Published:Updated:

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!

Published:Updated:

கிச்சனில் நிற்கும் அம்மாவிடம் 'மம்மி... எனக்கு ஒரு குட்டி தோசை..’, என செல்லக் கோரிக்கைவைக்கும் குட்டீஸைப் பார்த்திருப்போம். குட்டிப் பொருட்கள் மீது குட்டீஸுக்கே இத்தனைப் பிரியம் என்றால், பெரியவர்களுக்குப் பிடிக்காமலா போகும்? இப்படித்தான் சிலரைத் தன் பக்கம் வசியப் படுத்திவைத்திருக்கிறது 'போன்சாய்’ மரங்கள்!

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!
##~##

சீன வேர்ச் சொல்லில் இருந்து உருவான ஜப்பானிய வார்த்தையான 'போன்சாய்’க்குத் 'தொட்டிகளில் வளரும் மரம்’ என்பது பொருள். தருமபுரி, அப்பாவு நகரில் உள்ள மதிவாணன் ஒரு தீவிர போன்சாய் பிரியர். விசாலமான இவருடைய வீட்டின் மொட்டை மாடியில் காலடி எடுத்துவைத்தாலே பூங்காவுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு.

திரும்பிய திசையெல்லாம் பசுமை காட்டி நிற்கும் செடிகள் காதோரங்களில் கிசுகிசுத்து என்னை வரவேற்கின்றன. அதில் பெரும்பாலானவை போன்சாய் மரங்கள் என்பது கூடுதல் சிறப்பு. பல ஆண்டுகளாக மொட்டை மாடியைச் செடிகளால் நிறைத்து வைத்திருக்கும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக போன்சாய் மரங்களைப் பாசத்தோடு பராமரித்து வருகிறார்.

போன்சாய் மரங்கள்பற்றி விசாரித்தாலே உற்சாகமாகிறார் மதிவாணன். ''பொதுவா மரம், செடிகள் வளர்ப்பதில் எனக்கு நிறைய விருப்பம். இந்த வீடு கட்டின சில நாட்களிலேயே மாடித் தோட்டத்துல செடிகளை வளர்க்க ஆரம்பிச்சுட்டோம். இடையில போன்சாய் மரங்கள் மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. வானத்தை நோக்கி தலையை உயர்த்திப் பார்க்கவைக்கிற ஆல், அரசு உள்ளிட்ட மரங்களைக் குட்டியூண்டு தொட்டியில் பார்த்தப்போ மனசு ரொம்பக் குதூகலமாகிடுச்சு. உடனே, எங்க வீட்டு மொட்டை மாடியில் போன்சாய் வளர்க்க ஏற்பாடு செஞ்சேன். தினமும் காலையில் இந்த மரங்களோட ஒரு மணி நேரமாச்சும் செலவு செய்வேன்.

தண்ணீர் விடுறது, வேர் மற்றும் கொழுந்துகளை  வெட்டிவிடுறது, கிளைகளை நாம் விரும்பும் கோணத்தில் வளைச்சு அலுமினியக் கம்பிகளால் கட்டி விடுறதுனு நேரம் போவதே தெரியாது. இதோ இந்த ஆலமரம்தான் எங்க வீட்டு மாடிக்கு வந்து சேர்ந்த லேட்டஸ்ட் போன்சாய். சமீபத்துல ஒகேனக்கல் காட்டுப் பாதை வழியாப் போய்க்கிட்டு இருந்தேன். ஒரு பாறை இடுக்கில் முளைச்சிருந்த இந்தச் செடி என் கண்ணில் பட்டது. பல வருஷமா உணவு இல்லாமத் தவம் இருக்கும் முனிவர் மாதிரி பூஞ்சையா நரம்புகளைக் காட்டிக்கிட்டு இருந்தது. உடனே உள்ளூர்வாசி ஒருத்தர் உதவியுடன்  வேருடன் பிடுங்கிட்டு வந்துட்டேன். கடந்த சில வாரங்களா  ஸ்பெஷலா பராமரிச்சுட்டு இருக்கேன். இதே மாதிரி கட்டட வெடிப்பிலோ, பாறை இடுக்கிலோ முளைச்சு இருந்த பல மரங்கள் இப்போ நம்ம வீட்டு மாடியில் போன்சாய் ஆகிடுச்சு.

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!

எங்க மாடியில் ஆல், அரசு, கொய்யா, எலுமிச்சை, மா, சப்போட்டா உள்ளிட்ட மரங் கள் குட்டித் தோற்றத்தில் பிரமாண்டமா நிக்குது. சீனாவுக்கு ஏற்றுமதியாகும் 'க்ளே’ மண் தொட்டிகளை இதுக்காகவே கேரளாவில் இருந்து வாங்கிட்டு வந்தோம். எலுமிச்சையும் சப்போட் டாவும் இப்போ பூவும் பிஞ்சுமா இருக்கு. கிட்டத் தட்ட இந்த மரங்கள் எல்லாமே இப்போ எங்க வீட்டுக் குழந்தைகள் மாதிரி ஆயிடுச்சு.

என் மனைவி, பிள்ளைகள் எல்லோருமே இந்த மரங்களை ஆர்வமாப் பராமரிக்கிறாங்க. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடிகளும் எங்க வீட்டு மாடித் தோட்டத்துல உண்டு. இந்தத் தோட்டத்துல இருக்கிற மரங்கள் எல்லோமே மேஜிக் பார்ட்டிங்கதான். இந்த மரங்களுடன் சில மணி நேரம் இருந்தா, டாக்டரி டம் போகாமலே டென்ஷன், பி.பி. எல்லாமே நார்மலுக்கு வந்துடுது'' என்கிறார் போன்சாய் மரங்களை வருடியபடி!

மதிவாணனும் போன்சாய் மரங்களும்!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்