Published:Updated:

சேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு!

சேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு!
சேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு!

சேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு!

மிழகத்தில் கடந்த சில நாள்களாக வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் 26 முதல் 28-ம் தேதி வரை சேலத்திலும் இந்தப் பணி நடைபெற்றது. சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சை மலை மற்றும் போதர் மலைத்தொடர்களிலும், ஏற்காடு, வாழப்பட்டி, மேட்டூர் என மொத்தம் 7 வனச்சரகத்தில் 70 பேர் கொண்ட 20 குழுக்களாகப் பிரிந்து இந்தப் பணியை மேற்கொண்டனர்.

இங்குள்ள மலைத்தொடர்கள் மிகவும் குளிர்ச்சியாகவும், தாவரங்கள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் அதிகமான ஊர்வனங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம். அதேபோல் அரிய வகைப் பாம்புகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பாம்புகளும் இங்கு வாழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆய்வு செய்யும்போது மண்ணுக்குள் வாழக்கூடிய பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். 

சேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு!

இது குறித்து  மேலும் தெரிந்துகொள்ள சேலம் இயற்கை மற்றும் வன வாழ் உயிரின அறக்கட்டளையைச் சேர்ந்த முருகேஷ் மற்றும் கோகுலிடம் பேசினோம். ``1863-களில் இந்தப் பாம்பு வகையைக் கண்டறிந்துள்ளனர். அக்காலகட்டத்தில் மெட்ராஸ் ஆர்மியில் மருத்துவராக பணிபுரிந்த ஜான் ஷார்ட் என்பவர் பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவருடைய தேடலின்போது இந்தப் பாம்பு இன வகையைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், இப்பாம்பை கர்னல் ரிச்சர்டு ஹென்றி பெட்டோம் என்பவருக்குப் பரிசாக கொடுத்தார்.

விஷத்தன்மை அற்ற, கிட்டத்தட்ட 30 முதல் 60 செ.மீ வரை வளரக்கூடியது. கருமை கலந்த நீல நிறமும், நடுவே மஞ்சள் நிறக் கோடுகளும்தான் இவற்றின் அடையாளம். மிகவும் அடர்ந்த காடுகளிலும், கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 4000 மீட்டர் உயரம் கொண்ட மலைகளில்தான் காணப்படுகிறது. அதுவும் சேர்வராயன் மலைகளில் இப்போது காணப்படுகிறது. ஈரப்பதமான, நீரோடைப் பகுதிகளில் உள்ள மணலில் வாழக்கூடியவை. மண்புழு, தவளை, பூச்சிகள்தான் இவற்றின் பிரதான உணவுகளாக இருக்கிறது. வாலினை பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதால் ஷீல் டைப் எனக் கருதினர். பின்னர் இந்தப் பாம்பு ஷீல் டைப்பில் ஒரு வகை என்றும் முதன் முதலில் வகைப்படுத்திய ஜான் ஷார்ட் என்பதால் அவர் பெயருடன் சேர்த்து ஷார்ட்ஸ் ஷீல்டெய்ல் (சேர்வராயன் மண் பாம்பு) எனப்பெயர் வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யும்போதும்கூட இந்தப் பாம்பு கிடைக்கவில்லை. இந்தக் கணக்கெடுப்பு செய்யும் போதுதான் ஒரு குழு பதிவு செய்தது.

சேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு!

இதேபோல் பறக்கும் பாம்பு ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றனர். கொஞ்சம் விஷத் தன்மை கொண்ட வகையாகும். பறக்கும்போது உடம்பைத் தட்டையாக வைத்துக்கொண்டு மரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் காணப்படும் இந்தப் பறக்கும் வகை பாம்பு கிழக்குத் தொடர்ச்சி மலையான ஏற்காடு பகுதிகளில் இருக்கிறது.

கண்டறியப்படாத உயிரினங்களைக் கண்டுபிடித்து வைத்திருப்பது சிறப்பு என்றாலும், அதைப் பதிவு செய்வதிலும் காப்பாற்றும் முயற்சியும் எடுக்க வேண்டும். இவ்வகைப் பாம்புகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஊர்வன அமைப்பைச் சேர்ந்த விஷ்வாவிடம் பேசினோம். ``இயற்கை எப்போதும் புதிய கருத்துகளையும், பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறது. அதை நல்ல முறையில் கற்பதுதான் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஷீல்டுடெய்ல் என்ற வகையில் உட்பிரிவுகள் காணப்படுகிறது. அதில் ஒரு வகைதான் சேர்வராயன் ஷீல்டுடெய்ல். இந்தப் பூமியில் பல உயிரினங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. ஒரு சில உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பழக்கவழக்கங்களை ஆய்வு கொண்டுதான் வருகிறோம். பெரிய வனவிலங்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஊர்வனங்களுக்கும் கொடுப்பது வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு