Published:Updated:

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி
`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

 புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையை வளர்க்கவும் கரூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 8,000 கிலோமீட்டர் வரை பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். தனது இயற்கை குறித்தான பல்வேறு முயற்சிகளைப் பாராட்டி தமிழக முதல்வர் கொடுத்த ஒரு லட்சம் மற்றும் மேற்கொண்டு மூன்றரை லட்சம் செலவு செய்து, இந்த அசத்தல் முயற்சியை எடுக்க இருக்கிறார்.

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகள் ரக்ஷனா. கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை நாடுமுழுக்க மக்களிடம் ஏற்படுத்தவும், இந்தச் சிறுமி இத்தகைய அசத்தல் முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 8,000 கிலோமீட்டர் பயணித்து, 4 லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். இன்றுமுதல் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

அதற்காக, இருபது வகையான விதைகளை விதைப்பந்துகளாகத் தயார் செய்திருக்கிறார்கள். லாரி மூலம் பத்து தன்னார்வலர்களோடு சிறுமி ரக்ஷனா பயணத்தைத் தொடங்குகிறார். பயணம் முழுக்க விதைப்பந்துகளைத் தூவுவதோடு, புவி வெப்பமயமாதல், பெண் கல்வியை ஊக்குவித்தல், பறவை இனத்தைக் காத்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் முறையைத் தடுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுத்தல் உள்ளிட்ட ஆறு விஷயங்கள் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறார். 

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

இந்தச் சிறுமி ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் பயணித்து 80,000 மரக்கன்றுகளை மக்களிடம் இலவசமாகக் கொடுத்துள்ளார். அதோடு, 1,600 நபர்களை கண்தானம் செய்ய பதிய வைத்திருக்கிறார். 50,000 நபர்களுக்கு பத்தொன்பது வகையான முதலுதவி பயிற்சி எப்படிக் கொடுப்பது என்று பயிற்சி விளக்கம் அளித்துள்ளார். அதோடு, விவசாயத்துக்குக் குறைந்த நீரில் தண்ணீர் பாய்ச்சும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். உலகம் முழுக்க விதைப்பந்து தூவ வேண்டி 24 மணிநேர தொடர் விழிப்புணர்வு தியானம் செய்திருக்கிறார். அதேபோல், புவி வெப்பமயமாதலைத் தடுக்க ஒருலட்சம் பேரிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

10 மொழிகளில் மரம் பற்றிய விழிப்புணர்வு பேச்சு, சிலம்பத்தில் இந்திய அளவில் சாதனை, 120 கிராமங்களில் மரம் நடுதல், குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்ல சேமிப்பு நிதி வழங்குதல் என்று ரக்ஷனா இதுவரை செய்த முயற்சிகள் அளப்பரியவை. இவரின் இந்த இயற்கை சார்ந்த முயற்சிகளைப் பாராட்டி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வருடம் ஒரு லட்சம் பணப் பரிசு வழங்கினார். அந்த ஒரு லட்சத்தையும் இப்போது தான் மேற்கொண்டிருக்கும், இந்த நாடு முழுவதும் விதைப்பந்து தூவும் விஷயத்துக்காகச் செலவுசெய்து அசரடிக்கிறார். அவர் படிக்கும் பள்ளி மைதானத்தில் நான்கு லட்சம் விதைப்பந்துகளையும் பரப்பிவைத்து, பிரமாண்டம் காட்டி, பிரமாதப்படுத்தி இருந்தார்கள். நாம் ரக்ஷனாவிடம் பேசினோம்.

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

``இந்தப் பூமியில் பிறந்தோம், வாழ்ந்தோம்னு இருக்கக் கூடாது. இந்தப் பிறவிக்கு அர்த்தம் சேர்க்கிறாப்புல ஏதாச்சும் சாதிக்கணும்'னு அம்மாவும் அப்பாவும் சின்ன வயசில் இருந்தே எனக்குள் நல்ல கருத்துகளை விதைச்சுக்கிட்டே இருந்தாங்க. அப்துல் கலாம் அய்யா வேறு, 'மாணவர்களே, கனவு காணுங்கள்'னு சொல்லி வச்சுட்டு போயிருக்கிறார். அதனால், இந்தச் சமூகத்துக்கும் சக மனிதர்களுக்கும், நம்மை படைத்த இயற்கைக்கும் ஏதாவது ஒருவகையில் பயன் உள்ளதாக இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு என்னோட பெற்றோர் உறுதுணையா இருந்தாங்க. அதனால், இயற்கையைக் காக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தேன்.

இப்போ, புவிவெப்பமயதலைத் தடுக்கவும், இயற்கையைக் கட்டமைக்க வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 8,000 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறேன். அதைதவிர, வழிநெடுக நான் சந்திக்க இருக்கும் மக்களிடம் ஆறு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கிறேன். என் வாழ்நாள் முழுக்க இயற்கைக்காக இயங்கிகிட்டே இருப்பேன்" என்றார் முத்தாய்ப்பாக!.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு