Published:Updated:

`ஒரு வாரத்தில் அணை இடிக்கப்படும்!'- தனியாருக்கு கடிவாளம் போட்ட கலெக்டர் திவ்யா

ரா.சதீஸ்குமார்
`ஒரு வாரத்தில் அணை இடிக்கப்படும்!'- தனியாருக்கு கடிவாளம் போட்ட கலெக்டர் திவ்யா
`ஒரு வாரத்தில் அணை இடிக்கப்படும்!'- தனியாருக்கு கடிவாளம் போட்ட கலெக்டர் திவ்யா
`ஒரு வாரத்தில் அணை இடிக்கப்படும்!'- தனியாருக்கு கடிவாளம் போட்ட கலெக்டர் திவ்யா

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கியுள்ளனர். எஸ்டேட்டில் உள்ள தேயிலைச் செடிகளைப் பிடுங்கி சாலை அமைத்து காட்டேஜ் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஓடிக் கொண்டிருந்த நீரோடையை அத்துமீறி  மறித்து  30 அடி உயரத்தில் அணைக்  கட்டி வருகின்றனர். இதனால், தேவர்சோலை, காசோலை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நீரோடையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் குறையும் அபாயம் ஏற்பட்டது. அரசிடம் உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி இரண்டு மலைகளுக்கு நடுவே ஓடும் நீரோடையைப் பிரமாண்ட அணை மூலம் தடுத்துள்ளனர். இந்த தண்ணீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இந்த அணையில் படகு சவாரி செய்யவும், தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

`ஒரு வாரத்தில் அணை இடிக்கப்படும்!'- தனியாருக்கு கடிவாளம் போட்ட கலெக்டர் திவ்யா

இந்த அணை கட்டுவதற்கு முறையான அனுமதியும் பெறவில்லை. சாதாரணமாக அணை கட்ட வேண்டுமென்றால், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர்கள் எந்தவித அனுமதியும் பெறவில்லை. அதிகரட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் வாய்மொழியாக அணை கட்டுகிறோம் எனக் கூறிவிட்டு அணைக் கட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஊட்டி ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் உரிய அனுமதி பெறாதது தெரியவந்தது. கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ஆர்.டி.ஓ சுரேஷ் உத்தரவிட்டார். குன்னூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் வரும் நிலையில், குன்னூர் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.

`ஒரு வாரத்தில் அணை இடிக்கப்படும்!'- தனியாருக்கு கடிவாளம் போட்ட கலெக்டர் திவ்யா

இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் அந்த அணையை இடிக்க வேண்டும் என  கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார். இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “தேவர்சோலை பகுதியில் தனியார் எஸ்டேட்டில் எந்தவித அனுமதியும் பெறாமல் நீரோடையை மறித்து தடுப்பணை கட்டி வந்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில், அவர்கள் தடுப்பணை கட்ட எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அணையை  இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை நிறுத்தவும், இடிக்கவும் ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் நீரோடையை மறித்துக் கட்டியுள்ள அணையை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

நீரோடையை மறித்து தனியார் எஸ்டேட் உரிமையாளர் அணை கட்டியதால், விவசாயம் பாதிக்கும் அச்சத்தில் அந்த பகுதி விவசாயிகள் இருந்தனர். ஆனால், அதனைத் தடுக்க முடியாமல் கவலையில் இருந்தனர். தற்போது மாவட்ட நிர்வாகம் அந்த அணையை இடிக்க உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Vikatan