Election bannerElection banner
Published:Updated:

அதிர்ச்சி: சென்னைக்குத் தண்ணீர் தரும் ஏரிகளின் தற்போதைய நிலை! #WhereIsMyWater

பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய நான்கு ஏரிகளில் சேமித்துவைக்கப்படும் தண்ணீரைக்கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில், 11.05 டி.எம்.சி தண்ணீரை சேமித்துவைக்கலாம். நேற்றைய நிலவரப்படி, 4 ஏரிகளிலும் சேர்த்து வெறும் 52 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு உள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஏற்கெனவே சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தற்போது ஏரிகள் வறண்டுவருவதால்,  சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அதிர்ச்சி: சென்னைக்குத் தண்ணீர் தரும் ஏரிகளின் தற்போதைய நிலை! #WhereIsMyWater

04-06-2019 நிலவரப்படி, மொத்தம் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவுடைய பூண்டி ஏரியில் 48 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவுகொண்ட சோழவரம் ஏரியில், 1 கன அடி நீரும்  3,300 மில்லியன் கன அடி கொள்ளளவுகொண்ட புழல் ஏரியில் 2 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.  3645 மில்லியன் கன அடி கொள்ளவுகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1 மில்லியன்  கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதன்படி, நான்கு ஏரிகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த கொள்ளளவான 11,257 மில்லியன் கன அடி நீரில் வெறும் 52 கன நீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு இதே தேதியில் 2,825 மில்லியன் கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி: சென்னைக்குத் தண்ணீர் தரும் ஏரிகளின் தற்போதைய நிலை! #WhereIsMyWater

சோழவரம், புழல் ஏரிகளில் ஆங்காங்கே குட்டைபோல நீர் தேங்கியுள்ளது. அதனால் ஏரிக்குள் வாய்க்கால் வெட்டி, ஓரிடத்துக்கு நீர் கொண்டு வரப்பட்டு, குழாய்கள் மூலம் கடந்த சில மாதங்களாக உறிஞ்சி எடுக்கப்பட்ட தண்ணீர்,  சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டது. தற்போது, குழாய் மூலம் உறிஞ்சி எடுக்க முடியாத அளவுக்கு தண்ணீர் குறைந்துவிட்டதால், புழல் ஏரியில் நேற்று முதல் தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 

அதிர்ச்சி: சென்னைக்குத் தண்ணீர் தரும் ஏரிகளின் தற்போதைய நிலை! #WhereIsMyWater

ஏரிகள் வறண்டுவருவதால்,  சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு