Published:Updated:

கோவையில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்க தடை!

தி.விஜய்
சண்முகபாண்டியன்.தே
கோவையில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்க தடை!
கோவையில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்க தடை!

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் தட்டுகளை தயாரிக்கவோ விற்கவோ கூடாது  என மாநகராட்சி ஆணையர் விஜய்கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்க தடை!

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியின் கீழ் வரவுள்ளதால், அதற்கான பணிகள் வேகமாக நடந்துவரும் வேளையில், தினமும் கோவை மாநகராட்சியில் 600 டன்னுக்கு மேல் சேரும் குப்பைகளில் பெரும்பாலும் மக்காத, மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளே இருக்கின்றன.  மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, இயற்கைக்கு கேடு விளைவிக்காத பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் சமீபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சி நடத்தினர். அதில் துணிப்பைகள், காகித பைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கூறியது.

இதையடுத்து, கோவை இயற்கை வளம் மேலும் கெடாமல் இருக்க, மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

மதுரையில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்திய கடைகாரர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் 1000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.