Published:Updated:

விசைப் படகுக்காரங்களுக்கும் நாட்டுப் படகுக்காரங்களுக்கும் மனவருத்தம் ! திரைகடலோடியும் ~ 4

திரைகடலோடியும்

அந்தத் தலைவர் தன்னை உலக மீனவர்களின் ஒப்பற்ற தலைவர் போலவும் எதிரிலிருந்த என்னை பத்திரிகையாளனாகவும், கற்பனை செய்திருந்தார் போலும்! `நீங்க ஏன் வக்கீல் மாரி குறுக்கக் குறுக்க கேக்கியோ? நாங்க என்ன சொல்றமோ அத எழுதிக்கிட்டா போதாதா?’ என்றார்.

விசைப் படகுக்காரங்களுக்கும் நாட்டுப் படகுக்காரங்களுக்கும் மனவருத்தம் ! திரைகடலோடியும் ~ 4

அந்தத் தலைவர் தன்னை உலக மீனவர்களின் ஒப்பற்ற தலைவர் போலவும் எதிரிலிருந்த என்னை பத்திரிகையாளனாகவும், கற்பனை செய்திருந்தார் போலும்! `நீங்க ஏன் வக்கீல் மாரி குறுக்கக் குறுக்க கேக்கியோ? நாங்க என்ன சொல்றமோ அத எழுதிக்கிட்டா போதாதா?’ என்றார்.

Published:Updated:
திரைகடலோடியும்

புதுக்கோட்டையிலிருந்து ஆவணப்பட இயக்குநரும் செயல்பாட்டாளருமான புதுகை செல்வாவுடன் பேருந்தில் மணல்மேல்குடி போய்ச் சேர நண்பகல் ஆகிவிட்டது. அங்கே இந்தியன் கணேசன் எங்களுக்காகக் காத்திருந்தார். செல்வாவின் அழைப்பின் பேரில் அவர் எனது புதுக்கோட்டைப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பேருந்து நிலையத்தின் அருகிலிருந்த பெட்டிக்கடையொன்றில் வெயிலுக்கு இதமாக உப்பிட்ட நாரத்தை பானம் வாங்கித் தந்தார். எலுமிச்சை பானத்துக்குப் பழகியவன் நாரத்தை பானத்தின் அருமையான சுவையை முதன்முதலாக அறிகிறேன். பிறகு அருகிலிருந்த மீன் சந்தைக்கு அவர் என்னை அழைத்துப் போனார்.

தேவஸ்வம் நிலத்திலிருக்கும் மணல்குடி மீன்சந்தை, கோயிலுக்குச் சொந்தமானது. அதில் குத்தகைதாரராய் உட்கார்ந்திருந்த அர்ஜுனனை (55, மணமேல்குடி) அறிமுகம் செய்து வைத்தார் கணேசன். கடற்கரையிலிருந்து சந்தைக்கு எடுத்துவரப்படும் மீன்களை உடனிருந்த ஒருவர் ஒரு தடித்த கட்டையால் கிளறிக் காண்பித்து விட்டு ஏலமிட்டுக் கொண்டிருந்தார். ஏலம் முடிந்ததும் வலைக்காரர், மீன் ஏலம் எடுத்தவர், தொகை போன்ற விவரங்களை ஏலமிட்டவர் சொல்லச் சொல்ல, அர்ஜுனன் அவ்விவரங்களை ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொண்டார்.

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீன் சந்தை மிகவும் துப்புரவாக இருந்தது என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஓட்டுக்கூரை வேய்ந்த விசாலமான நிழல் தாங்கலில் சிமென்ட் தளத்தின் நான்கு பக்கமும் பெண்கள் வரிசையாகக் கடை விரித்திருந்தனர். நிழல்தாங்கலின் தென்புறமாக, தார்ப்பாய் நிழலில் நிறைய பெண்கள் கருவாட்டுக் கடைகள் போட்டிருந்தனர். சந்தைக்கு வருகிற மீனை வாங்கிச் சுத்தம் செய்து கருவாடாக்கி விற்பவர்கள் அந்தப் பெண்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மணமேல்குடி மீன்சந்தையில் 52 பெண்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் அண்டைக் கிராமங்களுக்கும் தலச்சுமடாய்ச் சென்று மீன் விற்கின்றனர். இவர்களைத் தவிர ஆறேழு கருவாட்டு வியாபாரிகள் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை சந்தைமுறை அன்று சந்தையில் இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் மீன் விற்கிறார்கள். இந்தச் சந்தையில் ஐஸ் மீன்கள் விற்பனைக்கு வருவதில்லை. இங்கே விற்பனையாகாத மீன்கள் ஐஸ் போடப்பட்டுக் கட்டுமாவடிச் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

கணேசன் என்னை அர்ஜுனனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் அருகில் போய் உட்கார்ந்தேன். சந்தையின் இயல்பான சந்தடிக்கிடையில் புதுக்கோட்டைக் கடற்கரையைப் பற்றிப் பேசத் தொடங்கிய அர்ஜுனன், மீன் சந்தையில் தான் குத்தகைதாரர் ஆனதன் பின்னணியையும் ஓர் அரசியல் வெள்ளை அறிக்கையின் நுட்பத்துடன் சொல்லத் தொடங்கினார்.

முன்பொருநாள், கள்ளிவயல் தோட்டத்தில் (தஞ்சாவூர்) ஓர் இஸ்லாமிய மீனவத் தலைவரைச் சந்தித்தபோது கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு நேர்காணலில் மேலும் கவனம் பேண முடிவு செய்திருந்தேன். அந்தத் தலைவர் தன்னை உலக மீனவர்களின் ஒப்பற்ற தலைவர் போலவும் எதிரிலிருந்த என்னை பத்திரிகையாளனாகவும், கற்பனை செய்திருந்தார் போலும்! `நீங்க ஏன் வக்கீல் மாரி குறுக்கக் குறுக்க கேக்கியோ? நாங்க என்ன சொல்றமோ அத எழுதிக்கிட்டா போதாதா?’

துப்பாக்கிக் குண்டு தாக்கிய விசைப்படகு
துப்பாக்கிக் குண்டு தாக்கிய விசைப்படகு

``புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு வகையான கடல் தொழில் நடக்குது நாட்டுப்படகு, விசைப்படகு, இலங்கைக்கும் நம்ம நாட்டுக்கும் இடைப்பட்ட கடல்ல பவர் எஞ்சின் வச்சு இழுப்புவலை வச்சு விசைப்படகுகள் மீன் பிடிக்குது; நாட்டுப்படகு பச்சை இறால், வௌமீனு, கௌக்கன், செங்கணி, நகர, ஓரா மாதிரி சின்ன மீன்களப் புடிக்கிறாக. சிறுபடகுக `கீச்சாம் மூச்சான் வலை’ன்னு ஒண்ணு, கணவ புடிக்கிறதுக்குப் பயன்படுத்துறாங்க அடில கிடக்கற நண்டுலயிருந்து எல்லாமே அந்த வலையில மாட்டும்.

தள்ளுவலைன்னு ஒன்னு இருக்கு. நாட்டுப் படகில கட்டி இழுக்கற வலை சின்ன ராலு, ஓரா செங்கனி, நண்டு கணவாயெல்லாம் இதுலயும் கிடைக்கும். நாட்டுப் படகில சீலா, மொரலு, மாவூளா மாதிரி மீனுகள வலவச்சிப் புடிப்பாக. இவுக ஆழ்கடலுக்குப் போயி கட்டா, பார மாதிரி பெரிய மீனுகளப் புடிப்பாக விசைப்படகுகள் இழுவை மடியில கத்தாள, காரப்பொடி, பெரிய திருக்கை மாதிரி மீனும் புடிக்கிறாங்க அவங்க ஒருநாள் கடலுக்குப் போறதுக்குப் பத்தாயிரம் ரூபா செலவாயிடும். நாலுபேர லேபரா அனுப்புவாங்க. 25,000, 30,000 ரூபா ஒரு நாளைக்கு வருமானம் வந்தாதான் கட்டுப்படியாகும். வருமானம் இல்லாததினால கோட்டைப்பட்டணத்துல விசைப்படகுகள நிறுத்தி வச்சிருக்காங்க.

நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் மாதிரி இல்லாம தஞ்சாவூர், புதுக்கோட்டையில நாட்டுப்படகுங்க வாரத்தில நாலு நாளைக்குக் கடலுக்குப் போகலாம், மூணு நாளு விசைப்படகுக்கு. 30 வருசமா இங்க இதுதான் நடைமுறை. சிறு படகுகளைப் பொறுத்தவரை, அடி கரையில மீன்புடிக்கிறவுக வாரத்தில ஏழு நாளும் போகலாம். ரெண்டு ரெண்டரை நாட்டிக்கல்லுக்குள்ள (4.5 கிலோமீட்டர்) போறவங்க இவங்க. கரைல இருந்துகிட்டு கடல்ல கொண்டு வலயப் போட்டுக்கிட்டு இடுப்புல கயிறுகட்டி இழுக்கறது இழுப்பு வலை (கரைவலை/ கரைமடி). சில கிராமங்கள்ல இப்பவும் இருக்கு. ஒரு சில கிராமங்கள்ல- புதுக்குடி, ஆர்.புதுப்பட்டினம் மாதிரி- நண்டு வலை போடுவாங்க.

படகுகளிலிருந்து வலைகளை பத்திரப்படுத்தும் மீனவர்கள்
படகுகளிலிருந்து வலைகளை பத்திரப்படுத்தும் மீனவர்கள்

35 மீன்பிடி கிராமங்கள் புதுக்கோட்டைல இருக்கு… இப்போ விசைப் படகுக்காரங்களுக்கும் நாட்டுப் படகுக்காரங்களுக்கும் இடையில ஒரு மனவருத்தம் இருந்திட்டிருக்கு- விசைப்படகுக்காரங்க ரெட்டமடி இழுக்கறாங்க; அப்புறம் சுருக்குமடின்னு ஒண்ணு இருக்கு (நாட்டுப்படகு). இந்த ரெண்டுமே சட்டத்துக்கு விரோதமானது. அரசாங்கம் ரெண்டையுமே தடை பண்ணியிருக்கு. ஆனா, அவங்க மறைமுகமா இழுத்துக்கிட்டே இருக்காங்க. ஓரளவுக்கு எல்லாரையும் ஒரு நெலமைக்குக் கொண்டு வந்தாச்சு. ஆனா, சேதுபாவாசத்திரம் (தஞ்சாவூர் மாவட்டம்) மட்டும் கட்டுக்கு அடங்கல. அவங்களுக்கு டோக்கன் (கடலுக்குள் போக அனுமதி) குடுக்கக் கூடாதுன்னு ரெண்டு மாசமா போராட்டம் பண்ணி, இப்போ அந்த பவர் எஞ்சின் (விஞ்ச் வசதி) போட்டுகளத் தட பண்ணி வச்சிருக்காங்க.”

நீங்கள் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீர்கள்?

``என்னுடைய பூர்வீகம் மீன்பிடி தொழில்தான்… சிறுவயசில மீன் புடிச்சிருக்கேன். வளந்தப்புறம் தஞ்சாவூர்ல ஒருத்தரோட பார்ட்னரா சேர்ந்து பனியன் கம்பெனி வச்சேன். அப்புறம் இங்க வந்து ரெடிமேடு கடை வச்சேன். அப்புறம் கோட்டைப் பட்டணத்துல வச்சு தொழில் பார்த்தேன். எல்லாத் தொழில்லயும் தோல்விதான். அதுக்குப் பெறகு இங்க வந்து பேராவூரணியில ஜோதிடம் படிச்சேன். 2003-ல மலேஷியாவுக்குப் போனேன். ஜோதிடம் நல்லா கைகொடுத்தது. அதுக்கப்புறம் ஒரு நண்பரப் புடிச்சுப் பரிகாரம் படிச்சேன்; சைவசித்தாந்தம் படிச்சேன்; பன்னிரு திருமுறைகள் படிச்சிருக்கேன். தீட்சை எடுத்தேன், எல்லாப் பூஜைகளும் பண்ற அளவுக்கு அங்கீகாரம் கெடைச்சது: திருமணம், கும்பாபிஷேகம், கர்மக் கிரியை, சிராப்தம், இதெல்லாம் செஞ்சிகிட்டிருக்கேன். இன்னிக்குக்கூட ஒரு பூஜை வந்ததுதான். ஒருத்தர் இங்க லீவுல போயிட்டதுனால நான் போகல. இதை (மீன்சந்தை குத்தகைதாரர் பொறுப்பு) ஒரு பொது சேவையாத்தான் செஞ்சுகிட்டிருக்கேன்.''

மீனவர்
மீனவர்
Pandi.U

அர்ஜுனனைப் போன்றவர்கள் பொதுநல நடவடிக்கை என்று உரிமை கோரும் செயல்பாடுகளின் பின்னணியை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது. விசைப்படகு- நாட்டுப்படகு மோதல் தமிழகத்தின் கடற்கரை நெடுக நிலவும் ஒரு சிக்கலே. அதை இசுலாமிய வெறுப்பரசியலாக அர்ஜுனன் முன்னெடுப்பது மத அடிப்படைவாதத்தின் சூட்சுமமான வெளிப்பாடாகும்.

ஒரு தீவிர மத அடிப்படைவாத அமைப்பில் ஊறிக் கிடந்து, இன்று அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் கோயில் சொத்துகளையும் மீன் சந்தையையும் கொண்டு வந்து விட்டதாக உரிமை கோரும் முற்றாதிக்கத் தொனியும் அவரிடம் வெளிப்படுகிறது. இப்போக்கு கடற்கரை மக்களைக் கூறுபடுத்தவே உதவும்.

- வலை வீசுவோம்