Published:Updated:

இது அரசியல் ஐ.பி.எல்!

இது அரசியல் ஐ.பி.எல்!
பிரீமியம் ஸ்டோரி
இது அரசியல் ஐ.பி.எல்!

ஓவியங்கள்: ராஜா

இது அரசியல் ஐ.பி.எல்!

ஓவியங்கள்: ராஜா

Published:Updated:
இது அரசியல் ஐ.பி.எல்!
பிரீமியம் ஸ்டோரி
இது அரசியல் ஐ.பி.எல்!
தேர்தல் பரபரப்பிற்கு இணையாகத் தகித்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் களமும். சாம்பியன் அணியான மும்பை, இந்தமுறை அடிக்கடி சொதப்ப, சி.எஸ்.கே ப்ளே ஆப் போகுமா என்கிற கேள்விகள் துரத்த, ராஜஸ்தான் திடீரென ஜெயிக்க எனக் கணிக்க முடியாத கலாட்டாக்கள் தினமும் அரங்கேறுகின்றன. அதோடு சேர்த்து நம்மூர் அரசியல்வாதிகளை வைத்து ஒரு ஐ.பி.எல் டீம் உருவாக்கினால் எப்படி இருக்கும் என யோசித்தால் அது மோடிஜீயின் போராட்டப் பராக்கிரமக் கதைகளைவிட ஜாலியாய் இருக்கிறது. அந்த ஐ.பி.எல் அணி இதோ...
இது அரசியல் ஐ.பி.எல்!

யோகி தி ப்ளாஸ்டர்:

இவர் இறங்கினால் அமைதிப் பூங்காவான தமிழகத்திலேயே கல்லெறி பறக்கிறது. கிரிக்கெட் பந்து பறக்காதா என்ன? கொள்கைகளாகட்டும், செயல்படும் முறையிலாகட்டும் கொஞ்சமும் லாஜிக் பற்றிக் கவலைப்படாத இவரைப்போல ஒருவர்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் இறங்கி அடிக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருக்கமுடியும். அடிக்கும் பவுண்டரி, சிக்ஸுக்கு விசிலடிக்க ஆள்களையும் அவரே இறக்குவார். அதெப்படி? ஐ.பி.எல்லுக்குப் பார்வையாளர்களே கிடையாதே என்கிறீர்களா? தமிழ்நாட்டுல கூட்டம் போட்டாலே அவர் கட்சிக்கு ஆள் சேராது. ஆனாலும் கோயம்புத்தூர்ல சம்பவம் செய்யல? அந்த மாதிரிதான் பாஸ்!

இது அரசியல் ஐ.பி.எல்!

அதிரடி அண்ணன்:

சொல்லப்போனால் முன்பொருமுறை, தமிழ்நாட்டு கிரிக்கெட் டீமையும் இந்தியநாட்டு கிரிக்கெட் டீமையும் உருவாக்கி மோதவிடுவேன் என வீரமாய் அண்ணன் உரைத்தாரே... அதன் மீள்நீட்சிதான் இது. அப்புறம் அவரே இல்லாமல் எப்படி? இடிச்சிரிப்போடு அண்ணன் களத்துக்குள் வந்தாலே பௌலர்களுக்கு வெலவெலக்கும். ‘குமரிக்கண்டத்தின் வடமுனைத் தொல்குடி ‘பெருங்கிணறு’ (மேக்ஸ்வெல்... மேக்ஸ்வெல்) வீசிய வெள்ளைப் பந்தை மடக்கி நான் அடித்த அடியில் அது சிங்களப்படையின் சிறுகப்பலைச் சாய்த்தது’ எனப் போட்டிக்குப் பின் அண்ணன் கொடுக்கும் பேட்டிக்காகவே பார்வையாளர்கள் குவிவார்கள். அப்புறம் மேட்ச் ஆடினால் என்ன, ஆடாவிட்டால் என்ன?

இது அரசியல் ஐ.பி.எல்!

இளைய தளபதி:

மூன்றாம் தலைமுறை வீரர். சேப்பாக்கத்தில் மேட்ச் வைத்துக்கொண்டு இவரில்லாமல் எப்படி? ஒன்டவுன் இறங்குவதோடு அணியின் விக்கெட் கீப்பரும் இவர்தான். ஸ்டம்பிற்குப் பின்னால் இருந்து இவர் அடிக்கும் நக்கல் கமென்ட்களுக்கு பதில் சொல்லவே எதிரணிக்கு டயர்டாகிவிடும். பின்னர் எங்கிருந்து அடித்து ஜெயிப்பதெல்லாம்? அணியின் ஆலோசகர் பி.கேவும் இவருக்கு உற்ற நண்பர் என்பதால் அடுத்து யார் பௌலிங் போடுவது, பீல்டில் ஆள் செட் செய்வது போன்ற வியூகங்களை கேப்டனோடு இணைந்து வகுப்பதும் இவரே.

இது அரசியல் ஐ.பி.எல்!

டபுள்சைடு சுதீஷ்:

தெருவில் விளையாடும்போது எல்லா ஆட்டத்திலும் டபுள்சைடு ஒருவர் இருப்பாரே... அப்படி ஆடி ஆடி அணிக்குள் வந்தவர் இவர். இவரின் அதிகபட்ச ஆசையே டெல்லியில் ஒரு மேட்சாவது ஆடிவிடவேண்டும் என்பதுதான். அதனால்தான் மற்ற நேரங்களிலெல்லாம் ரிப்பேரான பழைய ப்ளேஸ்டேஷனைப் போல தேமேவென இருப்பவர் மார்ச், ஏப்ரல், மே சீசனில் மட்டும் பாரீனிலிருந்து இறக்குமதியான காஸ்ட்லி கார் போல வேகம் காட்டுவார். இவர் இருப்பது அணிக்கு பலமா பலவீனமா என்பது அணியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே தெரியாது என்பதுதான் காலத்தின் சோகம்.

இது அரசியல் ஐ.பி.எல்!

மய்ய மைந்தர்:

அரசியலில் மட்டுமல்ல, அணியிலும் இவர் மிடில் ஆர்டர்தான். அணியின் இரண்டு பாதிகளையும் இணைப்பதால் இவரே கேப்டன். வெஸ்ட் இண்டீஸின் டேரன் சமி போல, சி.எஸ்.கேவின் தோனி போல வயது, அனுபவம் காரணமாகவே டீமில் இருப்பவர். போட்டிக்கு முன் பில்டப்களோடு பயிற்சி எடுப்பதை டீசர்களாக வெளியிடுவார். போட்டிக்குப் பின்னான பிரஸ்மீட்களை மணிக்கணக்கில் நடத்தி, பேட்டி எடுப்பவர்களை டயர்டாக்கி அடுத்த போட்டிக்குக் கேள்வி கேட்க ஆளில்லாமல் செய்வது இவரின் ஸ்டைல்.

இது அரசியல் ஐ.பி.எல்!

ஆல் இன் ஆல் ராகுல்:

கட்சியின் முகமாய் வெளியே மாநிலம் மாநிலமாய் அலைவது, கட்சிக்குள் கோஷ்டிகள் கொடுக்கும் உள்குத்துகளையெல்லாம் சமாளிப்பது, இதற்கு நடுவே அடிக்கடி காணாமல்போகும் கையைத் தோண்டி எடுப்பது என ஏகப்பட்ட வேலைகள் பார்க்கும் இவரே அணியின் ஆல்ரவுண்டர். பவுண்டரி லைனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு திடீர் திடீரென காணாமல் போய்விடுவார். அதனாலேயே எதிரணி நிறைய நேரங்களில் ஸ்கோர் செய்துவிடும். இரண்டு பந்துகள் மீடியம் பாஸ்ட்டாகப் போட்டுவிட்டு அடுத்த இரண்டு பந்துகள் ஆடியன்ஸ் விருப்பத்திற்காக ஸ்பின் போடும் எகிடுதகிடு வீரர்.

இது அரசியல் ஐ.பி.எல்!

மணி தி மிஸ்ட்ரி ஸ்பின்னர்:

லெக்ஸ்பின் என நினைக்கும்போது கூக்ளி போடுவது, ஆப் ஸ்பின் எனச் சொல்லிவிட்டு தூஸ்ரா எறிவது என சின்னய்யா எப்போது எந்தப்பக்கம் திரும்புவார் என்பது அவருக்கே வெளிச்சம். போதாக்குறைக்கு ‘அப்பா சொன்னாருங்க’ என எக்குத்தப்பாக எதையாவது செய்துவிட்டு கண்ணைக் கசக்குவார். ‘என்னை ஒரே ஒருதடவை கேப்டனாக்குங்க’ என பேன்டஸி லீக் ஆடுபவர்களிடமெல்லாம் மன்றாடுவார். ஆனால் அவர்கள் கடைசிவரை சின்னய்யாவை என்னத்த கண்ணையாவாகவேதான் டீல் செய்வார்கள்.

இது அரசியல் ஐ.பி.எல்!

சூப்பர் ஸ்பீடு சுப்ரீம் ஸ்டார்:

கூட்டணிக்கு அதிமுக ஆபீஸிலிருந்து ஆண்டவர் ஆபீஸுக்குப் பாய்வதாகட்டும், கொடுத்த சீட்டைத் திருப்பிக்கொடுப்பதாகட்டும் சுப்ரீம் ஸ்டார் எப்போதுமே மின்னல் வேகம்தான். அதனால் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரும் இவர்தான். பெவிலியனிலிருந்து சித்தி ஒவ்வொரு பந்துக்கும் ‘இன்ஸ்விங் போடுங்க, லெக் கட்டர் போடுங்க’ எனக் கட்டளைகள் கொடுக்க, அதைக் கனக்கச்சிதமாக நிறைவேற்றுவார். பெண்கள் ஐ.பி.எல்லில் சித்தியை ஒரு அணிக்காவது கேப்டனாக்கிவிட வேண்டும் என்பதுதான் இவரின் அதிகபட்ச ஆசை.

இது அரசியல் ஐ.பி.எல்!

சும்மாவே இருக்கும் சாமி:

சி.எஸ்.கேவில் கேதர் ஜாதவ், ஆர்.சி.பியில் டேன் க்றிஸ்டியன்... இவர்களெல்லாம் ஏன் ப்ளேயிங் லெவனில் இருந்தார்கள், இருக்கிறார்கள் என யாருக்குமே தெரியாது. அரசியலில் சுப்ரமணியன் சுவாமி அப்படித்தான். ஏன், எதற்கு, எப்படி இருக்கிறார் என நவீன அறிவியலில் நம்மைவிடப் பல அடிகள் முன்னேறிய ஏலியனுக்கும் தெரியாது. அவ்வப்போது எதிரணிக்கும், சிலசமயம் சொந்த அணிக்குமே சூனியம் வைப்பார் என்பதால், பரபரப்பிற்காக டெல்லி வீரரான இவர் அணியில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.

இது அரசியல் ஐ.பி.எல்!

ரன்னர் ரங்கசாமி:

அணியில் இருக்கும் நான்காவது வெளிமாநில வீரர். ‘உன் ஆளைப் பார்த்தா ஊரே பயப்படும். ஆனா என் ஆளைப் பார்த்தா எனக்கே பயம்’ ரக வீரர் இவர். ‘பௌலிங்கும் நானே போட்டு பேட்டிங்கும் நானே பண்ணவா?’ எனத் தேர்தலில் இரண்டு தொகுதிகள் போட்டியிடும் பழக்கத்திலேயே களத்திலும் சேட்டைகள் செய்வார். ஏலம் தொடங்கி நெட் ப்ராக்டீஸ் வரை எதிலும் கலந்துகொள்வதில்லை. ‘நடிச்சா ஹீரோதான் சார்’ என நேரடியாக கிரவுண்டுக்குள் வந்துவிடுவார். ‘சேப்பாக்க சேவாக்கே, வான்கடேயின் வாஷிங்டன் சுந்தரே’ என இவர் வருவதற்கு முன்பே பேனர்கள் மட்டும் வந்துவிடும்.

இது அரசியல் ஐ.பி.எல்!

டெல்டா எக்ஸ்பிரஸ்:

சென்னைக்கு ஒரு பராசக்தி எக்ஸ்பிரஸ் போல, இந்த டீமுக்கு ஒரு டெல்டா எக்ஸ்பிரஸ் ஜி.கே.வாசன். பொதுவாகவே ஸ்பின்னர்களுக்கு பௌலிங் போடுவதைத் தவிர வேறு வேலையில்லை.பேட்டிங், ஃபீல்டிங் என எதிலும் அவ்வளவாகப் பார்க்கமுடியாது. அப்படி ஒரு அமைதிதான் நம்மவரிடமும். ‘ஆமால்ல, இவர் வேற அரசியல்ல இருக்காருல்ல’ என்பதுதான் இவரின் இன்ட்ரோவின் போது நமக்கு எப்போதும் தோன்றும். அதனாலேயே கடைசி ஆளாக அணியில் இணைகிறார் இவர்.