Published:Updated:

`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்

`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்
`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபிள் ரேஞ்சு பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள்,  ஆக்கிரமிப்புகளால் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருவதால்  அழியும் அபாயத்தில் உள்ளது.

`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்

'தென்னகத்தின் தண்ணீர் தொட்டி' எனப்படும் நீலகிரியே தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கிறது. கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்குp பருவமழை போக்கு காண்பித்துவருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, மண் திட்டுகளாய் காட்சி அளிக்கிறது. மேலும், குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகளின் நீர் மட்டம் அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பல ஆண்டுகளாக அரசு மற்றும் மக்களின் அலட்சியப்போக்கால் வனப்பகுதிகள், புல்வெளிகள், நீர்நிலைகள் சதுப்பு நிலங்கள் போன்றவற்றை முறையாகp பராமரிக்காததன் விளைவே, இன்றைக்கு ஏற்பட்டுள்ள வறட்சிக்குக் காரணம் என ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபிள் ரேஞ்சு பகுதியில் உள்ள சதுப்பு நிலம், மக்களின் ஆக்கிரமிப்புகளாலும் களைத் தாவரங்களாலும் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது. சோலை மரக்காடுகளும் புல்வெளிகளும் நிறைந்த நீலகிரியில், சதுப்பு நிலங்கள் இயற்கையின் மிகப்பெரிய நீர் வங்கியாகச் செயல்படும் தன்மை கொண்டது. மலைகளில் இருந்து கசிந்துவரும் நீரை தூய்மைப் படுத்தும் பணியைச் செய்வதோடு பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் உள்ளது.

வளர்ச்சி என்ற பெயரில், நீலகிரியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கோத்தகிரி நகரை ஒட்டிய பகுதியில், நான்கு புறமும் மலைகள் சூழ அழகிய கிண்ணம் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலம். ஒரு காலத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் பரவிக்கிடந்த இந்தப் பகுதி சுருங்கி, வெறும் 8 ஏக்கர் மட்டுமே உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் மதுபான தொழிற்சாலை கட்டப்பட்டு 2 ஆண்டுகள் செயல்பட்டது. மேலும், கால்நடை மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. இருந்தும், தற்போது இந்த சதுப்பு நிலத்தில் 7 கிணறுகள் அமைக்கப்பட்டு கோத்தகிரி நகரின் 75% தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்கிறது. எனவே, இந்த நிலத்தை மீட்கப் பலரும் போராடி வருகின்றனர்.

`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பிரகாஷ் பெட்டன் கூறுகையில், “நீலகிரியில், ஆங்கிலேயர் வருகைக்குப்பின் வெட் லேண்டு அனைத்தையும் வேஸ்ட் லேண்டு என நினைத்து, அந்தப் பகுதிகளில்  வளர்ச்சிப் பணிகளை ஏற்படுத்தினர். இதனால், பல ஏக்கர் பரப்பளவில் இருந்த சதுப்புகள் அழிந்து நாசமாயின. ரைபிள் ரேஞ்சு எனப்படும் இந்த சதுப்பில், ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டனர். பின்னர் பட்டா நிலமாக மாற்றப்பட்டு, தற்போது பல ஏக்கரில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. மேலும் பல்வேறு களைத் தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளன. வெறும் 8 ஏக்கர் சதுப்பு நிலம் மட்டுமே உள்ளது. அதுவும் மிக மோசமான ஆக்கிரமிப்பில் உள்ளது” என்றார்.

`120 ஏக்கர் இப்போ 8 ஏக்கர் ஆகிடிச்சு!' -ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படும் சதுப்பு நிலங்கள்

அழிந்துவரும் சதுப்பு நிலம் குறித்து ராஜன் கூறுகையில், “சதுப்பு நிலம் என்பது இயற்கையின் கொடை. மாசடைந்த நீரைத் தூய்மைப் படுத்தும் தன்மை கொண்டது. பல ஏக்கர் பரப்பளவில் பரந்துகிடந்த இந்த சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகளால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பலர் வாகன நிறுத்தும் இடமாக, கான்கிரீட் கழிவுகள் கொட்டப்படும் இடமாகப் பல வகைகளில் பாழ் பட்டுவருகிறது. எனவே, அரசு இதை உடனே மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த சதுப்பு நிலம் மொத்தமும் அழிந்து, சொட்டு குடிநீர் கூட இல்லாமல்போகும் நிலை ஏற்படும்” என்றார்.