுகட்டி வாழ்ந்து வருவதாகவும், அக்கூட்டில் உள்ள மூன்று குருவி குஞ்சுகளுடன் தான் தினந்தோறும் பேசிவருகிறேன்னென்று கூறினான். இதைக் கேட்ட சக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. 


 

தொடர்ந்து, மாணவன் விக்னேஷ் கூறியவதாவது, "எங்கள் வீடு ஆஸ்பெஸ்டாஸால் வேயப்பட்ட வீடு. அதில், ஒரு சிட்டுக்குருவி மூன்று மாத்திற்கு முன் கூடுகட்டியது. நான் அதை ரசித்தவனாக தினந்தோறும் உணவு, தண்ணீர் வைத்து வந்தேன். பிறகு, சிட்டுக்குருவி கூட்டில் 4 முட்டைகள் இட்டன. நான்கு குஞ்சுகள் பொறித்ததில், ஒன்று இறந்து விட்டது. அன்று முழுவதும் தாய், தந்தை குருவியுடன் நானும் ரொம்ப சோகமாக இருந்தேன். பிறகு, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும், மூன்று குஞ்சுகளுடன் பேசுவேன். 'அம்மா, அப்பா வெளியில் போய்விட்டர்களா? நான் இருக்கிறேன். இந்தா, உனக்கு உணவு' என அரிசி, தானியம் வைப்பேன். அப்போது, அவை கீச்... கீச் ...என சத்தமிடும். அவை அந்த சத்தத்தின் மூலம், 'விக்னேஷ் ... விக்னேஷ் ....' என என்னை அழைப்பதாக கருதுவேன். மூன்று குஞ்சுகளும் என் வீட்டின் உறவினர் போல் பாதுகாக்கின்றேன். அவை இறக்கை முளைத்து சுதந்திரமாக பறக்கும் வரை, அவற்றை கண்ணுங்கருத்துமாக பாதுகாப்பேன். பறவைகளை எவ்வாறு நேசிக்க;பாதுகாக்க வேண்டும் என எனக்கு பாடம் சொல்லித் தந்த ஆசான் எனது ஆசிரியர் தனபால் சார்" என்றான்.


 

தொடர்ந்து, உலக வன தினம், தண்ணீர் தினம், சிட்டுக்குருவி தினம் சார்ந்த கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தயாரித்த 10க்கும் மேற்பட்ட செயற்கைக் கூடுகள், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டு, பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் அக்கூட்டில் வைக்கப்பட்டன. இதேபோல், மற்ற மாணவர்களும் பறவைகளை நேசித்து பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்கள் செய்திருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு