Published:Updated:

தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!

தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!
பிரீமியம் ஸ்டோரி
தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!

- ரோலக்ஸ், ஓவியங்கள்: சுதிர்

தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!

- ரோலக்ஸ், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!
பிரீமியம் ஸ்டோரி
தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!

ஒற்றைத் தலைமை பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், ``அ.தி.மு.க-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே நீடிக்கும்’’ என்று தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம். “தீர்ப்பு சாதகமாக வந்தால், மறுபடியும் ஆட்சிக்கு வந்த மாதிரி சிரிக்கணும்... பாதகமானால், ‘அம்மா’ செத்த மாதிரி அழணும்... அப்பதான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் மனசுல இடம்பிடிக்க முடியும்” என்ற திட்டத்தோடு இருவர் வீட்டிலும் கூடியிருந்தார்கள் அவர்களின் ஆதரவு நிர்வாகிகள். தீர்ப்பு வெளியான பிறகு ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, “அடுத்த என்ன செய்யலாம்?” என மிகத் தீவிரமாக ஆலோசனையும் செய்தார்கள். ஒவ்வொருவர் மனசுக்குள்ளும் வெவ்வேறு கணக்குகள். இரண்டு முகாம்களிலும் அப்போது என்னென்ன நடந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா?!

ஜெயக்குமார்: அண்ணே... அவர் (ஓ.பி.எஸ்) அம்மா சமாதிக்குப் போறாராம். பிரஸ்ஸையும் பார்க்கப் போறதாச் சொல்றாங்க. நாம வேணா அட்வான்ஸா ஒரு பிரஸ் மீட்டைப் போட்டுருவோமா... தொண்டர்கள் சோர்ந்துடப் போறாங்க.

எடப்பாடி பழனிசாமி: (பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு) ஏங்க இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு... நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க... இதெல்லாம் ரொம்பத் தப்புங்க... (திடீரென குரலை உயர்த்தி) இனிமே நீ மைக்கைத் தொட்ட... (எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தமிழ்மகன் உசேன் என்ட்ரி ஆகிறார்)

தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!

ஜெயக்குமார்: வாங்க நிரந்தர அவைத்தலைவரே... (எகத்தாளச் சிரிப்பு) எனக்கு அல்வா கொடுத்துட்டு எவ்ளோ நேக்கா உங்களை உட்காரவெச்சாங்க, அனுபவிங்க எல்லாரும்... கூட்டத்துல சண்முகத்தை வேற ஆளக் காணோம்... ‘ரத்து செய்றோம்... ரத்து செய்றோம்’னு என்னா சவுண்டு... இப்ப எல்லாத்தையும் ரத்து செஞ்சுட்டாய்ங்கல்ல மொத்தமா?! (மறுபடியும் சிரிப்பு).

சி.வி.சண்முகம்: டி.ஜே... கடுப்பைக் கிளப்பாம, கொஞ்ச நேரம் கம்முன்னு இருய்யா... நானே அடுத்து ‘லீகலா’ என்ன பண்ணலாம் யோசிச்சுட்டு இருக்கேன்... இந்த நேரத்துல...

ஜெயக்குமார்: (சிரிப்பை அடக்க முடியாமல்) எதுங்க லீகலா... 23-ம் தேதி பொதுக்குழுக்கு 20-ம் தேதியே கையெழுத்து வாங்கி கோர்ட்டுல மாட்டிக்கிட்ட மாதிரியா?

எடப்பாடி பழனிசாமி: (தன் பங்குக்கு எகிறுகிறார்) நல்லா யோசிச்சீங்க, போங்க... இன்னும் பொதுக்குழு, சிறப்புப் பொதுக்குழு, சிறப்பு சிறப்புப் பொதுக்குழுன்னு... பொதுக்குழு நடத்தியே என் சம்பாத்தியமெல்லாம் கரைஞ்சுபோயிடும் போலயே...

கே.பி.முனுசாமி: பொதுக்குழு மேடையிலேயே, ‘பொறுப்பா சண்முகம்...’னு சொன்னாக் கேட்டாத்தானே... வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியைப் போட்டு உடைச்ச கதையா ஆகிப்போச்சு... இதுக்குத்தான் பெரியவங்க பேச்சைக் கேட்கணும்னு சொல்றது...

சி.வி.சண்முகம்: எனக்கு என்னமோ இவர் மேலதான் சந்தேகமா இருக்கு... தி.மு.க ஸ்லீப்பர்செல்லா இருப்பாரோன்னு... குவாரி, கீரின்னு வேற பேச்சு அடிபடுது... முதல்ல இவரைக் கட்சியைவிட்டுத் தூக்கணும் பொதுச் செயலாளரே... (என எடப்பாடி பழனிசாமியை நோக்கிக் கத்த)...

எடப்பாடி பழனிசாமி: ஏங்க நீங்க சும்மாச்சும்மா டென்ஷனாகாதீங்க... உங்களை நம்பி நான்... பல கோடி ரூபா கான்ட்ராக்டுங்க...

(ஆர்.பி.உதயக்குமார் என்ட்ரி ஆகிறார்).

ஜெயக்குமார்: வாங்க எதிர்க்கட்சித் துணைத் தலைவரே... எல்லாப் பொறுப்பையும் திரும்பவும் மூணு சாதிக்காரங்களே எடுத்துக்கிட்டு என்ன ஆட்டம் போட்டீங்க?

கோகுல இந்திரா: ஆமா... ஆமா... நாம இவருக்கு (பழனி) எவ்ளோ கஷ்டப்பட்டு முட்டுக் கொடுக்குறோம்... ஆனா பதவி மட்டும்... அதுகூடப் பரவாயில்லை... நாமளும்தான் சட்டம் படிச்சிருக்கோம்... ‘லீகல் ஒப்பீனியன்’கூடவா கேட்கக் கூடாது?

செல்லூர் ராஜூ: (உதயகுமார் நெளிவதை ரசித்தபடியே...) இதுக்குத்தான் நாம எப்பவுமே அவசரப்பட்டு வாயை விடுறதில்லை.

வளர்மதி: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே... ஒரு தலைவன் இருக்கிறான்...

சி.வி.சண்முகம்: ஏங்க பொதுக்குழுக் கூட்டத்துல இந்த அம்மா இப்பிடி பாடுனதுதாங்க பிரச்னை. என் மண்டைக்குள்ள குருவி `குய்யு’ன்னு கத்த, நான் கோபப்பட்டு கத்த... ஸ்ஸப்பா... இனிமேலாவது இந்த அம்மாவைச் சும்மா இருக்கச் சொல்லுங்க... இடைக்காலம்... (என எடப்பாடியை நோக்கி மீண்டும் கத்துகிறார்.)

எடப்பாடி பழனிசாமி: (கோபத்தை அடக்கிக்கொண்டு...) அண்ணே வெளியில போய் என்ன பேசணும்னு இதுல தெளிவா எழுதியிருக்கு... இதைத் தவிர வேறு எதுவும் பேசிடாதீங்க. அடிச்சுக்கூட கேட்பாங்க... அப்பவும் பேசிடாதீங்க (என்றபடி கே.பி.முனுசாமியிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறார்.)

தமிழ்மகன் உசேன் (மைண்ட் வாய்ஸ்): இதே மாதிரிதானே பொதுக்குழுவுல நம்மகிட்டயும் ஒரு சீட்டைக் கொடுத்தாரு... திரும்பவும் முதல்ல இருந்தா...

(எடப்பாடி கடுகடுப்போடு சுற்றிவர, இன்னொரு முகாமில் ஓ.பி.எஸ் சிரித்த முகத்தோடு வீட்டைவிட்டு வெளியில் வருகிறார்...)

வைத்திலிங்கம்: என்ன அண்ணே முகத்துல தேஜஸ்லாம் ஒரு இஞ்ச் கூடியிருக்கு... அதிரடியா ஏதோ செய்யப் போறீங்கபோல?

ஓ.பி.எஸ்: ஆமா, நான் முடிவெடுத்துட்டேன்.

ஜே.சி.டி., கோவை செல்வராஜ்: (பதறியபடி, ஒரே குரலில்) என்ன முடிவுண்ணே?

தாய் வழி வந்த... தங்கங்கள் எல்லாம்... ஓர் வழி நின்று!

ஓ.பி.எஸ்: (தன் டிரேட் மார்க் சிரிப்புடன்) தாய்வழிவந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று...

கோவை செல்வராஜ் (மைண்ட் வாய்ஸ்): ஆஹா திரும்பவும் ஒண்ணு சேர்றதுக்கு பிளான் போட்டாருபோல... நம்ம வாய் வேற சும்மா இல்லாம நிறைய பேசிடுச்சே... (என ஜே.சி.டி-யை நோக்கித் திரும்ப, அவர் முகத்திலும் அதே பீதி.)

மனோஜ் பாண்டியன்: இந்தத் தீர்ப்பு முழுமையா நமக்கு ஃபேவரான தீர்ப்புன்னு சொல்ல முடியாது... சட்டச் சிக்கல்களும் இருக்கு... (என அண்ணனின் ஆர்வத்துக்கு அணைபோட முயல்கிறார்.)

ஓ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): கரைஞ்ச கரன்சியெல்லாம் போதாதா... (மீண்டும் ஒரு மந்தகாசப் புன்னகை)

வைத்திலிங்கம்: சரி... நீங்க ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க. ஆனா போன முறை மாதிரி நீங்க மட்டும் இரட்டைத் தலைமையா இருந்தா... ஈஸியா உங்களை ஓரங்கட்டிடுவாங்க... இந்த முறை கூட்டுத் தலைமைன்னு சொல்லுங்க... (என தன்னை சேஃப்டி பண்ணிக்கொள்வதற்கான ஐடியாவை நைஸாக எடுத்துவிடுகிறார்.)

ஓ.பி.எஸ்: அம்மா சமாதிக்கு வண்டியை எடுங்க... நான் முடிவு பண்ணிட்டேன்.

என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘குறியீடாக’ அவர் தோளில் வந்தமர்கிறது ஒரு வெள்ளைப்புறா. “அதானே இவர் என்னைக்கு வீரமா முடிவெடுத்தார்?” என்று ஏமாற்றத்துடன் நிர்வாகிகள் பார்க்க, கார் விரைகிறது!