Published:Updated:

'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்

'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்
'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்

ஒன்பது ஏக்கர் பண்ணையில் (நர்சரி உட்பட) ராகேஷ் குடும்பம் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்புதான் வருமானத்தை சாத்தியப்படுத்தியிருப்பதாக நம்புகிறார் ராகேஷ்.

ரியானாவின் பைஜல்பூர் (Baijalpur) கிராமத்தில் வசித்து வருகிறார், பட்டதாரி விவசாயி ராகேஷ் சிஹாக் (Rakesh Sihag). அவர் தன் தந்தையின் விவசாயக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்

தனது பண்ணையின் மூலம் நிலையான வருமானத்தைப் பெறவே விரும்பினார். எனவே உயர் கல்வி படிப்பை முடித்தவுடன், சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பினார். இன்று தனது ஒன்பது ஏக்கர் பண்ணையில் நிலையான வருமானத்தைப் பெற்று தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தனக்குப் பிடித்த உணவை உண்டு, தன் இரண்டு வயது மகள் மற்றும் மனைவியுடன் பண்ணையில் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு அவர் கடைப்பிடிக்கும் ஜீரோ விவசாயக் கொள்கைகள்தான் முக்கியமான காரணம். 

ராகேஷ் தனது படிப்பை முடித்தபின் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகளாகப் பணியில் இருந்தார். 2016-ம் ஆண்டில், அவரின் குடும்பம் நிதிப்பிரச்னைகளைச் சந்தித்தபோது, ​​ராகேஷ் தனது வேலையை விட்டு விலகினார். அதன் பின்னர் அவரின் மாமா மற்றும் சகோதரர்கள் மூலமாகத் தனது நிலத்தில் 70,000 மரக்கன்றுகளை வைத்தார். நாற்றங்காலுக்காக உரங்களை வாங்கச் சென்றபோது அதற்கான பணம் ராகேஷிடம் இல்லை. அதனால், ஜீரோ பட்ஜெட் பற்றி கேள்விப்பட்டு, அதற்கு மாறியிருக்கிறார். பயிர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கவே அதற்கு முழுமையாக மாறிவிட்டார். 

'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்

ராகேஷின் மகள் ரிஷிதா பண்ணையில் உள்ள பயிர்கள், பசுக்களுடன் தனது நேரத்தைச் செலவிடுகிறார். சில நேரங்களில், செடிக்கு உரம் வைக்கும் வேலையையும் செய்கிறார். தினமும் அறுவடையாகும் காய்கறிகளின் அளவை வைத்து பண்ணையின் முன்னேற்றத்தை ராகேஷ் தெரிந்துகொள்கிறார். மாட்டின் சிறுநீரை தொழுவத்தில் கொள்கலன் அமைத்துச் சேமிக்கிறார். ஜீரோபட்ஜெட் தொழில்நுட்பம்தான் குடும்பத்தின் நிதிநிலையையும், விவசாய நிலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியது. சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழிற்நுட்பம் என்பது 'பயிருக்குத் தேவையான ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் தவிர்த்து, பண்ணையில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை வைத்தே உரங்கள் தயாரிப்பதாகும்.' இதற்கு எந்த ஒரு பண முதலீடும் தேவையில்லை. இதுபோக ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்குப் பண்ணையில் கிடைக்கும் மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர் ஆகியவை மிக அவசியம். ரசாயனப் பொருள்களுக்குச் செலவிடும் பணத்தைக் குறைத்தாலே பெரும்பாலான செலவுகளைக் குறைத்துவிடலாம் என்பது ராகேஷின் கொள்கையாக இருக்கிறது. 

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் ஒரு மாதத்துக்கு 10 கிலோ நாட்டு மாட்டுச் சாணம் தேவை. ஆனால், ஒரு நாட்டு மாட்டை வைத்து 30 ஏக்கர் நிலத்தை வளமாக்க முடியும். முக்கியமாக ராகேஷின் பண்ணையில் ஜீவாமிர்தம் தயாரித்து நிலத்துக்குச் செலுத்துகிறார். இது மண்ணை வளமாக்கி பயிர்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கிறது. இதுதவிர, பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க பூச்சிவிரட்டிகளைத் தெளிக்கிறார். இந்த முறையில் மண் வளமாவதோடு செலவும் குறைந்து, வருமானம் அதிகமாகக் கிடைக்கிறது.

'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்

ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிய முதல் வருடம் ராகேஷ் நிலத்தை மாற்றினார். லாபத்தை எதிர்பார்க்காமல், மண்ணை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். இரண்டாம் ஆண்டு முதல், பண்ணைத் தயாராகி வருமானம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இவரது பண்ணையில் அதிகமான பழ வகைகள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார். இவை அனைத்தையும் கலப்பு பயிர் விவசாய முறையில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கலப்பு பயிராக விவசாயம் செய்து வருவதால் வருடம்தோறும் பயிர்களை விளைவிக்க முடிவதுடன், மண்ணையும் வளமாக வைக்கமுடிகிறது. ஒரே பயிரை நம்பியிருக்காமல் வருடம் முழுவதும் வருமானமும் கிடைக்கிறது.

அவரது பண்ணையில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை வியாபாரிகளுக்கும், தனியார் காய்கறி நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். இதனால் ராகேஷ் மற்றும் அவரின் குடும்பம் இணைந்து விவசாயம் செய்ததில் 2017-ம் ஆண்டு மட்டும் 40 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்திருக்கிறார். கிடைத்த வருமானத்தில் தனது பண்ணையில் 20 பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். அவர்களுக்குத் தங்கும் இடம், உணவு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்குக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் கிடைத்த பலன் 2018-ம் ஆண்டு வருமானம் 50 லட்ச ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒன்பது ஏக்கர் பண்ணையில் (நர்சரி உட்பட) ராகேஷ் குடும்பம் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்புதான் வருமானத்தைச் சாத்தியப்படுத்தியிருப்பதாக நம்புகிறார் ராகேஷ்.

'இப்போ ₹ 50 லட்சம் வருது; அடுத்து ₹ 1 கோடி இலக்கு' விவசாயத்தில் கலக்கும் இளைஞர்

விவசாயத்தில் நுழைபவர்களுக்கு ராகேஷ் சொல்வது இதுதான். "உங்களுக்கு வருமானம் வருமா என்று சந்தேகம் இருக்கலாம். அந்த சந்தேகத்துக்கான தீர்வை ஆராய்ந்து தீர்க்கமான முடிவுடன் விவசாயத்தில் இறங்குங்கள். என்னைப் பொறுத்தவரை விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களைப் பற்றியும் ஆராய்ந்து எனக்கான வழியைத் தேர்வு செய்திருக்கிறேன். விவசாயம் என்றால் நஷ்டமான தொழில் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், செலவைக் குறைத்து அதிகமான வருமானம் ஈட்டும் தொழிற்நுட்பங்கள் பல இருக்கின்றன. இன்றைக்கு அரசு விவசாயத் திட்டங்களிலேயே குறைந்த செலவில் அதிகமான வருமானம் ஈட்டும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதைப் பின்பற்றினால் விவசாயம் என்பது லாபகரமான தொழில்தான். கடந்த வருடம் 50 லட்சம் வருமானம் பார்த்த நான் ஒரு கோடியை இலக்காக வைத்துக்கொண்டு பயணிக்கிறேன். எல்லோருக்கும் இது சாத்தியமான ஒன்றுதான்" என்கிறார் ராகேஷ்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு