Published:Updated:

அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!

அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!
பிரீமியம் ஸ்டோரி
அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!

மாணவர்கள் தங்களுடைய பிறந்தநாள் விழாவை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கேக் வெட்டலாம், கலர் கலராக பேப்பர் கொடி கட்டலாம்,

அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!

மாணவர்கள் தங்களுடைய பிறந்தநாள் விழாவை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கேக் வெட்டலாம், கலர் கலராக பேப்பர் கொடி கட்டலாம்,

Published:Updated:
அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!
பிரீமியம் ஸ்டோரி
அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!

மோடி ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாத்தோம். அங்க என்னென்ன காமெடிகள் நடக்குதுன்னு நீங்களே பாருங்க..!

ஆதார் கார்டுடன் மாணவர்களின் ஸ்கூல் ஐ.டி கார்டு, ரேங்க் கார்டு மட்டுமல்ல, ரெக்கார்டு நோட், ஹோம் ஒர்க் நோட், அவ்வளவு ஏன்... ரஃப் நோட் என எல்லாவற்றையும் இணைக்க வேண்டும். முடிந்தால், மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் விளையாட வைத்திருக்கும், WWE கார்டு, கிரிக்கெட் கார்டையும் ஆதார் கார்டுடன் இணைப்பவர்களுக்கு போனஸ் மதிப்பெண் உண்டு.

தேர்வில் பிட் அடிச்சு பாஸ் ஆகும் மாணவர்களைக் கண்டுபிடிக்கவும், இனி அவர்கள் பிட் அடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுடைய மதிப்பெண்களும் செல்லாத மதிப்பெண்களாக அறிவிக்கப்படும். இதன் வழியாக, பிட் அடிச்சு பாஸ் ஆன மாணவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட முறைகேடான மதிப்பெண்கள், வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தலா 15,000 மதிப்பெண்களாகப் பிரித்துத் தரப்படும்.

பள்ளிக்குத் தாமதமாக வந்தால் அபராதத்துடன் சேர்த்து ஜி.எஸ்.டி-யும் விதிக்கப்படும். உதாரணமாக, ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் 5% ஜி.எஸ்.டி-யும், 10 நிமிடம் தாமதமாக வந்தால் 10% ஜி.எஸ்.டி-யும் விதிக்கப்படும். இதற்கும் மேல் தாமதம் ஆகும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1% வரி கூட்டப்படும்.

அட்டென்ஷன்... இது மோடி ஸ்கூல்!

‘பொது' என்ற வார்த்தைக்கு பள்ளியில் முற்றிலும் தடை. பொதுக்கழிப்பறைக்குப் பதிலாக தனியார் கழிப்பறை, அரையாண்டு பொதுத்தேர்வுக்குப் பதிலாக, அரையாண்டு தனியார் தேர்வு என எழுதப்பட்டிருக்கும்.

வகுப்பறையில் இருக்கும்போது, ஒரு மாணவருக்குக் காய்ச்சல் வந்தால், பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து, சாப்பாட்டுத் தட்டைக் கரண்டியால் தட்டிக்கொண்டே, ‘கோ காய்ச்சல் கோ... கோ காய்ச்சல் கோ... கோ காய்ச்சல் கோ...' எனப் பாட்டு பாடுவார்கள். அந்தக் காய்ச்சலுக்கே கதி கலங்கி, கண்ணம்மாபேட்டைச் சுடுகாட்டில் போய்ப் படுத்துக்கொள்ளும்.

மாணவர்களுடைய பெயர் அமைந்தகரை அம்பானி, அம்மாப்பேட்டை அதானி, கார்ப்பரேட் கோபால், ரிலையன்ஸ் ரித்விகா, ஜியோ ஜானகிராமன் என இருந்தால், அவர்களுக்குப் பள்ளிக்கட்டணம் முற்றிலும் இலவசம். அதேநேரம், நெல்லிக்குப்பம் நேரு, ராக்போர்ட் ராகுல், மன்னார்குடி மம்தா எனப் பெயர் வைத்திருந்தால், கண்டிப்பாக அட்மிஷன் கிடையாது.

பத்திரிகையாளர்களைப் பார்ப்பது மட்டுமல்ல, தினசரிப் பத்திரிகைகளைப் படிப்பதற்கேகூட மாணவர்களுக்குத் தடை.

சேட்டை செய்யும் மாணவர்களின் பெஞ்ச், நோட்டு புத்தகங்கள் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளப்படும்.

டாய்லெட் சுவரில் ஆசிரியர்களைப் பற்றி அவதூறாக எழுதுவது பள்ளியின் மொழிச் சட்டப்படி தவறு. அதேநேரம், இந்தி மொழியில் எழுதினால் மட்டும், அச்செயல் ‘இந்தி மொழி மேம்பாட்டு சேவை' என அங்கீகரிக்கப்பட்டு, காலையில் நடக்கும் அசெம்பிளியில் வைத்து பாராட்டுச் சான்றிதழோடு, கூடுதலாக மை, அடுப்புக்கரி போன்றவை அன்பளிப்பாக வழங்கப்படும்.

மாணவர்களுக்குக் கோடைக்காலச் சுற்றுலா உண்டு. காஷ்மீர் பனிமலைகள், கேரளப் படகுப் பயணம், கொல்கத்தா ஹௌரா பிரிட்ஜ், வடகிழக்கு குளுகுளு மலைகள் என மாணவர்கள் போக ஆசைப்பட்டாலும், குஜராத் சபர்மதி ஆசிரமம், உத்தரப் பிரதேச கங்கை நதிக்கரைகள், உத்தரகாண்ட், பெங்களூரு போன்ற இடங்களுக்குத்தான் கூட்டிச் செல்வார்கள். இனி, கோவா கடற்கரை, மகாராஷ்டிரா மந்திர்களுக்கும் (கோயில்கள்) கூட்டிச் செல்ல திட்டம் இருக்கும்.

மாணவர்கள் தங்களுடைய பிறந்தநாள் விழாவை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கேக் வெட்டலாம், கலர் கலராக பேப்பர் கொடி கட்டலாம், சீரியல் லைட் கட்டலாம், பலூன் உடைக்கலாம். ஆனால், ‘கறுப்பு பலூன்’, ‘கறுப்புக் கொடி'க்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்லி நோ.

தான் காதலிக்கிற பொண்ணுக்கு குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, தாமரைப் பூவைக் கொடுத்து ப்ரொப்போஸ் செய்தால், அது குஜராத் காதலாகக் கணக்கிடப்பட்டு, அந்த மாணவருக்கு க்ளாஸ் லீடர் பதவி தரப்படும். மாறாக, காஷ்மீர் ரோஜா, தமிழ்நாட்டில் விளைகிற மதுரை மல்லி போன்றவற்றைக் கொடுத்து ப்ரொப்போஸ் செய்தால், ‘உபா' எனச் செல்லமாக அழைக்கப்படுகிற உக்கிர பாலன் கணக்கு ஆசிரியரிடம் அந்த மாணவர் வலுக்கட்டாயமாக ட்யூஷன் சேர்த்து விடப்படுவார்.

வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட் போன்று, ‘ஒரே பள்ளி ஒரே வகுப்பு', ‘ஒரே பள்ளி ஒரே ஜாமெண்ட்ரி பாக்ஸ்', ‘ஒரே பள்ளி ஒரே பி.டி சார் பிரம்பு', ‘ஒரே பள்ளி ஒரே டாய்லெட் சுவர்' போன்ற வீக்லி, மன்த்லி திட்டங்களும் அதிரடியாக அறிவிக்கப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்படும்.

மாணவர்களின் கலைத்திறமையை வளர்க்கும் விதமாக, கங்கனா ரணாவத், அக்‌ஷய் குமார் ஆகியோரின் கலைப்படைப்புகள், வாரத்திற்கு ஒருமுறை திரையிடப்படும்.

ஒரு மாணவன் பள்ளிக்குத் தாமதமாக வந்து, ‘‘ஏன்டா லேட்?’’ என்று ஆசிரியர் கேட்டபோது, ஐந்தாறு வருடங்களுக்கு முன் அதே வகுப்பறையில் லீடராக இருந்தவனின் பெயரைச் சொல்லி ‘‘எல்லாத்துக்கும் அவன்தான் சார் காரணம்’’ என்று சொன்னான். அவன்தான் இப்போது பள்ளிக்கே மாணவர் தலைவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.