Published:Updated:

கர்நாடகாவில் உலவும் `ஜங்கிள் புக்' பகீரா! - டிரெண்டாக்கும் நெட்டிசன்கள்

கருஞ்சிறுத்தை/ பகீரா
கருஞ்சிறுத்தை/ பகீரா ( Shaaz Jung )

அந்த ஒளிப்படம் ஜங்கிள் புக் படத்தில் வரக்கூடிய பகீரா கதாபாத்திரத்தை நினைவுகூர்வதாகச் சிலாகித்துக் குறிப்பிட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, @earth என்ற ட்விட்டர் கணக்கில் அபூர்வமான கருஞ்சிறுத்தை ஒன்றின் படம் பதிவிடப்பட்டது. கர்நாடக காட்டுக்குள், குறிப்பாக, கபினியில் உலவிக் கொண்டிருந்த அந்தக் கருஞ்சிறுத்தையின் படத்தை ஷாஸ் ஜங்க் (Shaaz Jung) என்பவர் எடுத்திருந்தார். இந்தப் படத்தை அவர் 2019-ம் ஆண்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போது பதிவேற்றியுள்ள @earth, "இந்தியாவின் கபினி காட்டுக்குள் உலவும் கருஞ்சிறுத்தை" என்று குறிப்பிட்டுள்ளது.

அந்தப் படம் நெட்டிசன்களின் கண்களில் படவே, அற்புதமான கோணத்தில், துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த ஒளிப்படத்தை அவர்களால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அந்த ஒளிப்படம் 'ஜங்கிள் புக்' படத்தில் வரக்கூடிய பகீரா கதாபாத்திரத்தை நினைவுகூர்வதாகச் சிலாகித்துக் குறிப்பிட்டனர். இன்னும் சிலர், 'இது எப்போது வகாண்டாவை விட்டு வெளியே வந்தது!' என்று ட்வீட் செய்துள்ளனர்.

Vikatan

கருஞ்சிறுத்தைகள் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மிகவும் அரிதாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் படமெடுப்பது பல காட்டுயிர் ஒளிப்படக்காரர்களின் கனவாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், அதன் இயல்பான வாழிடத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிரெண்டாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒளிப்படத்தைப் பார்ப்பதற்கு அனிமேட் செய்ததைப்போல் தோற்றமளிக்கிறது, ஆனால், உற்றுப் பார்த்தால்தான் உண்மையானது என்று தெரியும் அளவுக்கு அது துல்லியமாக இருக்கிறது என்று அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அதேநேரம், இந்தப் படத்தை எடுத்த ஷாஸ் ஹங்குக்கு உரிய போட்டோ கிரெடிட் கொடுக்காமல் பகிர்ந்துள்ளதைச் சிலர் விமர்சித்தும் வருகின்றார்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு