Published:Updated:

நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகம் ஒரே நாளில் மூடப்பட்டது!

Vikatan Correspondent
நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகம் ஒரே நாளில் மூடப்பட்டது!
நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகம் ஒரே நாளில் மூடப்பட்டது!

ந்தியாவின் முதன்முதலில் நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகமான ரியல் போஸிடான்,  துவங்கப்பட்ட ஒரே நாளில்,  பாதுகாப்பு காரணங்களுக்காக  சீல் வைக்கப்பட்டு அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டது.

இதுகுறித்து கூறிய அகமதாபாத் காவல்துறை ஆய்வாளர் தேவங் தேசாய், "ரியல் போஸிடான் கட்டத்தை நிலத்திற்கு அடியில் அண்டர்வாட்டார் உணவகமாக கட்ட,  போதிய  அனுமதிகளை முறையாக அதன் உரிமையாளர் பெறவில்லை. மேலும் இந்த உணவகத்தின் நீர்வாழ் காட்சி சாலையில் (அக்வாரியம்) தண்ணீர் கசிகிறது.

முறையாக அனத்து சான்றிதழ்களையும் பெற்ற பின்னரே உணவகம் செயல்பட அனுமதி வழங்கப்படும்"  என தெரிவித்தார்.

நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகம் ஒரே நாளில் மூடப்பட்டது!

இதற்கு  பதிலளித்த பாரத் பட், அரசு தரப்பில் கூறப்படும் எவ்வித குற்றச்சாட்டும் உண்மையானது அல்ல எனவும், தனது உணவகத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக இதை நிரூபிக்கத் தயார் எனவும்,  தனது உணவகம் மீண்டும் செயல்பட துவங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகம் ஒரே நாளில் மூடப்பட்டது!

மேலும், " மீன்கள் உள்ள தண்ணீர் சற்று கலங்கலாக இருப்பதால் மீன்கள் சரியாக பார்வையாளர்களுக்கு தெரிவதில்லை. மேலும் அதிக ஆர்டர்கள் வந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. இது மட்டும்தான் இங்க பிரச்னையே தவிர வேறு ஒன்றும் இல்லை " என்று கூறுகிறார் பாரத் பட்.

2.5 கோடி ரூபாய் செலவில்,  சுமார் 4500 மீன் வகைகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது இந்த உணவகம். இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் ரெஸ்டாரென்ட் என ஆவலோடு பார்வையிட காத்திருந்த மக்களுக்கு பெரிதும் ஏமாற்றமே!

தா. நந்திதா

(மாணவ பத்திரிக்கையாளர்)