Published:Updated:

`அடுத்த 31 வருடங்களில் மனித நாகரிகம் அழியலாம்!' - எச்சரிக்கும் ஆய்வறிக்கை

``அடுத்த நூறு வருடங்கள்தான் பூமியில் மனிதர்களுக்கு மிச்சம் இருக்கக்கூடிய காலம். அதற்குள்ளாக அவர்கள் வேறு கிரகத்தில் குடியேறிவிட வேண்டும்'' என்று ஒரு முறை தெரிவித்திருந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். காலநிலை மாற்றம், மக்கள் தொகைப் பெருக்கம், போர்ச் சூழல், விண்கல் தாக்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் அப்படிச் சொல்லியிருந்தார்.

ஆனால், நூறு வருடங்கள் என்பது அதிகம் வரும் 2050 ஆண்டுக்குள்ளாகவே மனித நாகரிகம் அழியக் கூடிய நிலையில்தான் இருக்கிறது என எச்சரித்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஆஸ்திரேலியாவின் காலநிலை மறுசீரமைப்பு மையம் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் காலநிலை மாற்றம் மனிதன் வாழும் அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கம் எப்படியிருக்கும் என்பது போன்ற விவரங்கள் ஆராயப்பட்டன.

`அடுத்த 31 வருடங்களில் மனித நாகரிகம் அழியலாம்!' - எச்சரிக்கும் ஆய்வறிக்கை

அதில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகள் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக மோசமாக இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையைக் கடந்த ஆயிரம் வருடங்களில் மனித இனம் அனுபவித்தது கிடையாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.

அதனால் கடலோரப் பகுதிகள், தீவுப் பகுதிகளில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். மறுபக்கம் நீர்ப் பற்றாக்குறையின் காரணமாகப் பயிர் விளைச்சல் வெகுவாகக் குறையும். அது உலகளாவிய உணவு நெருக்கடியை உருவாக்கும். இதுபோன்ற சூழ்நிலைகள் மனிதன் வாழும் சமூகக் கட்டமைப்பில் சிதைவை ஏற்படுத்தும். எனவே, அதைத் தடுக்க காலநிலை மாற்றத்துக்கு எதிராக அனைவரும் உடனடியாக அணி திரண்டு செயல்படுவது அவசியம் என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan