Published:Updated:

தினேசன், மணிகண்டன்... புதிய கறையான்களுக்கு ஏன் இந்தப் பெயர்?

மணிகண்டன் என்ற வகைக் கறையான்/ Krishnacapritermes manikandan
மணிகண்டன் என்ற வகைக் கறையான்/ Krishnacapritermes manikandan ( Researchers )

மேற்குத்தொடர்ச்சி மலை தாவரங்கள், பறவைகள், பூச்சிகள் என்று பலவற்றின் பூர்வீக வாழிடமாக இருக்கின்றது. அந்த வகையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தினேசன் மற்றும் மணிகண்டனுக்கும் இந்த மலைத்தொடரே தாய்வீடாகக் கருதப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை, பல்லுயிர்ச்சூழல் ரீதியாக மிகவும் தனித்துவமானது. அங்கு இன்னும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் பல இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு முறை ஆய்வு செய்யும்போதும் அங்கு புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தினேசன் மற்றும் மணிகண்டனுக்கும் இந்த மலைத்தொடரே தாய்வீடாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வும்கூட அதற்குச் சான்றாக விளங்குகின்றது. அதில் இரண்டு புதிய வகைக் கறையான்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகைக் கறையான்கள் மண்ணில் வாழக்கூடியவை என்று அறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய கறையான்களுக்கு கிருஷ்ணகாபிர்தெர்மேஸ் தினேசன் மற்றும் கிருஷ்ணகாபிர்தெர்ம்ஸ் மணிகண்டன் (Krishnacapritermes dineshan & Krishnacapritermes manikandan) என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

கோழிகோடு Zoological Survey Of India-ல் அர்ப்பணிப்போடு பணிபுரிபவர்களே மணிகண்டன் மற்றும் தினேசன். அதனால் அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன) இதுவரை கிருஷ்ணகாபிரைடெம்ஸ் என்ற கறையான் வகைப்பாட்டின் கீழ் இரண்டு இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு புதிய இனங்கள், அந்த எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன.

இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையில் வழக்கமான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வு மாதிரிகள், கோழிக்கோட்டைச் சேர்ந்த அமினா பூவோலி மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ​கே.ராஜ்மோகனா ஆகிய ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது‌. அவர்கள் இறுதிக்கட்டமாக ஆய்வு செய்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கறையான்களின் புதிய இனங்கள்தான் என்பதை உறுதி செய்தனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay

கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டபோது தினேசன், மணிகண்டன் என்று பெயரிடப்பட்ட கறையான்கள் ஒன்றுக்கொன்று உருவவியல் ரீதியாக வேறுபடுகிறது என்பதை அறிவித்தனர். கிருஷ்ணகாபிரைடெர்ம்ஸ் எனும் கறையான் இனம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த இனத்தின் கீழ், கிருஷ்ணகாபிரைடெர்ம்ஸ் மைட்டி மற்றும் கிருஷ்ணகாபிரைடெம்ஸ் தாகுரி (Krishnacapritermes maitii & Krishnacapritermes thakuri) என்ற இரண்டு இனங்கள் மட்டுமே இதுவரை அறியப்பட்டிருந்தன. தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு இனங்களுமேகூட கிருஷ்ணகாபிரைடெமிஸ் இனத்தைச் சேர்ந்தவைதாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நான்கு இனங்களுக்கிடையேயான உருவ வேறுபாடுகளை விளக்கிய பூவோலி, தினேசன் என்ற கறையான் நான்கு இனங்களிலுமே பெரிய உருவ அமைப்பைக் கொண்டது என்று கூறியுள்ளார். இது ஓரளவு தாகுரியை ஒத்திருக்கிறது. மணிகண்டன் என்று பயிரிடப்பட்டுள்ள கறையான் இனம் ஒப்பீட்டளவில் மற்ற மூன்று இனங்களைவிடச் சிறியது. இது உடற்கூறியல் ரீதியாக மைட்டியுடன் சற்று நெருக்கமான பண்புகளைக் கொண்டுள்ளது.

தினேசன் / Krishnacapritermes dineshan
தினேசன் / Krishnacapritermes dineshan
Researchers

ஆராய்ச்சியாளர்கள் தங்களிடமிருந்த கிருஷ்ணகாபிரைட்டெர்ம்ஸ் மாதிரிகள் அனைத்துக்கும் டி.என்.ஏ பார்கோடுகளை உருவாக்கினர். இது கறையான்களின் மரபணுக்களில் வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றைப் படிக்கவும் கண்டுபிடிக்கப்பட்ட இனங்கள் அவற்றுக்குள் இனப்பெருக்கம் செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும் உதவும். உதாரணத்துக்கு, ஒரு மளிகைக் கடையில் பொருள்களை அடையாளம் காணும் ஸ்கேனரைப் போலவே, டி.என்.ஏ பார்கோடிங் தொழில்நுட்பமும் இந்தக் கறையான் இனங்களை அடையாளம் காண உதவுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுக்களிலிருந்து டி.என்.ஏ-வின் குறுகிய வரிசையை எடுத்து மற்ற உயிரினங்களில் அதே மரபணுவிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ-வின் வரிசையை ஒப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினர்.

இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் டி.என்.ஏ-வின் வரிசையைக் கறையான்களின் தலை மற்றும் தொண்டைப் பகுதிகளிலிருந்து பிரித்தெடுத்தனர். இது ஒரு தொடர்ச்சியான செயல். இந்தச் செயல்பாட்டில், தாகுரி மற்றும் தினேசன் இனங்களுக்கான பார்கோடுகளை உருவாக்க முடியும். ஆனால், மணிகண்டன் வகைக் கறையான்களுக்கு பார்கோடுகளை உருவாக்குவதில் ஆய்வுகள் தேவைப்படும். பலமுறை, உருவ வேறுபாடுகள்தான் மரபணு வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்தப் பண்பைப் பயன்படுத்தி தொடர்ந்து பரிசோதனை செய்ய ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். நடைமுறையில், இன்னும் உள்ளூர்க் கறையான்களின் மரபணு பார்கோடுகள் குறித்த தரவு இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது.

மணிகண்டன் என்ற வகைக் கறையான்
மணிகண்டன் என்ற வகைக் கறையான்
Researchers

மேற்குத்தொடர்ச்சி மலை தாவரங்கள், பறவைகள், பூச்சிகள் என்று பலவற்றின் பூர்வீக வாழிடமாக இருக்கின்றது. அந்த வகையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தினேசன் மற்றும் மணிகண்டனுக்கும் இந்த மலைத்தொடரே தாய்வீடாகக் கருதப்படுகிறது.

நிலப்பரப்பின் பன்முகத்தன்மை மற்றும் கறையான்களின் வாழ்விட விருப்பம் ஆகியவை, இந்தக் கறையான்கள் இந்த மலைத்தொடரில் வாழ்வதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஆய்வாளர் அமினா பூவோலி விளக்கம் கொடுத்துள்ளார். முக்கியமாக 1997-ல் சோட்டானியின் ஆய்வுகளிலிருந்து, அமைதிப் பள்ளத்தாக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழ்நாடு பகுதிகளில் மட்டுமே இந்த வகைப்பாட்டைச் சேர்ந்த கறையான்கள் வாழ்கின்றன என்று கருதப்பட்டது.

அழிந்து வரும் இந்த வகைக் கறையான்களைப் பற்றி படிப்பதும் இவை குறித்த தரவுகளை ஒழுங்கு படுத்தி வைத்துக்கொள்வதும் இவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேற்கு மலைத்தொடரை ஆய்வு செய்யக் களமிறங்கியவர்களை ஒருபோதும் அது ஏமாற்றியதே இல்லை. இன்றளவும் தன்னுள் பல்வேறு அதிசயங்களைப் புதைத்துக்கொண்டு அமைதியாக நின்று மனிதப் பேராசைகளின் சுரண்டல்களை எதிர்த்து மௌனப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay

அந்தப் போராட்டங்களின் விளைவாக தினேசன், மணிகண்டன் போன்ற கறையான் இனங்கள் உட்பட, அதையே நம்பியுள்ள கோடிக்கணக்கான உயிரினங்களின் கதியும் ஆபத்தில் உள்ளதை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் உடனடியாக எடுத்தாக வேண்டுமென்ற அவசியத்தை மீண்டுமொரு முறை இந்தக் கண்டுபிடிப்பு நமக்கு உணர்த்தியுள்ளது.

பின் செல்ல