Published:Updated:

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

Published:Updated:
”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

'வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தன்னுடைய சொந்த ஊரான செட்டிப்பாளையம் பற்றிய நினைவுகளை இங்கு பகிர்ந்துகொள்கிறார்...

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”
##~##

''என்னுடைய ஊர் செட்டிப்பாளையம் சிறிய கிராமம்தான். மனிதர்களின் எண்ணிக்கையைவிட பனை மரங்களின் எண்ணிக்கைதான் அதிகமா இருக்கும். நானும் என் நண்பர்களும் ரெட்டை மரம், வளத்தி மரம்னு பனை மரங்களுக்குப் பேரு வெச்சிருப்போம். அந்தப் பனை மரத்தடியிலதான் பாண்டி குழி, ஆடுபுலி ஆட்டம், ஐந்தாங்கல்னு கிராமத்து விளையாட்டுகளை விளையாடித் திரிவோம். பனை மரங்களை எல்லாம் எங்களோட சொந்தக்காரங்களைப் போலவே நினைப்போம்.

ஒரு தடவை நான் ஒரு பனை மரத்து மேலே சர்சர்னு ஏறிட்டேன். ஆனால், இறங்குறது எப்படினு தெரியலை. மரத்து மேலேயே உட்கார்ந்துக்கிட்டுச் சத்தம் போட ஆரம்பிச்சிட்டேன். என் சத்தத்தைக் கேட்டுட்டு அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடிவந்து என்னை மரத்திலேர்ந்து இறக்கிவிட்டாங்க.

எங்க ஊர்ல சின்ன குட்டை ஒண்ணு இருக்கு.அது தான் எங்களுக்கு நீச்சல் குளம். எப்போ விளையாடி முடிச்சாலும்  அந்தக்

குட்டைக்குத்தான் குளிக்கப் போவோம். நண்பர்களோட ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சு விளையாடுவேன். எங்க அப்பாவுக்கு நான் அந்தக் குட்டைக்குப்போய்க் குளிக்கிறது சுத்தமாப் பிடிக்காது. நான் ஒரு தடவை குட்டையில குளிச்சிட்டு இருந்தப்ப என்னைப் பார்த்துட்டார். வீட்டுக்கு  என்னை அழைச்சுட்டுப் போய் விறகுக் கட்டையாலேயே  பின்னி எடுத்துட்டார். என் பாட்டிவந்துதான் என்னைக் காப்பாத்தினாங்க. எங்க ஊர்ல கொண்ணவாச்சினு  மிட்டாய் விற்கிற பாட்டி ஒண்ணு இருந்துச்சு. அவர்கிட்ட கடனுக்கு மிட்டாய் வாங்கித் தின்னுட்டு, காசு தரலைன்னா சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்துடும். ஆனா அப்பா, அம்மா இல்லாத  யாராச்சும் போய் மிட்டாய் கேட்டா, காசு வாங்காம கை நிறைய மிட்டாய்களை அள்ளித் தரும் அந்தப் பாட்டி.

தெருக்கூத்துக்கு எங்க ஊர் ரொம்பப் பிரபலம். என்னோட தாத்தாவேதெருக் கூத்துக் கலைஞர்தான். திருவிழாசமயங் கள்ல என் நண்பர்களோட சேர்ந்து விடிய விடிய தெருக்கூத்துப் பார்த்தது இப்பவும் ஞாபகத்துல இருக்கு.  

சுத்துப்பட்டு ஏரியாவுல எங்க ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாதான் ரொம்பப் பிரசித்தமானது. திருவிழாவையட்டி காவடி ஆட்டம், கலை நிகழ்ச்சிகள்னு களைகட்டும். எங்க ஊர் இளைஞர்களை அந்தச் சமயத்துல கையிலேயே பிடிக்க முடியாது.  

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறப்ப  திருவிழாவுல பாட்டுப் போட்டி நடத் தினாங்க.  அப்பா ஒரு பாட்டு எழுதித் தந்தாரு. 'காந்தி வாழ்ந்த நாடு... தவிக்குது பாரு’னு சமூக அக்கறையோட ஆரம்பிக்கிற அந்தப் பாட்டைப் பாடினேன்.  எனக்குப் பரிசு தராம,  சினிமாப் பாட்டுப் பாடினவனுக்குப் பரிசு கொடுத் தாங்க. ஆனா, அதே மேடையிலேயே  சிவராமன் என்கிற ஆசிரியர் என் னோட பாட்டைப் பாராட்டிப் பேசி  பத்து ரூபாய் கொடுத்தார். அவர் அப்போ என்னை ஊக்கப்படுத்தாம  இருந்தா, எனக்கு இந்த அளவுக்குத் தன்னம்பிக்கை வந்திருக்காது. அவர் தந்த பத்து ரூபாயை இப்பவும் பொக்கிஷமா பாதுகாக்கிறேன்.

எங்க ஊரோட இன்னொரு சிறப்பம்சம், ஊர்ல ஏதாவது ஒரு வீட்டுல யாராவது  இறந்துட்டாங் கன்னா, ஊர்ல உள்ள எல்லாரும் அந்தத் துக்கத் துல பங்கேற்பாங்க. நல்லதுக்கு வரல்லைன்னா லும் கெட்டதுல பங்கெடுத்துக்கணுங்கிற எங்க மக்களோட உயர்ந்த எண்ணம் நகரத்துல வாழ்ற வங்களுக்குக் கிடையாதுங்க.

இப்பக்கூட நான் என் நண்பர்களோட சேர்ந்து, பள்ளிக்கூடம் போய்ட்டு வந்ததை எல்லாம் நினைச்சு ஏங்கிக்கிட்டுதான் இருக்கேன்.. மறுமடியும் சிறுவனாக மாட்டோமானு!''

”பனை மரங்கள்தான் எங்கள் சொந்தம்!”

- ம.சபரி
படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்