Published:Updated:

காட்டுயிர்கள் பரப்பும் நோய்கள்... எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மனிதர்கள்? #GoodRead@Vikatan

இயற்கைக்கு நாம் செய்த செயல்களால், 20-ம் நூற்றாண்டின் இறுதியில் மனித இனமே அழிந்துவிடும் என்றெல்லாம் சில நிபுணர்கள் கணித்தார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1997-ம் ஆண்டின் ஒரு நாளில், இந்தோனேசியாவின் மழைக்காடுகளுக்கு மேலே புகைமூட்டம் திரளத் தொடங்கியது. கிட்டத்தட்ட, பென்சில்வேனியாவின் பரப்பளவுக்கு நிகராக வானுயர எழுந்த அந்தப் புகைத்திரளை உருவாக்கிய காட்டுத்தீ, பெருநிறுவன விவசாய நிலங்களின் பரப்பளவை விரிவுபடுத்துவதற்காக வைக்கப்பட்டது. அதற்கடுத்து வந்த சில மாதங்களில் ஏற்பட்ட வறட்சியால், அந்த காட்டுத்தீ மேலும் அதிகரித்தது.

நாம் விரைவாகச் செயலாற்றவில்லையென்றால், மனித இனமே அடுத்த 30 ஆண்டுகளில் அழிந்துவிடும்.
ஜியார்ஹ் வால்டு, 1967-ம் ஆண்டு நோபல் பரிசு வாங்கிய உயிர்-வேதியியல் விஞ்ஞானி

காட்டு மரங்கள் நெருப்பில் கருகிக்கொண்டிருந்தன. அங்கு வாழ்ந்துகொண்டிருந்த பழந்தின்னி வௌவால்கள், வேறுவழியின்றி உணவுக்காக அருகிலிருக்கும் பழ மரங்களைத் தேடி மனிதர்களின் தோட்டங்களுக்கு வந்தன. கூடவே, அவற்றின் உடலில் ஒட்டி வாழ்ந்துகொண்டிருந்த ஆபத்தான அந்த வைரஸும் வந்தது. பழத்தோட்டங்களுக்கு வந்தவை, பழங்களைச் சாப்பிட, அவை சாப்பிட்டுவிட்டுக் கீழே போட்ட மீதியை விவசாயிகள் வளர்த்த பன்றிகள் சாப்பிட, அவற்றிடமிருந்து அவற்றை வளர்த்த விவசாயிகளுக்கும் ஒட்டியது அந்த வைரஸ். 1999-ம் ஆண்டு, அங்கு 265 பேருக்கு கடுமையான மூளைக்கட்டி வளர்ந்தது. 105 பேர் உயிரிழந்தனர். நிபா என்றொரு வைரஸ் இருப்பதே மனிதர்களுக்கு அப்போதுதான் தெரிய ஆரம்பித்தது. காலப்போக்கில் அது, தென்கிழக்கு ஆசியா முழுக்கப் பரவி, இன்றுவரையிலுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அந்தப் பெயர் இருந்துவருகிறது.

1920-களில் தொடங்கி 1940-களின் இறுதி வரை இந்தியாவில் 1.2 கோடி பேரை பலிவாங்கிய பிளேக் நோய் முதல் 2012-ன் மெர்ஸ் வைரஸ் வரை கடந்த நூற்றாண்டிலிருந்து பல பேராபத்துகளை நாம் கடந்துவந்துள்ளோம்.

காட்டுயிர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பல தொற்றுநோய்கள் பரவின. அதில் ஓர் உதாரணம்தான் இது. 1920-களில் தொடங்கி 1940-களின் இறுதி வரை இந்தியாவில் 1.2 கோடி பேரைப் பலி வாங்கிய பிளேக் நோய் முதல் 2012-ன் மெர்ஸ் வைரஸ் வரை கடந்த நூற்றாண்டிலிருந்து பல பேராபத்துகளை நாம் கடந்து வந்துள்ளோம். இப்போது, கொரோனா வைரஸ் என்ற அடுத்த பேராபத்து.

போர்னியோ
போர்னியோ

கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்பட்ட பலகட்ட ஆய்வுகள், ’காடழிப்புதான் நிபா, லஸ்ஸா போன்ற மிகவும் ஆபத்தான தொற்றுகளையும் மலேரியா, லைம் போன்றவற்றைப் பரப்பும் ஒட்டுண்ணிகளையும் மக்கள் மத்தியில் பரப்புகின்றன’ என்பதை நிரூபித்துள்ளன. இவை, வரலாற்றில் மறக்கமுடியாத இழப்புகளை மனித இனத்திற்கு ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அதிலிருந்து நாம் மீண்டு வந்துள்ளோம். பிரேசிலின் அமேசான் வனப்பகுதியில் நடந்த காடழிப்பு காரணமாக, 1940-களில் ஆண்டுக்கு 6 மில்லியன் மக்கள் மலேரியா நோய்க்குப் பாதிக்கப்பட்டனர். காடழிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிய அடுத்த முப்பதே ஆண்டுகளில், அந்த விகிதம் ஆண்டுக்கு 50,000 என்ற அளவுக்குக் குறைந்தது. வரலாற்றில் இதுபோன்ற பேராபத்துகளிலிருந்து நாம் மீண்டு வந்ததற்கான ஓர் உதாரணம்தான் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

20-ம் நூற்றாண்டின் இறுதியில் மனித இனமே அழிந்துவிடும் என்றெல்லாம் சில நிபுணர்கள் கணித்தார்கள். 1967-ம் ஆண்டு உயிர்-வேதியியலில் நோபல் பரிசு வென்ற ஜியார்ஹ் வால்டு, ரோடு ஐலாண்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, "நாம் விரைவாக செயலாற்றவில்லையென்றால், மனித இனமே அடுத்த 30 ஆண்டுகளில் அழிந்துவிடும்" என்று கூறியுள்ளார். அவரைப் போலவே, புகழ்பெற்ற உயிரியலாளரான பால் எர்லிச் உட்பட, பல வல்லுநர்களும் நினைத்தார்கள். அவர்கள் கூறியதும் தவறு கிடையாது. மனித இனம் கடந்த நூற்றாண்டில் அவ்வளவு ஆபத்துகளைச் சந்தித்தது.

உயிரினங்களின் இயற்கைத் தேர்வு
டார்வின்

அப்போது, பூமியின் நிலை பேரிடருற்றதாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. சொல்லப்போனால், இப்போது ஆபத்து இன்னும் அதிகரித்துள்ளது. முதல் புவி தினத்தின்போது, பூமியில் வாழ்ந்த நான்கில் ஒருவர் பசியோடு தன் நாளைக் கழித்தார். ஐ.நா- குறிப்பிட்ட மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருந்தார்கள். ஆப்பிரிக்காவில் சராசரி ஆயுள் காலம் 45.6 ஆண்டுகளாக இருந்தது. மேற்கு ஆப்பிரிக்கா முதல் தென்கிழக்கு ஆசியா வரை பஞ்சம் மற்றும் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் மாண்டுகொண்டிருந்தனர். போர்களும் புரட்சிகளும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, கென்யா, எத்தியோபியா, நைஜீரியா, ஓமன், கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளைப் பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தன. இன்னொருபுறம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற ஆசிய நாடுகளில் தொடங்கிய ஃப்ளூ, காலரா, பிளேக் போன்ற நோய்கள் லட்சக்கணக்கானவர்களைப் பலிவாங்கியது மட்டுமின்றி, உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.

பூமி மனிதர்களுக்கானது மட்டுமே இல்லை என்பதைப் பெருமளவிலான மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

ஆனால், இவையனைத்தையும் கடந்து, மனித இனம் மீண்டெழுந்து நின்றது. நமக்கு முந்தைய தலைமுறைகள் பல தவறுகளைச் செய்துள்ளனர். நம் தலைமுறையும் செய்கின்றது. இனி வரும் தலைமுறைகளும் செய்யலாம். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத ஒரு விஷயம் தற்போது இருக்கிறது. பூமி மனிதர்களுக்கானது மட்டுமே இல்லை என்பதைப் பெருமளவிலான மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

இப்போது, மனிதர்கள் மட்டுமின்றி பூமியின் எந்த உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், நியூயார்க்கிலிருந்து டெல்லி வரை, மாஸ்கோவிலிருந்து சென்னை வரை அது எதிரொலிக்கிறது. அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சூழலியல் பாதுகாப்பு அவசியமென்பதை உணரத் தொடங்கியதன் விளைவே இந்தச் செயல்பாடுகள். இதை ஒருவித தற்காப்பு உத்தி என்றுகூட சொல்லலாம். ஓர் ஆபத்து வரும்போது, நம் சிந்தனைகள், நடத்தைகள், உணர்வுகள் அனைத்துமே நம்மை அந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் செயல்படும். மனோவியல் ரீதியாக இந்த தத்துவத்தை முன்வைத்த சிக்மண்ட் ஃபிராய்டு, இதை மூளையினுடைய பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் குறிப்பிடுகிறார்.

மனித மூளை
மனித மூளை

உதாரணத்திற்கு, நம் உடலில் எதிர்ப்புசக்தியை உற்பத்தி செய்கின்ற தைமஸ் என்ற உறுப்பு, வெளியிலிருந்து வரக்கூடிய வைரஸ், பேக்டீரியா போன்ற உடலின் வழக்கமான செயல்பாட்டைக் குலைக்கும் அணுக்களை எதிர்க்கத் தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இது, நம் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி. அப்படித்தான் மூளையின் பரிணாம வளர்ச்சியும். மனோவியல் ரீதியாக எதிர்த்துச் செயல்பட அது வழிவகுக்கிறது.

மனிதர்கள், உலகம் முழுக்க சுற்றித்திரிந்து வாழத் தொடங்கியதால், பெரும்பாலும் பொதுவான பிரச்னைகளுக்கு நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்புசக்தி உருவாகியிருக்கும். அந்த ஆற்றல், நோய்களுக்கு எதிராகச் செயல்படும். அப்படிப்பட்ட பொதுவான நோய்களைத் தாண்டி, புதிதாக ஒரு நோய் உருவானால்! அதற்குரிய எதிர்ப்புசக்தியை உடனடியாக உடலால் உருவாக்கிக்கொள்ள முடியாது.

ஹோமோ இரக்டஸ், ரோபஸ்டஸ், லூசி... ஒரே குகையில் ஒன்றாக வாழ்ந்த 3 மனித இனங்கள்! #LongRead

சார்ஸ், கோவிட்-19 போன்ற தொற்று நோய்களை எதிர்த்துச் செயல்பட முடியாமல் போவதற்குக் காரணம், அவை நம்மிலிருந்து உருவாகவில்லை. ஆகவே, அந்த தற்காப்பு யுக்தி இவற்றிடம் பலிக்கவில்லை. இங்குதான் டார்வினின் இயற்கைத் தேர்வோடு நம்முடைய செயற்கைத் தேர்வு முட்டி மோதுகிறது. இதுபோன்ற தொற்றுநோய்கள் காடுகளில் உருவாகின்றன. அங்கேயே வாழும் காட்டுயிர்கள், இத்தகைய தொற்றுகளால் பாதிக்கப்பட்டால், அவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உணவுச் சங்கிலி குலைவதோடு, சூழலியல் சமநிலையே கேள்விக்குள்ளாகும். ஆகவே, இயற்கை இந்த வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் திறனை, வைரஸ்களால் சீண்டக்கூட முடியாத ஆற்றலை காட்டுயிர்களுக்கு வழங்குகிறது.

வைரஸ் தொற்று நோய்
வைரஸ் தொற்று நோய்

அதுவே, காடுகளிடமிருந்து பிரிந்து வாழும் மனித இனத்தின் மத்தியில் இந்தத் தொற்றுகள் இயற்கையாகத் தோன்றுவதில்லை. ஆகவே, அத்தகைய எதிர்ப்புத் திறன் தேவைப்படுகின்ற உயிரினங்களின் பட்டியலுக்கு இயற்கை நம்மைத் தேர்வு செய்யவில்லை. இப்படி, உயிரினத்தின் வாழ்வியல் மற்றும் அதன் வாழ்விடத்திற்குத் தகுந்த ஆற்றலை, உடல் அமைப்பைக் கொடுப்பதைத்தான் ’இயற்கைத் தேர்வு’ (Natural selection) என்று கூறினார், டார்வின்.

விலங்குகளில் பலவும் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிக்க, அமிலம் போன்ற திரவத்தை வெளியிடும். அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற வாயுவை வெளியேற்றும். ஆனால், பரிணாமத்தின் பாதையில் மனிதர்களுக்கு எதிரான இயற்கையான வேட்டையாடி இல்லாமலே போனதால், அத்தகைய உடல்ரீதியிலான தற்காப்பு யுக்திகள் தேவையற்றுப் போயின. ஆனால், காலப்போக்கில் நம் செயல்களே நம் வாழ்வியலுக்குப் பல கேடுகளைக் கொண்டுவரத் தொடங்கின. அதன்விளைவாக, நம்முடைய தற்காப்பு உத்திகள் அதற்கு ஏற்றாற்போல் வளர்சிதை மாற்றங்களை எய்தத் தொடங்கின. அத்தகையனவற்றில் ஒன்றுதான் எதிர்த்துப் போராடுதல். தான் வாழும் நிலம் பாதிக்கப்படும்போது, தன்னால் அங்கு வாழ முடியாது என்று தெரியவரும்போது, அதைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்வு அதற்காகப் போராடவைக்கிறது. அந்த உள்ளுணர்வே, அனைத்துப் பிரச்னைகளின்போதும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க நமக்கு உதவியுள்ளது.

நம் உடலியல் பரிணாம வளர்ச்சியை இயற்கை நிறுத்திவிட்டது. அதற்குப் பதிலாக, இனி நமக்குத் தேவைப்படும் ஆயுதமாக இயற்கை தேர்ந்தெடுத்த பகுதிதான் மூளை.

அத்தகையனவற்றில் ஒன்றுதான் எதிர்த்துப் போராடுதல். தான் வாழும் நிலம் பாதிக்கப்படும்போது, தன்னால் அங்கு வாழ முடியாது என்று தெரியவரும்போது, அதைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்வு அதற்காகப் போராடவைக்கிறது. அந்த உள்ளுணர்வே, அனைத்துப் பிரச்னைகளின்போதும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க நமக்கு உதவியுள்ளது.

இதற்கு முன் பரவிய புதுப்புது தொற்று நோய்களின் போதும், அதைச் சரிசெய்யக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவியது, நம் மூளைக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்துள்ள அதே தற்காப்பு யுக்திதான்.

Vikatan

அதை ஓர் ஆயுதம் என்றுகூடச் சொல்லலாம். ஆயுதங்களால் நம்மைத் தற்காத்துக்கொள்ளவும் முடியும். அடுத்தவர்களைத் தாக்கவும் முடியும். தாக்குதல்கள் நடக்கும் அதேநேரம், இதுபோன்ற பல பேராபத்துகளிலிருந்து நாம் தற்காத்தும் கொண்டுள்ளோம். அதேபோல், கொரோனா என்ற இந்த பேராபத்திலிருந்தும் தற்காத்துக்கொண்டு மீண்டு வருவோம். ஓர் உயிரினத்தின் ஆதியும் சரி, அந்தமும் சரி, பூமியின் கைகளிலேயே உள்ளது. அந்தப் பூமி நமக்குக் கொடுக்கும் ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே, நம்முடைய முடிவு எப்போது என்பதைப் பூமி முடிவுசெய்யும்.

இயற்கை
இயற்கை

நம் உடலியல் பரிணாம வளர்ச்சியை இயற்கை நிறுத்திவிட்டது. அதற்குப் பதிலாக, இனி நமக்குத் தேவைப்படும் ஆயுதமாக இயற்கை தேர்ந்தெடுத்த பகுதிதான் மூளை. அதன் செயல்பாடுகள் அபாரமானவை. ஒவ்வொரு பேரிடரின்போதும் அதிலிருந்து மீண்டுவர, மீண்டும் செழித்து வளர மனித இனத்திற்கு மூளை என்றதொரு தற்காப்பு யுக்தியை வழங்கியுள்ளது. அதன் உதவியோடு, இதிலிருந்தும் நாம் மீண்டு வருவோம். அதற்கு, மற்றுமொரு மனோவியல் ஆயுதத்தையும் நாம் பயன்படுத்த வேண்டும். அதுதான் நம்பிக்கை. மனித இனம் இதிலிருந்தும் மீண்டுவரும் என்று நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு