Published:Updated:

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரளா வழக்கு!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரளா வழக்கு!
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரளா வழக்கு!
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரளா வழக்கு!

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து,  மத்திய அரசின் மூவர் குழு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து அனுமதி அளித்தது. இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு உயர்த்தி வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 140 அடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில், அணையின் இரு மதகுகளை சரிசெய்யும் வரை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்றும், பொதுமக்கள் அச்சத்தை தவிர்க்க நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.