Published:Updated:

பட்டாம்பூச்சி பறக்குது!

பட்டாம்பூச்சி பறக்குது!
பிரீமியம் ஸ்டோரி
பட்டாம்பூச்சி பறக்குது!

பட்டாம்பூச்சி என்றதும் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை நூல் எழுதிய நா.முத்துக்குமாரின் முகம் ஞாபகத்தில் வந்தது.

பட்டாம்பூச்சி பறக்குது!

பட்டாம்பூச்சி என்றதும் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை நூல் எழுதிய நா.முத்துக்குமாரின் முகம் ஞாபகத்தில் வந்தது.

Published:Updated:
பட்டாம்பூச்சி பறக்குது!
பிரீமியம் ஸ்டோரி
பட்டாம்பூச்சி பறக்குது!

இந்த உலகத்துல நடக்குற ஒவ்வொரு விஷயமும் பட்டாம்பூச்சி விளைவுதான் பாஸ். ஓரிடத்தில் உண்டாகும் புயல் எங்கோ எப்போதோ ஒரு சிறு பட்டாம்பூச்சி தன் சிறகுகளை அசைத்ததன் விளைவாக இருக்கலாமாம்.

ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ மாதிரி சின்னச் சின்னதா மனசுல யோசிச்ச விஷயங்கள் அப்படியே செயின் ரியாக்‌ஷனா மாறி கடகடனு கண்ணு முன்னாடி பெருசா வந்து போகுது!

ஒரு மட்ட மதியானப்பொழுதில் இன்ஸ்டாவில் மாளவிகா மோகனன் ஸ்டில்ஸ் பார்த்தேன். `பாவம், இந்தப் பொண்ணு அழகாத்தான் போட்டோ போடுது. ஆனா, ‘மாஸ்டர்’ படத்துல ஏன் ரிச் கேர்ள் லுக்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா காட்டினாங்க?’ என மனசு வலிச்சது. வலிச்ச கேப்பில் இன்னும் இரண்டு இன்ஸ்டா போட்டோஸை இறக்கியிருந்தார் மாளு. ஆமாம். ஆடைகளை எசகுபிசகாய் இறக்கி க்ளீவேஜ் தெரிய போட்டோஸ் போட்டு இளசுகள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விட்டிருந்தார் சுராங்கனிக்கா மாளு!

பட்டாம்பூச்சி என்றதும் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை நூல் எழுதிய நா.முத்துக்குமாரின் முகம் ஞாபகத்தில் வந்தது. ஆம். சமீபத்தில் கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் வந்தது. அணிலாடும் முன்றிலில் தமிழாடும் காலம் முழுமைக்கும் காதல் வார்த்தைகளை நமக்குக் கடனாகக் கொட்டிச் சென்றவரல்லவா..! ‘அணிலாடும்’ என்றதும் அது ஆடிய கரன்ட் கம்பியும் ஏனோ ஞாபகத்தில் வந்தது.

‘கரன்ட் கம்பியில் அணில் தாவி விளையாடியதால்தான் மின்வெட்டு தமிழ்நாட்டில் வந்தது!’ என அணி தாவிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஸ்டேட் மென்ட்டும் கண்முன் வந்து போனது.

பட்டாம்பூச்சி பறக்குது!

‘சயின்டிஸ்ட் செல்லூராருக்கு டஃப் கொடுத்த கரூரார் வாழ்க!’ என மின் வெட்டை வெல்வெட் போட்டு மூடிய செந்தில் பாலாஜிக்கு மீம்ஸால் கல்வெட்டே வைத்தார்கள் மீம்கிரியேட்டர்கள். கோபத்தில் அமெரிக்க ஆதாரங்களையும், கடந்த ஆட்சியில் அணிலால் நடந்த சேதாரங்களையும் டாக்கு மென்ட்டுகளாக அள்ளிப்போட்டு ஊர் வாயை அடைத்தார் கரூரார்... அவை ஃப்ளாஷ் கட்டில் வந்தது.

கரூர் என்றதும் சமீபத்தில் அவர் உதிர்த்த வாக்குறுதியும் கொசுறாய் ஞாபகத்தில் வந்து போனது.

“விரைவில் கரூர் கார்ப்பரேஷனாக மாற்றப்படும்!” என்பதே அது! கரூர் தாண்டி புதுக்கோட்டை...கந்தர்வக்கோட்டை சமஸ்தானங்களே அந்த ஸ்டேட்மென்டால் ஆடிப்போயிருக்கும். அதுசரி, விரைவில் ஒரத்த நாடும் ராம்நாடும் தனி நாடாக்கப்பட்டால் எதுவும் சாத்தியம்தானே ராஜா?

என்னது ராஜாவா..? ராஜா என்றதும் ராஜபாளையம் ஞாபகத்துக்கு வருமே? ராஜபாளையம் என்றால் உங்களுக்கு அந்த ஊர் மில்களோ, நாயோ ஞாபகத்துக்கு வந்தால் உங்களுக்கு ஐ.க்யூ பிரச்னை பாஸ். எனக்கெலாம் பக்கத்து ஊர் ’வில்லிபுத்தூர் பேர் சொன்னாலும் சரி... ராஜபாளையம்னே டைரக்ட்டா சொன்னாலும் சரி பால்கோவா ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான் கண்ணு முன்னாடி கதகளி ஆடுறார். ஒருவேளை எதுவுமே ஞாபகத்துக்கு வரலைன்னாலும் செந்தில் பாலாஜியைப் பேசினால் இன்னொரு பாலாஜி ஞாபகத்துக்கு வந்துதானே ஆகணும்? ‘கடந்த ஆட்சியில் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு மட்டுமே ஆவினிலிருந்து ஒன்றரை டன் ஸ்வீட் போயிருக்கு!’ எனப் பிராது கொடுத்திருக்கிறார் தி.மு.க-வின் ‘பால்வளம்’ நாசர். அந்த ஸ்டேட்மென்ட்டை யோசித்ததும் நண்பன் படத்தில் சத்யன் கேரக்டர் சொன்னது போல, “எனக்கு ஒரு ஆச்சர்யம்... ஒரு மனிதன் எப்படி ஒன்றரை டன் பால்கோவாவை பார்சல் கட்ட முடியும்? வாழ்நாள் முழுக்க ஊரே உட்கார்ந்து சாப்பிட்டாலும் அம்புட்டுலாம் சாப்பிட முடியாதே?” என முன்னாள் அமைச்சரை வியக்க முடிந்தது.

சரி, அமைச்சர் நாசர் என்றதும் நடிகர் நாசரும் அவரது உலகப்புகழ்பெற்ற மூக்கும் ஞாபகத்துக்கு வந்து போனால் நீயும் என் நண்பனே!

மூக்கு என்றதும் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா மருந்து, மிருகங்களைப் பாதுகாக்கும் என்ற சமீபத்திய அமெரிக்க ஆய்வும் ஞாபகத்தில் வந்தது. அமெரிக்காக்காரன் என்னென்னலாம் கண்டுபிடிக்கிறான் பாருங்க மக்களே!

அமெரிக்கா என்றதும் ரஜினி சிகிச்சைக்குப் போனதும், திரும்பி வந்து கொடுத்த, ‘வருங்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டது!’ என்ற அறிக்கையும் ஞாபகத்துக்கு வந்தது. அறிக்கையைத் திரித்து, ‘அரசியலுக்கு வரலாமா என மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை’ என எவனோ கொளுத்திப்போட, எல்லோரும் ஆடிப்போனார்கள் ஆடி..!

ஆடி என்றதும் `ஆடி கார்தான் எங்ககிட்ட இருக்கு. சொகுசுக் கார்லாம் இல்லை!’ என மீடியா முன் மூக்கு சிந்திய பப்ஜி மதனோட மனைவி கிருத்திகாதான் ஞாபகத்துக்கு வந்தார். என்னது, ஆடி கார் ஆடம்பரக் கார் இல்லையா..? பாவம் அந்தத் தம்பதிக்கு ரேஷனில் பொருட்கள் கிடைக்க அரசு ஆவனசெய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு திரும்பினால், சொகுசுக் கார் என்றதும் ரோல்ஸ் ராய்ஸ்க்கே வரிவிலக்கு கேட்ட வழக்கில் விஜய்க்கு ஒரு லட்சம் ஃபைன் போட்ட ஹைகோர்ட் ஞாபகத்தில் வந்தது! ‘வரிவிலக்கு கேட்பது குடிமகனின் உரிமை. மறுப்பது நீதிமன்றத்தின் உரிமை’ என எதையாவது ஆடியோ லாஞ்சில் விஜய் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.

பட்டாம்பூச்சி பறக்குது!

ஹைகோர்ட் என்றதும் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் ஞாபகத்தில் வரலாம். ஆனால், எனக்கு ஹெச்.ராஜா மட்டும்தான் ஞாபகத்தில் வருகிறார். கோர்ட்டை அவதூறாகப் பேசிய வழக்கில் முன் ஜாமீன் கேட்டிருக்கிறார் மனிதர்.

ஜாமீன் என்றதும் அது கடல்லயே இல்லையாம் என மொக்கை வாங்கிய வட்டச் செயலாளர் வண்டு முருகன்தான் அனிச்சையாய் வருகிறார். முருகன் என்றதும் மத்திய அமைச்சராகி இருக்கும் எல்.முருகன் ஞாபகத்துக்கு வராமல் இருப்பாரா..? தோற்றும் கெத்து காட்டும் முருகனை இனி எல் போர்டு முருகன் எனச் சொல்ல முடியாதுல்ல? ‘மேக்கேதாட்டூவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு தவறிழைக்கவில்லை!’’ என்று சொல்லி நமக்குப் புரையேற வைத்து மந்திரியானாலும் எல் போர்டுதான் என நிரூபித்தது வந்துபோனது. பா.ஜ.க-வுக்கு முட்டுக் கொடுக்கலாம். ஆனால் கர்நாடக பா.ஜ.க-வுக்கும் சேர்த்துக் கொடுத்த முட்டுதான், அம்மாடி ஆலமரம், கன்னா பின்னான்னு வாய்ல வரும் ரகம் என நினைத்துக் கொண்டேன்! கர்நாடகா என்றதும் அணை கட்டியே தீருவேன் என்று சூளுரைத்த கோளாறு பிடித்த எடியூரப்பாவும் கூடவே கோலார் தங்கச்சுரங்கமும் ஞாபகத்தில் வந்தது. கோலார் பஸ் ஸ்டாண்டில் இருந்த தமிழ்ப் பெயரைத் தார் பூசி வாட்டாள் நாகராஜ் அழித்ததும் பிறகு தமிழர்கள் போராடி உரிமையை மீட்டு மீண்டும் தமிழில் எழுதியதும் ஞாபகத்தில் வந்து போனது. தமிழ் என்றதும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்ற வரியெல்லாம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? ஆனால், எனக்கு கடவுள்தான் ஞாபகத்தில் வருகிறார். நான் எழுதிய இந்தத் தமிழ்க் கட்டுரையை பேப்பரிலோ, செல் போனிலோ, டெஸ்க் டாப்பிலோ வாசிக்கும் உங்களை எப்படித்தான் பாராட்டுவது..?

பார்த்தீங்களா... மாளவிகா மோகனனை சைட் அடிக்கப் போய் கடவுள் தரிசனம் வரை கிடைத்துவிட்டது. அதான் பட்டாம்பூச்சி விளைவு!

அடிக்க வராதீங்க...பேசித் தீர்த்துக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism