Published:Updated:

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

ஒரு நிலம் தன் அமைப்பை இழக்கும்போது அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வியல் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு அவர்களின் செழிப்பான வாழ்வை வரலாறாக்கிவிட்டு அவர்களை வேதனையில் உழல வைக்கிறது. அப்படி வரலாறாக்கப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்பவர்கள்தாம் வடசென்னை மக்கள்.

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

ஒரு நிலம் தன் அமைப்பை இழக்கும்போது அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வியல் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு அவர்களின் செழிப்பான வாழ்வை வரலாறாக்கிவிட்டு அவர்களை வேதனையில் உழல வைக்கிறது. அப்படி வரலாறாக்கப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்பவர்கள்தாம் வடசென்னை மக்கள்.

Published:Updated:
`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

``எனக்கு வயசு 69 ஆகுது. உங்கள மாதிரி இளம் வயசுல இருக்குறப்ப இந்தக் கொற்றலை ஆத்துலயும் ஆரணி ஆத்துலயும் சாதாரணமா  பார்த்தா முகம் தெரியும். அப்படிப்பட்ட ஆறு இன்னிக்குக் கெட்டுப் போச்சு. இதோ இப்ப சுத்தியும் இருக்குற பன்னாட்டு நிறுவனங்கள்தான் காரணம். ரெண்டாவது, சென்னையில இருந்து வர்ற தண்ணீர். ஜி.எச்-ல இருந்து வர்றது, ஐ.ஓ.சி-ல இருந்து வர்றது, சி.பி.சி.எல்-ல இருந்து வர்றது, கெமிக்கல் தொழிற்சாலைகள்-ல இருந்து வர்றது. இப்படி அத்தனை அழுக்குகளும் பக்கிங்ஹாம் கால்வாய் வழியா எங்க ஆத்துல வந்து கலந்து எங்க ஆறுங்க மொத்தமும் கெட்டுப்போச்சு. இங்க இறால் ரொம்ப அதிகமா கெடச்சுது. இப்ப அதெல்லாமே போச்சு. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா! இதோ, எண்ணூர் அனல் மின் நிலையம் கொட்டுற சாம்பல் கழிவுகள் ஆத்துல கலக்குது. 

பள்ளமா இருந்த பகுதியெல்லாம் மேடாயிருச்சு. வடசென்னைய அழிக்குற அனல்மின் நிலையம் மாதிரியான திட்டங்கள எதிர்த்து 1995-ல எங்க முதல் போராட்டத்த ஆரம்பிச்சோம். இப்ப வரைக்கும் போராடிக்கிட்டுத்தான் இருக்கோம்!" 

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எண்ணூர் சதுப்பு நிலங்கள் காமராஜர் துறைமுக நிர்வாகத்தாலும் வடசென்னை அனல் மின் நிலைய நிர்வாகத்தாலும் எந்த அளவுக்கு அபாயங்களைச் சந்தித்து வருகிறது என்பதைக் காட்டுவதற்காகச் சென்னை பத்திரிகையாளர்களுக்கு எண்ணூர் கழிமுகப் பாதுகாப்புப் பிரசாரக் குழுவோடு ஒரு பயணத்தை ஒருங்கிணைத்தனர். அந்தப் பயணத்தின் போதுதான் ஆனந்தன் ஐயாவைச் சந்தித்தேன். காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த 69 வயது நிரம்பிய சூழலியல் போராளி. அவர் அந்த நிலத்தின் சூழல் நாற்பது ஆண்டுகளுக்குமுன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். அதே நிலத்தில் இன்று நாங்கள் முழுதாக அரை மணிநேரம்கூட நிற்க முடியாமல் வெப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அனல் மின் நிலையத்தின் சாம்பல் படிமங்கள் முகத்தில் படர்ந்து ஒருவித அசௌகர்யத்தை உண்டாக்க, சுவாசிக்க முடியாத காற்றால் மூக்கில் எரிச்சல் எடுக்க, புதைமணலைப் போல் கால்களைப் பாதி மூடிவிடும் சாம்பல் கலந்த மண்ணில் நடந்துகொண்டு அவர் பகிர்ந்துகொண்ட கடந்தகால நினைவுகள் எவ்வளவு வலிகள் நிரம்பியவை என்பதை என்னால் உணரமுடிந்தது. 

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

எண்ணூர் சதுப்புநிலத்தில் மணல் கொட்டி மேடாக்கிச் செய்யப்படும் ஆக்கிரமிப்பு வேலைகள்

ஒரு நிலம் தன் அமைப்பை இழக்கும்போது அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வியல் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு அவர்களின் செழிப்பான வாழ்வை வரலாறாக்கிவிட்டு அவர்களை வேதனையில் உழல வைக்கிறது. அப்படி வரலாறாக்கப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்பவர்கள்தான் வடசென்னை மக்கள். குறிப்பாக எண்ணூர், காட்டுக்குப்பம், அத்திப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள். 

எண்ணூர் வழியாகப் பயணிக்கும் கொற்றலை ஆற்றின் வெள்ள வடிகால் பகுதிதான் நாங்கள் சென்ற முதல் இடம். மூன்றாண்டுகளுக்கு முன் காமராஜர் துறைமுகம் அந்த வடிகால் பகுதியில் மண் கொட்டி துறைமுகத்தின் சரக்கு ஏற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான ஓர் இடமாக மாற்ற முயற்சி மேற்கொண்டது. மீனவ மக்கள் இதற்கு எதிராகப் போராடியும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தும் அங்கு கொட்டிய மண் முழுவதையும் அகற்றவும் சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களும் எடுத்தார்கள். 

ஆனால், தற்போது வேறு வடிவில் தங்கள் திட்டத்தைச் செயலாக்க துறைமுக நிர்வாகம் முயன்றுள்ளதை அங்கு காணமுடிந்தது. துறைமுகத்தை அணுகுவதற்கான சாலைகளை விரிவாக்கும் திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மீண்டும் அதே சதுப்பு நிலத்தை மணல் கொட்டி மேடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணூர் ஆற்றின் கிழக்குப் பக்க வெள்ள வடிகால் பகுதியில் இது நடந்துகொண்டிருக்கிறது. பக்கிங் ஹாம் கால்வாய்க்கும் எண்ணூர் ஆற்றுக் கழிமுகப் பகுதிக்கும் நடுவே இந்தச் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஒரு மாதமாகத்தான் ஆக்கிரமிப்புகளைத் தீவிரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் வாங்கவில்லை. அவர்கள் ஆக்கிரமிக்கும் சதுப்பு நிலம் முழுவதும் எண்ணூர் கடலோரத்தின் அலையாத்திக் காடுகள் வளரக்கூடிய பகுதி. 

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

ஆற்றுக்கு நடுவே சாலை ஏற்கெனவே போடப்பட்டுள்ளது. அதற்குக் கீழே ஆற்று நீர் பாய்வதற்காக இருந்த நீர்வழித்தடத்தையும் மொத்தமாக மூடிவிட்ட ஆக்கிரமிப்பு வேலைகள்

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தின்படி அந்த நிலப்பகுதி முழுவதுமே நீர்நிலைகளாக உள்ளன. நீர்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் இந்த விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 261 ஏக்கர் பரப்பளவுக்கு நீர்நிலைகள், அலையாத்திக் காடுகளின் நிலத்தை ஆக்கிரமித்து கடற்கரைப் பணியிடத்தையும் சாலை விரிவாக்கத்தையும் மேற்கொண்டு வருகிறது காமராஜர் துறைமுகம். 

துறைமுக ஆக்கிரமிப்புகளைக் கடந்து பயணித்த நாங்கள், கொற்றலை ஆற்றின் வழியாகப் பயணிக்கும் வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் குழாய்களைப் பார்வையிடச் சென்றோம். அங்கு சென்ற சமயம், சாம்பல் குழாய்கள் சேதமடைந்து அனல் மின் நிலையக் கழிவுகள் சிதறித் தெறித்துக்கொண்டிருந்தன. அப்படிச் சிதறிய கழிவுகள் வடிந்து குட்டையாக மாறி கொற்றலை ஆற்றுக்குள் சென்று கலப்பதை எங்களால் பார்க்கமுடிந்தது. ஆனந்தன் ஐயா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ஆம், இப்படிப் போதிய கவனிப்பின்றி ஆற்றில் கலக்கும் சாம்பல் கழிவுகள் ஆற்று நிலத்தில் படிந்து சாம்பல் மணலாக மாறிவிடுகிறது. மெர்க்குரி, ஆர்சனிக், கேட்மியம் போன்ற வேதிமங்கள் இந்தச் சாம்பல் கழிவுகளில் இருக்கும். அவை ஆற்றுக்குள் செல்கையில் ஆற்றுப்படுகையும் சாம்பலாக மாறிவிடுகிறது. பிறகு எப்படி அங்கு இறால்களும் நண்டுகளும் கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும் அது விஷமாகிப் போன அந்த நிலத்தின் நச்சுத்தன்மையோடே வளர்வதால் அவையும் நஞ்சாகிவிடுகின்றன. 

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

குழாய் உடைந்து கசிந்துகொண்டிருக்கும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பல் கழிவு

அனல் மின் நிலையம் குழாய் வழியாக வெளியேற்றும் சாம்பல் கழிவுகள் குழாய்கள் வழியாகச் செப்பாக்கம் என்ற இடத்தில் அவர்கள் அமைத்திருக்கும் சாம்பல் குளத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இல்லை, அப்படிச் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லிவிட்டு வழியிலேயே கழிவுகள் இப்படிக் கசிந்து ஆற்றில் கலந்துவிடுகின்றன. 

ஏற்கெனவே, மீட்டுருவாக்கம் செய்யமுடியாத அளவுக்கு எண்ணூர் முழுவதும் சூழலியல் சீரழிவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்துவிட்டன. அவர்கள் செய்த வரைக்கும் போதாது என்பதுபோலத் தற்போது மீண்டும் தம் ஆக்கிரமிப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளனர். எந்தவித அனுமதியும் பெறாமல் சாலை விரிவாக்கப் பணிகளையும் துறைமுகத்தின் கடற்கரைப் பணியிடத்தையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று சுதந்திர வர்த்தகத்திற்காக ரயில் வண்டிகள் நிறுத்தும் இடத்திற்காகப் புதிய கட்டுமான வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதோடு புதிதாக நிலக்கரி சேமிப்புக் கிடங்குகளையும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்காகச் சுமார் 500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமான வேலைகள் தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இன்று வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறவில்லை. தற்போதுதான் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய அனுமதி கோரும் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல, குறைந்தபட்சமாகக் கட்டுமானம் மேற்கொள்வதற்கான ஒப்புதலைக்கூடத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறவில்லை. 

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

ஆற்று நிலத்தில் கலக்கும் எண்ணூர் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள்

இதுகுறித்துப் பேசிய நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன், ``அடையார் ஆறு, கூவம் ஆறு மழைக்காலங்களில் வெள்ள நீர் கடலில் கலக்கும் வடிகாலாக மட்டுமே செயல்படும். ஆனால், எண்ணூர் ஆறு அதற்கே உள்ள தனிச்சிறப்பான பரவலில் வெள்ள நீரைப் பிடித்து வைத்துக் கடலில் கலக்காமல் தடுத்து இந்தப் பகுதியின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கிறது. இந்த எண்ணூர் ஆற்றுப் பரவலை ஆக்கிரமிப்பு செய்வதால், கடல்நீர் உட்புகுந்து இன்னும் பாதிக்கப்படாத பகுதிகளிலும் நிலத்தடி நீர் கெட்டுப்போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது" என்று கூறினார். 

`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்

ரயில்வே யார்டு (Railway Yard) மற்றும் நிலக்கரிக் கிடங்கு கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டு வேலை நடந்துகொண்டிருக்கும் கொற்றலை ஆற்றின் வெள்ள வடிகால் பகுதி

``அடையாற்றையும் கூவத்தையும் பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுகிறோம் என்று கூறி லட்சக்கணக்கான ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டனர். மற்றொரு பக்கம் எண்ணூர்-பழவேற்காடு சதுப்புநிலப் பகுதிகளில் அரசு நிறுவனங்களே ஆக்கிரமிப்பு செய்து மக்களை வறட்சியில் திண்டாட வைத்துள்ளனர். தற்போது நடந்துவரும் ஆக்கிரமிப்பும் அதிகபட்சமாக நீர்நிலைகளின்மீதே குறிவைத்து நடத்தப்படுகிறது. இது எங்கள் வாழ்வாதாரம் சார்ந்தது. ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடந்தால் பக்கத்திலிருக்கும் ஊர்கள் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கும். இந்தத் திட்டம் தவறானது, இதை நிறுத்த வேண்டுமென்று பலமுறை அரசுக்கு எடுத்துச் சொல்லியும் இன்னமும் இது நடந்துகொண்டுதானிருக்கிறது" என்றார் எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எல்.சீனிவாசன். 

இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் கடலின் தாக்கத்தை ஆறு, கால்வாய் மூலம் உள்நாட்டுப் பகுதிகளிலும் உணரமுடியும். இந்த ஆக்கிரமிப்புகளால் கொற்றலை ஆற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள காரனோடை, எடையான் சாவடி போன்ற கிராமங்கள் முதன்மைப் பாதிப்புகளைச் சந்திக்கும் அச்சம் நிலவுகிறது. வருங்காலத்தில் கடல் மட்டம் உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அத்தகைய சூழலில், எண்ணூர் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது பேராபத்திற்கு வழிவகுக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism