Election bannerElection banner
Published:Updated:

"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'
"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

தண்ணீர் வணிகப்பொருளாகிவிட்டதில் வருத்தம்தான். இயற்கையின் கொடை தண்ணீர். அது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து இடத்திலும் கிடைக்கக்கூடிய பொருள். அதுவே, ஒரு வணிகப் பொருளாகி பாதிப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாகிவிட்டது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான். தண்ணீரைச் சுரண்டுதல் நீடிக்கும்போது, நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.

லைநகரை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர் பஞ்சம். தமிழக உள்ளாட்சித்துறை சார்பில் சிறப்புக் கூட்டங்களைப் போட்டு குழு அமைத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. `தண்ணீர்ப் பிரச்னை என்பது இயற்கையின் நடவடிக்கைகளில் ஒன்று' எனவும் பேட்டி கொடுத்திருக்கிறார். தண்ணீர் பற்றாக்குறையால் ஐ.டி நிறுவனங்கள் பலவும், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தண்ணீர் பஞ்சம் தொடர்பாகச் சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்த கருத்துகள் வைரலாகியுள்ளன. 

சென்னை தாழம்பூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ், "தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். சென்னையைச் சுற்றியுள்ள 1,500 ஏரிகள் தொடர்பான அறிக்கை அது. ஏரிகளை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழைநீரைச் சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டிருக்காது என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அதை அரசு செயல்படுத்தும் என நம்புகிறேன்!" எனக் குறிப்பிட்டிருந்தார். 

"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

"அரசுக்கு அனுப்பிய அறிக்கை குறித்துச் சொல்லுங்கள்..." என்றோம் சகாயத்திடம் 

``காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ-வாகப் பணிபுரிந்த காலகட்டம் அது (2001). காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஏரிகள் உள்ளன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்த ஏரிகளை நிறைத்துவிட்டால், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான அவசியம் இருக்காது. இதில், ஒவ்வொரு ஏரியையும் மற்ற ஏரிகளோடு இணைத்துக்கொள்ளும் வகையில் நம்முடைய கட்டமைப்பு இருக்கிறது. கடற்கரையையொட்டிய பகுதியாகச் சென்னை இருக்கிறது. கீழ்ப்பகுதியாக இருப்பதால் கடலை நோக்கி ஆற்றுத் தண்ணீர் வருகிறது. புவிஈர்ப்பு விசையின் மூலம் ஒரு ஏரியில் இருந்து இன்னொரு ஏரிக்கு நீரைக்கொண்டு செல்வது எளிதானது. குளங்கள் நிரம்பினால் 400 எம்.எல்.டி வரையில் தண்ணீரைச் சேமிக்கலாம். இதை ஆய்வு செய்து 20 உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினேன். மேலும், நகரமயமான சூழலில் வேளாண்மை என்பது படிப்படியாகச் சிதைந்து வருகிறது. விவசாயம் பொய்த்துப்போவதால், அங்குள்ள குளங்களில் பலவற்றைச் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் கொடுத்தேன். அதில், வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுகவனேஸ்வரர் ஐ.ஏ.எஸ் மட்டும், `மிக நல்ல அறிக்கை, சரியான சிந்தனை' எனப் பரிந்துரை செய்தார். ஆனால், அந்த அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை."

"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

சென்னையில் டி.ஆர்.ஓ-வாக இருந்தபோது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தீர்களே..? 

``ஆமாம். சரவண பவன் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம், வீட்டுவசதி வாரிய நிலம் என 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலங்களை அரசின் கணக்கில் சேர்த்தோம். சரவணபவன் கட்டுப்பாட்டில் கோயம்பேடு அருகில் உள்ள பெங்களூரு ஹைவே சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கலாஷேத்ரா நிலங்களை மீட்டெடுத்தோம். கொளத்தூர் ஏரிக்கெல்லாம் பட்டா கொடுத்தனர். இதற்குக் காரணமான செட்டில்மென்ட் சப் கலெக்டர் ஒருவரைக் கைது செய்தோம். ஏரிகளை வலுப்படுத்தினால், நிலத்தடி நீர் மேம்படும். அந்த நீரையே நாம் சென்னைக்கும் கொண்டு வரலாம். நீண்ட கால அடிப்படையிலான திட்டம் அது. தற்போது நான் அந்தத் துறையில் இல்லை. அரசுக்கு ஆலோசனை என்ற பெயரிலும் கூற முடியாது. குளத்தைப் பாதுகாக்காமல் நிலத்தடி நீரை எப்படிப் பாதுகாக்க முடியும்?" 

"20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

தண்ணீர் மாஃபியாக்களின் வியாபாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``தண்ணீர் வணிகப்பொருளாகிவிட்டதில் வருத்தம்தான். இயற்கையின் கொடை தண்ணீர். அது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து இடத்திலும் கிடைக்கக்கூடிய பொருள். அதுவே, ஒரு வணிகப் பொருளாகி பாதிப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாகிவிட்டது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான். தண்ணீரைச் சுரண்டுதல் நீடிக்கும்போது, நிலத்தடி நீர் பாதிக்கப்படும். சென்னையைப் போன்ற இடங்களில் கடல்நீர் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிலத்தடி நீர்க் கீழே போகப்போக கடல் உள்வாங்கும். இதுகுறித்த ஆய்வறிக்கைகளும் உள்ளன. தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைச் சுரண்டுவது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும். விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும். பாலாற்றில் இருந்து மண்ணை எடுக்க எடுக்க, அங்கு நிலத்தடி நீர்க் கீழே போய்விடுகிறது. இதனால் அருகில் உள்ள விவசாயப் பகுதிகளும் பாதிப்படைகிறது. சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்." 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு