Published:Updated:

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“அப்ப வைரத்தோட சேர்த்து அப்பிடியே நம்ம Poet தனுஷ், சிவகார்த்திகேயன், ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் சிவனுக்கும் ஜி.எஸ்.டி போட்ருவோமா?”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“அப்ப வைரத்தோட சேர்த்து அப்பிடியே நம்ம Poet தனுஷ், சிவகார்த்திகேயன், ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் சிவனுக்கும் ஜி.எஸ்.டி போட்ருவோமா?”

Published:Updated:
சிரிப்புக்கு ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

`எங்கும், எதிலும், எப்போதும் ஜி.எஸ்.டி’ என்பதுதான் இந்திய அரசின் இப்போதைய டிரெண்ட். ஃபேமஸான சில மீம் டெம்ப்ளேட்டுகளை வைத்து ஜி.எஸ்.டி வரி விதிப்பு கொடுமைகளைக் கொஞ்சம் கட்டுடைத்து காமெடி செய்வோம்!

“இன்னைக்கு எந்தப் பொருளுக்கு ஜி.எஸ்.டி போடலாம் ஜி... பிராண்ட் அல்லாத அரிசி, பருப்பு, தயிருக்கெல்லாம் ஒரு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி போடலாமா?”

“ரெண்டு வாரத்துக்கு முன்னதானே போட்டோம்?”

“ `இது பன்னீருக்குக் கிடைத்த வெற்றி’னு அங்கங்க போஸ்டர் பார்த்தேனே... அப்ப பன்னீருக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி போடலாமா?”

“பாவம்யா அவரு...”

“அப்ப தலைக்குத் தேய்க்கிற எண்ணெய், டூத் பேஸ்ட், சோப்பு இதுக்கெல்லாம் ஜி.எஸ்.டி போடலாமா?”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“ஆல்ரெடி 18 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டாச்சே ஜி.”

“அதைவிடச் சின்ன பொருளு ஏதாவது இருக்கா... ஆங்ங்... வைரத்துக்கு ஜி.எஸ்.டி போடலாமா?”

“0.25 விழுக்காடு ஜி.எஸ்.டி-யைத்தானே 1.5 விழுக்காடு ஜி.எஸ்.டி-யா ஏத்தினோம். பணக்காரங்கல்லாம் பாவம் இல்லையா ஜி?”

“அப்ப வைரத்தோட சேர்த்து அப்பிடியே நம்ம Poet தனுஷ், சிவகார்த்திகேயன், ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் சிவனுக்கும் ஜி.எஸ்.டி போட்ருவோமா?”

“சின்னப்புள்ளத்தனமா பேசாதீங்க ஜி...”

“அப்ப சின்னப்புள்ளைக யூஸ் பண்ற பொருள்களுக்கு ஜி.எஸ்.டி போட்ருவோமா?”

“ஜி மறந்துட்டீங்களா... பென்சிலுக்கு ஜி.எஸ்.டி போடுறீங்களேன்னு மோடியைத் திட்டி ஒரு ஸ்கூல் பாப்பா போன வாரம் லெட்டர் ஒண்ணு போட்டுச்சுல்ல... அந்தப் பாப்பாவை ஊக்கப்படுத்தும்விதமா அட்லஸ், மேப், இங்க், சார்ட்டுக்கெல்லாம் போன வாரம்தானே 12% ஜி.எஸ்.டி ஏத்துனோம்?”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“நாம ஏன் திண்டுக்கல் லியோனி தலைமையில

‘ஜி.எஸ்.டி சமூகநீதி கண்காணிப்புக்குழு’னு ஒண்ணு ஆரம்பிக்கக் கூடாது?”

ஆகஸ்ட் 27 செய்தி: ``மும்பை - ராய்ச்சூர் ரயிலில் தன் சக பயணிகளிடம் உரையாடினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

ஆகஸ்ட் 29 செய்தி: ``முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்துசெய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“பாத்தியாடி உன் புள்ளைய... `உன்னைப் பெத்ததுக்கு சுடுகாட்டுல போய் நானே படுத்துக்குறேன்’னு சொல்றேன். `புது சுடுகாடு கட்டுமான ஒப்பந்தங்களுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டிருக்காங்க. கட்டுப்படியாகாது. அதனால, பழைய சுடுகாட்டுல போய் படுத்துக்கோங்க’ன்றான்டி உன் புள்ள.”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“ஒரு சின்ன கற்பனை...

விக்ரம் போடுற ஒவ்வொரு கெட்டப்புக்கும் 18 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டா எவ்ளோ வரிவருவாய் வருதுனு பார்ப்போம்...

ஆடி முடிஞ்சு ஆவணி ஆரம்பிச்ச மய்க்கா நாளே கல்யாணப் பத்திரிகையைத் தூக்கிட்டு வர்றவங்களுக்கு 23 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டா எவ்ளோ வரிவருவாய் வருதுனு பார்ப்போம்... அந்தமான் டு நாக்பூருக்கு ‘புல்புல் பறவை’ல படுக்கை வசதி பெட்டியில டிராவல் பண்றவங்களுக்கு 13 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டா எவ்ளோ வரிவருவாய் வருதுனு பார்ப்போம்...

தி.மு.க அரசு அமைக்கிற கண்காணிப்புக்குழுக்களுக்கு 10 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டா எவ்ளோ வரிவருவாய் வருதுனு பார்ப்போம்...

விஜய் சேதுபதி கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுக்குற ஒவ்வொரு படத்துக்கும் 96 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டா எவ்ளோ வரிவருவாய் வருதுனு பார்ப்போம்.

ஜி.எஸ்.டி வரி விதிப்புகளால மாநிலங்களோட வருவாய் உயர்ந்திருந்தா எப்பிடி இருக்கும்னு ஒரு பெரிய கற்பனை பண்ணிப் பார்ப்போம்...”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“இனி பன்னீருக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி போடுறோம்.”

“அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம். யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக்கொள்வோம். `யார் வந்தாலும்’ என்ற வார்த்தையில் சின்னம்மாவும், டி.டி.வி-யும், நீங்கள் சொல்லும் ஜி.எஸ்.டி-யும் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி-க்கும் அழைப்பு கொடுப்போம்.”

“இது சமையல் பனீர் இல்லை... நம்ம சமர்த்து பன்னீர்.”

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி

“பங்காளி, ரிசப்ஷனுக்கும் இருந்துட்டுப் போ.”

“எதுக்கு... நான் அப்பிடியே உசிலம்பட்டி பஸ்ஸைப் புடிச்சு, என் மச்சுனன் சேகரு கல்யாணத்துக்குப் போகணும். மச்சுனன் கல்யாணத்துக்கு மொத ஆளாப் போனா 18% ஜி.எஸ்.டி-யாம். அதான் லேட்டாப் போறேன். அங்கருந்து பெரியகுளம், கொட்டாம்பட்டினு நாம டாப்படிக்கிற பயலுவ ரெண்டு பேத்துக்குக் கல்யாணம். நான் மட்டும்தான் போறேன். பொண்டாட்டி புள்ளைகளைக் கூட்டிட்டு கல்யாணத்துக்கு போனா 45% ஜி.எஸ்.டி போட்ருவாக. அதை முடிச்சுட்டு, அடுத்தாப்ல பரமக்குடியில நம்ம பாண்டி மவனுக்குக் காதுகுத்து. காதுக்கு 14%, அதைக் குத்துறதுக்கு 28% ஜி.எஸ்.டி-யாம். மொத்தம் ரெண்டு காதுக்கும் சேர்த்து 84% ஜி.எஸ்.டி-யாம். மொதப் புள்ளைக்கு ரெண்டு காது குத்துனான். இந்த வட்டம் கையில காசு இல்லை. ஒரு காதுதான் குத்துறானாம். அன்னைக்குனு பார்த்து மருது பய இருக்கான்ல... நம்ம வத்ராயிப்புக்காரன்... அவன் மகளுக்கு மொதப் பொறந்தநாளு ஃபங்ஷன். ‘நீங்கல்லாம் பொறந்ததே அநாவசியம், இப்பப் பொறந்தநாளு அத்தியாவசியமாக்கும்?’னு கேட்டு, பொறந்தநாளு ஃபங்ஷனுக்கு 35% ஜி.எஸ்.டி போட்டுட்டாங்களாம். அதுக்குத் தலையைக் காட்டிட்டு வரணும். அப்புறம் அப்பிடியே ராசபாளையம், சிவகாசி, மானாமதுரைனு காலேஜ் பயலுவ கல்யாணம், பால் காச்சுனு வேற நாலஞ்சு இருக்கு. திருப்பி மதுரை வர மூணு மாசமாவது ஆகும். சரி பங்காளி வர்றேன். கண்டிப்பா உன் புள்ள காது குத்துக்கு முன்ன வந்துருவேன். மொட்ட அடிப்பல்ல... முடியே இல்லாத மண்டைல மொட்டையடிச்சா 12%-தான் ஜி.எஸ்.டி-யாம். கவலப்படாதே!

பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள டெம்ப்ளேட்டுகளுக்கு 12 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையை வாசித்துவிட்டு புன்னகையரசி சினேகாவைப்போல சிரிப்பவர்களுக்கு 5 விழுக்காடு வரியும், நரசிம்ம ராவ்போல சிரிப்பவர்களுக்கு 15 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படும்.

குமரிமுத்துவைப்போல சிரிப்பவர்களுக்கு, ஜி.எஸ்.டி வரிவிலக்கு தரப்படும். மாறாக, குமரிமுத்து தரப்பிடம் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும்.