Published:Updated:

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்
``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

``சாதாரண மக்களுக்குத் தண்ணீர் போய்ச்சேரவில்லை... அரசே வியாபாரம் செய்கிறது" - குற்றஞ்சாட்டும் அறப்போர் இயக்கம்!

நாடு முழுவதும் 60 கோடி மக்கள் தினந்தோறும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். வடகிழக்குப் பருவமழை மிகக்குறைந்த அளவு பெய்ததால் தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை பூதாகரமாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர்ப் பற்றாக்குறையை நீக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் மேலாண்மை சரியாக இல்லாததே இந்த ஆண்டு கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கான காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

சென்னையின் நீர் நிலையங்கள் மீட்பு, பராமரிப்பு டெண்டர்களில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, நீர்நிலைகள் தூர்வாருதல் என மக்களோடு இணைந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டுவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.  

2020-ம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடிநீர் இல்லாத நிலை ஏற்படும் என நிதி ஆயோக்கின் எச்சரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

``நிலத்தடி நீர்மட்டம் குறித்து, ஏற்கெனவே பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்தன. நிதி ஆயோக் விடுத்ததை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். நிதி அயோக் 2020-ம் ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக இல்லாமல் போகும் எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், நாம் அதை இப்போதே அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். இன்றைக்குக் குடிநீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்கள் தண்ணீர்க் குடங்களுடன் வீதிகளில் தஞ்சமடைவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. எனவே, சென்னையில் வாழக்கூடியவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருக்கிறது. 

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் அதிக மழை பெய்து வருகிறது. ஆனால், அவற்றைச் சேமிப்பதற்கான கட்டமைப்புகள் இங்கு எதுவும் இல்லை என்பது வேதனையளிக்கும் விஷயம். குறிப்பிட்ட அளவு மழை பெய்துள்ள போதிலும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டதற்கு தண்ணீர் மேலாண்மை சரியாக இல்லாததைத் தாண்டி வேறு முக்கியமான காரணத்தை தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அரசியல்வாதிகளாகட்டும் அதிகாரிகளாகட்டும் கடந்த 15 - 20 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இன்னமும் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், நிதி ஆயோக் குறிப்பிட்ட தேதியைவிட முன்னதாகவே நிலத்தடி நீர் காணாமல்போகும்.’’ 

சென்னைக்கு நீர் தரக்கூடிய ஏரிகளின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?

``சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய ஊர்களில் சுமார்  3,500 நீர் நிலைகள் இருக்கின்றன. அதில் சென்னையின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மிக முக்கியமான நீர்நிலைகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த நான்கு ஏரிகள் 2012 -2019 வரை எத்தனை முறை தூர்வாரப்பட்டுள்ளது என்கிற தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தோம். கிடைத்த பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த 7 ஆண்டுகளில் ஒருமுறைகூட நீர்நிலைகளை அரசு பொதுப்பணித்துறை தூர்வாரவே இல்லை. இரண்டு டி.எம்.சி தண்ணீர் தேங்காத அளவுக்குத் தூர்வாரப்படாமல் இருக்கிறது என்கிறது புள்ளிவிவரங்கள். இரண்டு டி.எம்.சி தண்ணீர் என்பது சென்னைக்கு இரண்டு மாத தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவாகும். 

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

அதோடு தூர்வாரப்படாததால் அது ஏரியில் தேங்காமல் வீணாக வெளியேறி கடலில் கலக்கின்றன. இதனால் ஏரி இருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் தேங்குவதும் குறைந்துபோகிறது. உதாரணத்துக்கு கொரட்டூர் 400- 500 ஏக்கர் அளவில் ஏரி இருக்கிறது. ஆக்கிரமிப்புகள் சுருங்கிவிட்டது என்றால், அந்தத் தண்ணீர் குடிக்கும் நிலையில் இல்லை. காரணம் அங்கு கழிவுகள் கலப்பதுதான். இதுதான் பல ஏரிகளின் நிலை. மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்துதான் குப்பைகளைக் கொட்ட வேண்டும் எனச் சட்டம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், அதையும் அரசு பின்பற்றுவதில்லை. அதோடு கட்டுமான கழிவுகளை அங்கே கொட்டுகிறார்கள். தூர்வாரும் பணிகளைச் செய்வதில்லை. வில்லிவாக்கம் ஏரியாவில் மண்ணைக்கொட்டி வைத்திருக்கிறார்கள். மூங்கில் ஏரி, சிட்லபாக்கம் என ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் போய்தான் மீட்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டியதிருக்கிறது. 

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

இதுவரை சராசரியாக 3,500 நீர் நிலைகளில் 1,400 மி.மீ மழை பெய்திருக்கிறது. கடந்த ஆண்டுதான் 820 மி.மீட்டராகக் குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் முறையான பணிகளைச் செய்திருந்தால்கூட இந்தளவுக்குப் போயிருக்காது. 2015 பெருவெள்ளம் வந்தது. அவ்வளவு தண்ணீரையும் கடலுக்குத் தானே அனுப்பி வைத்தார்கள். இத்தனைக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும்தான் மாறி மாறி பொதுப்பணித்துறையை வகித்தனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.’’ 

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க என்ன காரணம்?

``ஆக்கிரமிப்புகள் செய்வதே தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தாம். பொதுவாக ஒரு இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அந்த இடத்திற்குப் பட்டா கொடுக்கலாம் என்கிற திட்டத்தை கொண்டுவந்ததும் அவர்கள்தான். அதன்படி, அவர்களுக்கு வேண்டியவர்களுக்குப் பட்டா போட்டு ஆக்கிரமிப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இனிமேல் நீர்நிலைகளில் பட்டா வழங்கக் கூடாது என 2016-ம் உயர்நீதிமன்றம் தடைப்போட்டுள்ளது. இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஏரிகளுக்கு அருகில் வளர்ந்து நிற்கும் அடுக்குமாடி கட்டடங்களே அதற்குச் சாட்சி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க, பொதுமக்களின் பொறுப்பாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

நீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை.எப்படி, அரசுக்கு ஒரு கடமை இருக்கிறதோ அதுபோல, பொதுமக்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அரசின் பணிகளை கண்காணிப்பதுடன் அது குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தங்கள் பகுதியில் நடக்கும் நீர்நிலைகள் சீரமைப்பு, மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என்பதைப் பற்றி அவ்வப்போது அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டவோ, கழிவு நீர்களைக் கலக்கவோ அனுமதிக்கக் கூடாது. நீர்நிலைகளைப் பாதுகாக்க அந்தப் பகுதி மக்களே ஒரு குழுவை உருவாக்கி இணைந்து செயல்பட வேண்டும். தண்ணீருக்குக் கஷ்டம் வந்தால்தான், அதைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் அப்படியில்லாமல் எப்போதுமே நீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க  வேண்டும். மழைநீர் சேமிப்பின் மீதான அக்கறை அரசுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்க வேண்டும். 

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

கல்குவாரி நீர், விவசாய கிணறுகள், ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் என பல்வேறு குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகச் சொல்கிறதே?

தண்ணீர் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமான நீர்மேலாண்மை பற்றி துளியும் அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு, வேறு வழியில்லாமல் பல இடங்களிலிருந்து கொண்டுவருகிறார்கள். சரி அப்படிக் கொண்டுவரும் தண்ணீர் எல்லாம் மக்களுக்கும் கிடைக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அமைச்சர் வேலுமணி இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் 'சென்னையில் 75 லட்சம் மக்களுக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது' என்று கூறியிருக்கிறார். அதன்படி குடும்பத்திற்கு 250 - 300 லிட்டர் அதாவது, 15 -20 குடம் தண்ணீர் ஒவ்வொரு நாளும் வழங்கப்படுகிறது என்பதுதான் அதன் பொருள். ஆனால் கள நிலவரம் அப்படியில்லை. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மூன்றிலிருந்து ஐந்து குடங்களிள் கிடைக்கிறது என மக்கள் சொல்கிறார்கள். அப்படியானால் மீதி தண்ணீர் யாருக்குப் போகிறது. 

``நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு யார் காரணம்?'' - விளக்குகிறார் அறப்போர் ஜெயராமன்

மிக முக்கிய நீர்நிலைகளான  பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர் நிலவரத்தை  அரசு வலைத்தளத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். குடிநீர் வடிகால் வாரிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் வருகிறது. எங்கெல்லாம் கொடுக்கப்படுகிறது என்கிற விவரமும் வெளிப்படையாக இல்லை. இது அரசின் மீது மக்களுக்குச் சந்தேகத்தை எழுப்பும் விதமாகத்தான் இருக்கிறது" என்றார் வேதனையாக. 

இந்தப் பேட்டியை முழுமையாக வீடியோவில் பார்க்க...

Vikatan
அடுத்த கட்டுரைக்கு