Published:Updated:

உலகின் தூய்மையான நதிகளின் பட்டியலில் கங்கைக்கு இடம்: உமா பாரதி நம்பிக்கை

Vikatan Correspondent

2018ம் ஆண்டிற்குள் உலகின் தூய்மையான நதிகள் பட்டியலில் கங்கை நதி இணையும் என மத்திய அமைச்சர் உமா பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் 2வது ஆண்டு நிறைவு விழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

உலகின் மிகவும் மாசடைந்த 10 நதிகளின் பட்டியலில் கங்கை நதி உள்ளதாக வேதனை தெரிவித்த உமா பாரதி, 2018ம் ஆண்டில் உலகின் 10 தூய்மையான நதிகள் பட்டியலில் கங்கை இணையும் என்று உறுதிபட தெரிவித்தார். கங்கையை தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதி ஒரு பிரச்சனையில்லை என்று கூறிய உமாபாரதி, தேவையான நிதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 29 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி வரை செலவிட்டும் கங்கை நிதியை தூய்மைப்படுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்த உமாபாரதி, கங்கை தூய்மைப்படுத்தும் உன்னத திட்டத்திற்கு மோடி தலைமையிலான பாஜக அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்.