Published:Updated:

ஈழத்துப் பட்டிவலை: தமிழகத்தில் இப்படித்தான் அறிமுகமானது! திரைகடலோடியும் ~ 6

மணமேல்குடி கோடியக்கரை.

1983-ம் ஆண்டு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டுக்குள்ள வரத் தொடங்கினாங்க. இராமேஸ்வரத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒவ்வொரு ஏரியாவுல அடைக்கலம் புகுந்தாங்க. வடக்கு அம்மாப்பட்டினத்தில் 1985-க்குப் பிறகு மொதமொதல்ல அடைப்புவலய ஆரம்பிச்சது அவங்கதான்.

ஈழத்துப் பட்டிவலை: தமிழகத்தில் இப்படித்தான் அறிமுகமானது! திரைகடலோடியும் ~ 6

1983-ம் ஆண்டு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டுக்குள்ள வரத் தொடங்கினாங்க. இராமேஸ்வரத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒவ்வொரு ஏரியாவுல அடைக்கலம் புகுந்தாங்க. வடக்கு அம்மாப்பட்டினத்தில் 1985-க்குப் பிறகு மொதமொதல்ல அடைப்புவலய ஆரம்பிச்சது அவங்கதான்.

Published:Updated:
மணமேல்குடி கோடியக்கரை.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கிராமத்திலிருந்து நேர்கிழக்காக மூன்று கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றார் இந்தியன் கணேசன். என்னுடன் வந்திருந்த காணொலிப் பதிவாளருக்கு மற்றொரு இரு சக்கர வாகனம் ஏற்பாடு செய்திருந்தார். கடலுக்குள்ளே அம்புமுனை போலக் கூராய்த் துருத்திக்கொண்டு நிற்கும் அந்த நிலப்பரப்பு அரிச்சல் முனையை (தனுஷ்கோடி) நினைவுபடுத்துகிறது. கோடியக்கரை, கோடிமுனை என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் கடலின் ஆழம் மிகக்குறைவு. ஒரு கிலோ மீட்டர் போனால் இடுப்பளவு ஆழம் வரும், கடல் சீற்ற காலத்தில் சாலைகளை கடல் மூடிக்கொள்ளும்.

மீனவர்கள் கரை மடி வலை மீன் பிடிக்கும் அழகின் புகைப்படத் தொகுப்பு: ப.கதிரவன்
மீனவர்கள் கரை மடி வலை மீன் பிடிக்கும் அழகின் புகைப்படத் தொகுப்பு: ப.கதிரவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடற்கரை நெடுக, ஆங்காங்கே சுற்றுவலை / அடைப்பு வலை கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. சிறு படகுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கரையில் அணைக்கப் பட்டிருந்தன.

வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் கடைசிப் பிரிவான வெள்ளாறு கடலில் கலக்கிறது. அதற்குத் தெற்காகக் கண்ணுக் கெட்டும் தொலைவில் நான்கைந்து கிலோமீட்டர் நெடுக அடர்ந்த காடுகள் தெரிகின்றன. `அதுதான் வடக்கு அம்மாப்பட்டினம்’ என்றார் கணேசன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஈமச்சடங்குகள் நிறைவேற்ற ஏராளமான மக்கள் இம்முனைக்கு வருகின்றனர். ஆடி அமாவாசைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள், 20,000 பேர் வரை வருவார்கள், அருகிலிருக்கும் கீழக்குடி கிராமத்து மக்கள்தான் இந்த விசேட நிகழ்ச்சிகளை நிர்வாகம் செய்கிறார்கள்.

கடலுக்குள் படகை இறக்குவதற்குத் தயாராக, தனது டி.வி.யெஸ் 50-ல் வலைக்கயிறுகளுடன் வந்து இறங்கிய காசிநாதன் (53, கீழக்குடி), அடைப்புவலை குறித்துச் சொன்னார்:

மீன்பிடி படகுகள் | திரைகடலோடியும்
மீன்பிடி படகுகள் | திரைகடலோடியும்

``1983-ம் ஆண்டு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டுக்குள்ள வரத் தொடங்கினாங்க. ராமேஸ்வரத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒவ்வொரு ஏரியாவுல அடைக்கலம் புகுந்தாங்க. வடக்கு அம்மாப்பட்டினத்தில் 1985-க்குப் பிறகு மொதமொதல்ல அடைப்புவலய ஆரம்பிச்சது அவங்கதான். அதுக்கு முன்னால தமிழ்நாட்டுக் கடற்கரயில சின்னதா பட்டிங்கற வலைய வைப்பாங்க.

அப்போ சின்னத்துரைங்கிற ஒருத்தரு சிலோன்காரங்கள வச்சி அடைப்பு வலைய நாலு கம்பு ஊணி, நடுவில போற மீனுக திரும்பிப் போக முடியாத மாதிரி வலய சுத்தி செஞ்சு காமிச்சாரு. இரண்டு மூன்று நாளுக்கு ஒரு மொற பட்டி மாதிரி (அரிப்பு) வச்சு அப்படியே மீனப் படகுல தூக்கிப் போட்டுருவாங்க. சிலோன்காரங்க ஆரம்பிச்ச வச்சது, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாம தஞ்சாவூர் மாதிரி மாவட்டங்கள்ளயும் அடைப்புவலை கட்ட ஆரம்பிச்சாங்க.

முன்னாடி நாங்க கட்ற பட்டி வலையப் பரம்புனு சொல்லுவோம். கொடுவா, திருக்கை மாதிரி மீனுகதாம் உள்ளே போகும். இடுப்பளவு தண்ணீலதாம் வலையையக் கட்டுவோம். அவங்க கட்ற வலைல (அடைப்பு வலை) எல்லா மீனும் உள்ளே போற மாதிரி கட்டுவாங்க. கோடிமுனையில 25, 30 அடைப்பு வலைங்க கட்டியிருக்காங்க, அம்மாப்பட்டினத்துல நெறய இருக்கு.”

கரைக்குக் கொண்டு வந்த (கோழியா) முரல் வலையை மரநிழலில் நின்று சரிசெய்து கொண்டிருந்த ராஜேந்திரனிடம் (58, முத்துராஜபுரம், கீழக்குடி) பேச்சுக்கொடுக்க முயன்றேன். அவர், உடன் வேலை செய்துகொண்டிருந்த மகன் ராமகிருஷ்ணனை (21) கைகாட்டினார். ராமகிருஷ்ணன் ஆங்கில இலக்கியத்தில் பட்ட வகுப்புத் தேறியிருக்கிறார். வேறு வேலை வாய்ப்பில்லாமல், மேலே படிக்கவும் வசதியில்லாமல் அப்பாவோடு கடலுக்குப் போவதாய்க் குறிப்பிடுகிறார். கோழியாமுரல் வலைத் தொழில் நுணுக்கங்களை விளக்கினார் ராமகிருஷ்ணன்:

 மீன்பிடி படகுகள் |திரைகடலோடியும்
மீன்பிடி படகுகள் |திரைகடலோடியும்

“இந்த மாதிரி மழ டயத்தில மொரத்தொழில் (கோழியாமுரல்) பாப்போம். சாயங்கால நேரத்துல நண்டுவலை படுக்கப் போடுவோம் (தரையைத் தொட்டவாறு வலை விரிப்பது). முன்னால கட்டுமரம் வச்சிருந்தோம், இப்ப இஞ்சின் போட்டு வச்சிருக்கிறதுனால கொஞ்சம் கஷ்டம். மழ வந்துச்சுன்னா ஆழக்கடலுக்குள்ள போவ முடியாது. அப்போ கரையில இந்த மாரி நண்டுவலைத் தொழில் பார்ப்போம். நைட்ல போய்ப் படுத்துட்டு காலைல கரைக்கு வந்துடுவோம். இந்த ஊர்ல மட்டும் மொரல் வலயோட வெள்ள வலைன்னு ஒரு சிலோன் வல இருக்கு. நைட்ல இழுப்பு வலைண்ற மடி வலைக்குப் போறது. அப்புறம், இந்த கணவாத் தூண்டி வேலைக்குப் போறது… பக்கத்துல முத்துராஜபுரத்தில் இருக்கோம். தொழிலுக்கு இங்க வந்துருவோம்.”

நெருக்கமாக, பிரகாசமான நிறத்தில் அமைந்த மிதவைகளுடன் அகலம் மிகக் குறைவாகவும் மறுபுறம் குண்டு ஏதும் இல்லாமலும் இருந்த (கோழியா) முரல் வலையைப் பற்றிக் கேட்டேன்.

“மொரவலை சாதாரணமா இந்தக் கட்டையைப் போட்டாத்தான் (உருளையான சிறு மர மிதவையைக் காட்டுகிறார்) மெதக்கும். மொரலு எப்பயும் மேலதாம் வரும். கட்டை மொதக்கறதுனாலதாம் வலயில வந்து சுத்தும். வலயோட நெறத்த மாத்தினாத் திரும்பிக்கிட்டுப் (தப்பித்துப்) போயிரும். பச்ச நிறத்துல வல போட்டா நெறய மொரலு கெடைக்கும். மொரலு, ஆள்பாஞ்சான் மொரலு, சிலுவ மொரலெல்லாம் இதுல பிடிக்கும். வல மிதந்துகிட்டு நிக்கிறதால (இதில்) நண்டு தொந்தரவெல்லாம் இருக்காது, பாசி புடிக்காது.

கரையில வந்தமா, வேலய முடிச்சமான்னு வாரிப் போட்டுட்டுப் போயிட்டே இருக்கலாம். செங்கணி, ஓரா, தாளி, நண்டு எல்லாம் மடிவலயிலதாங் கெடய்க்கும். மொரவலை தவிர வெள்ளவலை வச்சிருக்கோம், அதில காவல இருக்காது. கீச்சா முச்சான் வலையில் மெதவ போடமாட்டோம், அது படுக்கிற வல (தரையோடு அமிழ்ந்து கிடப்பது), மெதவயில்லாம நிக்கும். அதுலதாம் நண்டு எல்லாம் புடிக்கும், வலயக் கடலுக்குள்ள போட்டுட்டம்னா அடையாளம் தெரியாது, அடையாளம் கண்டுபுடிக்கிறதுக்கு அதுல மிசுரி லைட்ட (எல்இடி விளக்கு) கட்டிவுடுவோம், பெரிய மீனு ஏதாச்சும் சுத்திடுச்சுன்னா அத்துக்கிட்டுப் போயிடும், வல அவ்வளவுதாம். இந்தத் தொழிலெல்லாம் சின்னப் படகுல அஞ்சு, ஆறுபாகம் ஆழம் வரைக்கும்தான் (கரையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம்). அதுக்கு மேல லாஞ்சிலதாம் போகமுடியும்.

மீன்பிடி படகுகள் |திரைகடலோடியும்
மீன்பிடி படகுகள் |திரைகடலோடியும்

சின்ன படகு காத்துக்குத் தாங்காது. குஞ்சு வைக்கிற காலத்துல ஒரு 60 நாளு (இழுவை) மடி இழுக்க விடமாட்டங்க (மீன்பிடி தடைக்காலம்). ஆனா இந்த மாதிரி, கரையில வழிவல, மொரவல, நண்டுவல போலாம்; அடப்பு வலயும் வச்சிக்கலாம். (இழுவை) மடிவல போறவங்கள கோட்டப்பட்டணத்துலயிருந்து போலீஸ் வந்து புடிச்சிட்டுப் போயிடுவான். நாங்க தொழிலுக்கு இந்த ஊரவுட்டு எங்கயும் போறதில்ல, வருசம் புராவும் இங்கத்தாந் தொழில் பாக்கறது.”

கடற்கரையில் இயந்திரப் படகுகளுக்கு இடையிடயே நிறைய கட்டுமரங்களும் இருக்கின்றன. இயந்திரப் படகைவிட மிக எளிமையான தொழில் ஒற்றையாள் கட்டுமரத் தொழில் என்கிறார் சக்திவேல் (56, முத்துராஐபுரம்). மூன்று ஆள்மட்ட ஆழம்தான் அதிகபட்சம் போகிற தொலைவு. துடுப்புக்கு பதிலாக தாங்கு கம்பைப் பயன்படுத்துகிறார். வலைகயிறு எல்லாம் இதில் நிறையக் கொண்டுபோக முடியாது. `தனியாளாகப் போகிறவருக்கு 400, 500 ருபாய் அன்றாட வருமானம் கிடைத்தாலே போதுமானது’ என்கிறார் சக்திவேல். படகு மாதிரி இதில் இயந்திரத்துக்கு மூலதனம் தேவையில்லை, எரிபொருளுக்குச் செலவு செய்ய வேண்டியதும் இல்லை. ஒரு மிதப்புக் கட்டை மாதிரி கட்டுமரத்தை எளிதாகக் கடலுக்குள் கொண்டு போய்க் கரை திரும்பிவிடலாம். சக்திவேலைப் போன்றவர்களுக்கு அது வாழ்வாதார வாக்குறுதி.

- அலை பாயும்