Published:Updated:

2,299 மில்லியன் டன்கள்.. இந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகரிப்பு

2,299 மில்லியன் டன்கள்.. இந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகரிப்பு
2,299 மில்லியன் டன்கள்.. இந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகரிப்பு

காற்று மாசுபாடு உலகம் முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் உள்ள மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள காற்றானது சில நேரங்களில் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடுகிறது. அந்த அளவுக்கு மோசமான நிலையே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் கூட பாதிப்பைக் குறைக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரத்தில் அமைந்திருக்கும்  சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency ) இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உமிழப்பட்ட கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவின் அளவு 33.1 ஜிகா டன்களாக இருந்திருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு என்பது 2,299 மில்லியன் டன்கள். இது அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது 4.8 சதவிகிதம் அதிகம். அதே நேரம் அமெரிக்கா 3.1 சதவிகிதமும் மற்றும் சீனா 2.5 சதவிகிதமும் CO2- வாயுவை அதிகமாக வெளியிட்டுள்ளன. நிலக்கரி பயன்பாடு அதிகரித்ததுதான் இதற்கு முக்கிய  காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவின் அளவு புவி வெப்பமயமாதலின் வேகத்தை அதிகரிக்கும்.