Published:Updated:

1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 50 பைசா: சாதனை கிராமம்!

1 லிட்டர்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  50 பைசா:  சாதனை கிராமம்!
1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 50 பைசா: சாதனை கிராமம்!
1 லிட்டர்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  50 பைசா:  சாதனை கிராமம்!

கைகாதா: சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர்   குடிநீரை 50 பைசாவிற்கு  விற்பனை செய்து நாட்டிற்கே முன்னோடியாக மேற்கு வங்க மாநில கிராமம் ஒன்று  திகழ்கிறது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுசுதன்கதி என்ற கிராம மக்கள்   விஷத்தன்மையுள்ள மாசுபட்ட நிலத்தடி நீரைக்  குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அதிவேக மாற்றம் அருகிலுள்ள கிராமங்களையும்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிராம கூட்டுறவு சொசைட்டியான ‘மதுசுதன்கதி சமாபாய் கிரிஷி உன்னயன் சமிதி’ பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அழுக்கு நீரை சுத்திகரிக்கும் ஆலை ஒன்றை நிறுவியது. இதில் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய படிகாரம், யுவி வடிகட்டி உட்பட நான்கு கட்டமாகச்  சுத்திகரிப்பு செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த விலையில் அதிக தண்ணீரைச்  சுத்தப்படுத்தும் இந்தத்  தொழில்நுட்பத்தால் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை உருவாக்க 30 பைசா மட்டுமே செலவாகிறது. இதை இந்த கிராம மக்கள் 50 பைசாவுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கும் விநியோகம் செய்கின்றனர்.

இது குறித்து கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் ஹலதர் சர்மா கூறுகையில், “தற்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் 2000 லிட்டர் தண்ணீரைச்  சுத்தமாக்கி ஜாடிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி அதை விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள 200 குடும்பங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்" என்றார்.

1 லிட்டர்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  50 பைசா:  சாதனை கிராமம்!

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் உட்பட 9  மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையான விஷத்தன்மையுள்ளதாக மாறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.