Published:Updated:

காஸிரங்காவைச் சுற்றியுள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை... வெளியான அதிர்ச்சி தகவல்!

நெதர்லாந்தில் வெளியாகும் ஸெம்ப்லா (Zembla) என்ற தொலைக்காட்சிப் புலனாய்வுத் தொடர் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் காட்டுயிர் பாதுகாப்பு என்ற பெயரில் செய்துவரும் அதிர்ச்சிகரமான பல குற்றங்களை வெளியே கொண்டுவந்துள்ளது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்  இயற்கைப் பாதுகாப்புக்கான உலக நிதி நிறுவனம் (WWF) தேசியப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் ஓரங்களில் வாழும் மக்களை வன எல்லைகளுக்குள் பார்த்தால் பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுதல், பெண்களுக்குக் கட்டாய கருத்தடை செய்தல் போன்ற பல குற்றங்களைச் செய்துவருவதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது ஸெம்ப்லா.

காஸிரங்காவைச் சுற்றியுள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை... வெளியான அதிர்ச்சி தகவல்!

புலனாய்வுத் தொடர் கூறும் தகவல்களின்படி, இயற்கைப் பாதுகாப்புக்கான உலக நிதி நிறுவனம் (World Wide Fund for Nature) இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் எங்கெல்லாம் காட்டுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறதோ அங்கெல்லாம் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளனர். நேற்று (மே 17, 2019)  `Victims of WWF' என்ற தலைப்பில் வெளியான அந்த நிகழ்ச்சியில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது அந்தப் புலனாய்வுக் குழு. அதன்மூலம் வனப்பகுதியையொட்டி வாழக்கூடிய பெண்களுக்கு அவர்கள் கட்டாய கருத்தடை செய்து வைப்பதும் தெரியவந்தது. மக்கள் தொகை அதிகமாகிவிடக் கூடாதென்று இதுமாதிரி செய்வதாகக் கூறப்படுகிறது. இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ள அந்தக் குழு மேற்கொண்டு புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது. 

அதிர்ச்சிகரமாக அவர்கள் காட்டிய வனப்பகுதிகளில் முக்கியமான ஒன்று இந்தியாவில், அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்திருக்கும் காஸிரங்கா தேசியப் பூங்கா. காண்டாமிருகம், புலி, யானை என்று பல பேருயிர்கள் வாழும் பிரமாண்டமான காடு. குறிப்பிட்ட நிறுவனம் சார்பாக அந்தக் காட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் நிகழ்ச்சியின் புலனாய்வுக் குழு எடுத்துள்ள பேட்டியில் அரசாங்க மறுப்புகளையும் மீறி இந்த உத்தரவுகளை அந்நிறுவனம் நடைமுறையில் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அரசாங்க மறுப்புகளையும் மீறி அவர்கள் பார்த்தவுடன் சுடும் உத்தரவைக் கடைப்பிடிப்பதாக அவர் கூறியுள்ளார். 

காஸிரங்காவைச் சுற்றியுள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை... வெளியான அதிர்ச்சி தகவல்!

Photo Courtesy: Zembla

புலனாய்வுக் குழுவின் இயக்குநர் ஸ்டீபன் கார்ரி (Stephen Corry) இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, "WWF ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வனப்பகுதிகளில் வாழும் பெண்களுக்குத் துணிந்து கருத்தடை செய்துவைக்குமா. இந்தியா, ஆப்பிரிக்காவில் மட்டும் ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள். இனவெறியைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இது மனிதத் தன்மையற்ற, தர்மம் தவறிய, மனித உரிமைகளுக்கு எதிரான செயல்" என்று காட்டமாகப் பேசியுள்ளார். இதுகுறித்த ஆழமான புலனாய்வில் சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற பழங்குடிகளுக்கான சர்வதேச அமைப்பு இறங்கியுள்ளது. அது, மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிக்கொணரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.