Published:Updated:

விரைவில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் குறைப்பு: கெஜ்ரிவால் உறுதி!

விகடன் விமர்சனக்குழு
விரைவில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் குறைப்பு: கெஜ்ரிவால் உறுதி!
விரைவில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் குறைப்பு: கெஜ்ரிவால் உறுதி!
விரைவில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் குறைப்பு: கெஜ்ரிவால் உறுதி!

புதுடெல்லி: விரைவில் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணம் குறைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள 'கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ்' சுற்றுலாவின் தொடக்க விழா இன்று நடந்தது.

இதில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ''தேர்தல் வாக்குறுதியில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்திருந்தேன்.

அதற்குண்டான நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் குறைப்பு என்ற ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு விரைவில் அறிவிப்பேன். அதேபோல், இலவச தண்ணீர்  வழங்குவதில் ஏதேனும் புகார் இருந்தால் ஹெல்ப் லைன்கள் மூலம் அறிவிக்கலாம்'' என்றார்.

முன்னதாக, ''தேர்தலின்போது டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர், குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி கொடுத்திருந்தது. இதை நிறைவேற்றுவது மிகவும் கடினம். இலவச திட்டங்கள் என்பது ஓட்டு வாங்குவதற்காகவே; இது மக்களை ஏமாற்றும் செயல்" என டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.