Published:Updated:

மரங்கள் அற்ற நரகம் ஆகிறது கோவை!

மரங்கள் அற்ற நரகம் ஆகிறது கோவை!

##~##

'குயில் ஓசை கேட்பது இல்லை. கிளி கொஞ்சல் சாத்தியம் இல்லை. வியர்வை விரட்டும் காற்றும் இல்லை. மழையை அழைக்க மரமே இல்லை. மயானமாகி வருகிறதே நம் மண்!’ உயிர் நரம்புகளை அறுப்பதுபோல இந்தக் குறுஞ்செய்தி தற்போது கோவை மக்களிடையே பரவி பெரும் அதிர்வைக் கிளப்பிவருகிறது!

 விரிவாக்கம் செய்யப்பட்ட கோவையில் போக்குவரத்து வசதிக்காக, சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக, சாலை ஓரங்களில் நிற்கும் மரங்களை வெட்டி வீழ்த்துவதுதான் வேதனையே. இருபுறமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களுடன் பசுமைப் பாதையாக இருந்த லாலி ரோடு சிக்னல் தொடங்கி மருதமலை நோக்கிய சாலையில் சமீபத்தில் மரங்கள் வீழ்த்தப்பட்டபோது, பொங்கி எழுந்தார்கள் பசுமைக் காவலர்கள்.

மரங்கள் அற்ற நரகம் ஆகிறது கோவை!

'மரம் வெட்டுவதற்கான அரசு உத்தரவைக் காண்பியுங்கள். எந்தெந்த மரங்களை மட்டும் வெட்ட வேண்டும் என்று அடையாளம் போட்டுக் கொடுத்துள்ளதா நெடுஞ்சாலை?’ என்று இந்தப் பிரச்னைக்கு எதிராகக் குரல்கொடுத்தார்கள். சூழலியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பிரச்னை, வெகுஜன மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, நீதிமன்றம் வரை போய் நின்றது. கோவையில் அக்னி நட்சத்திரத்தைத் தாண்டி தகிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் பிரச்னை குறித்து பலதரப்பட்டவர்கள்

மரங்கள் அற்ற நரகம் ஆகிறது கோவை!

நம்மோடு பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை...  

லட்சக்கணக்கில் மரங்களை நட்டு, துணை ஜனாதிபதியிடம் 'பசுமைப் போராளி’ விருதை பெற்றவர் அரசுப் பேருந்து நடத்துனரான யோகநாதன். ''ஒரு மரத்தை வெட்டி வீழ்த்துறது மூலமா கோடிக்கணக்கான பணத்தை இழக்கிறோம். 60 வருஷமா நிற்கிற மரம் தன் ஆயுள் முழுக்க 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆன ஆக்ஸிஜனைத் தருது. 10 லட்ச ரூபாய் மதிப்பில் ஆன காற்று மாசுவைத் தடுக்குது. சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆன மண் அரிப்பைத் தடுக்குது. இப்படி இன்னும் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். ஒரு மரத்தோட மதிப்பே இப்படினா, கோவையில் சமீப வருஷங்கள்ல மட்டும் குறைஞ்சது 5,000 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கு. மரங்களை வெட்டாதீங்கனு நாங்க குரல் கொடுக்குறது எனக்காகவும் எங்க பிள்ளைகளுக்காகவும் இல்லை. அதை வெட்டுறவங்களோட சந்ததிகளுக்கும் சேர்த்துதான். ஆனா, இது யாருக்கும் புரியுறது இல்லை...'' என்கிறார் வருத்தத்துடன்!

'ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், ''மரவேட்டைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிரான ஆட்கள் இல்லை. ஆனால், சாலை விரிவாக்க எல்லையைத் தாண்டி நிற்கும் மரங்களை வெட்டுவதைத்தான் எதிர்க்கிறோம். இன்னொரு பக்கம் கட்டடங்களுக்கு இடையூறாக இருக் கிறது என்று மரங்களின் வேரில் ஆசிட்டை ஊற்றிக் கருக்கும் கொடூர மும் நடக்கிறது. கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் இது.

இப்போதே கோவையின் பாதிப்  பகுதி வறண்டு கிடக்கிறது. குயில்களும், கிளிகளும் கூடுகட்டிக் கொஞ்சிய அவினாசி சாலை, இன்று கான்கிரீட் காடாக மாறிவிட்டது. பறவைகள் அற்ற ஊராக கோவை மாறிவருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இனி குடிக்கக்கூட தண்ணீர் இருக்காது'' என்று எச்சரிக்கை மணியடிக்கிறார்!

மரங்கள் அற்ற நரகம் ஆகிறது கோவை!

மரங்களை காக்க சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் வழக்கறிஞர் வெண்ணிலா. ''மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அதேபோல் மக்களின் நல்வாழ்வுக்காக மரங்களைக் காக்க வேண்டியதும் அரசின் கடமைதான். 100 வருடங்களுக்கும் மேலாக மனிதர்களுக்கும், இதர ஜீவன்களுக்கும் உதவி செய்த மரங்களைக்

மரங்கள் அற்ற நரகம் ஆகிறது கோவை!

கால்மணி நேரத்தில் காவு வாங்கிடுறாங்க. வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், 'ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன்’ முறையில் மரத்தை வேரோடு ஓரிடத்தில் இருந்து அகற்றி இன்னொரு இடத்தில் நடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

திருச்சி உட்பட இந்தியாவில் பல இடங்களில் இந்த முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேறு இடத்துக்குக் கொண்டுபோய் வைக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய மரமாக இருந்தால் அதை வெட்டாமல், சாலையைக் கொஞ்சம் வளைத்துப் போடலாமே. இடது புறம் பெரிய மரம் இருக்கிறது என்றால் அதற்கு எதிர்புறம் சாலையைக் கூடுதலாக அகலப்படுத்தலாமே. பெங்களூருவில் இந்த முறையில் பல இடங்களில் சாலை போடப்பட்டுள்ளது...'' என்கிறார்.  

நியாயம்தானே?

-எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு